உலக தேனீக்கள் தினம் : அழிந்து வரும் தேனீக்கள்... காப்பாற்ற என்ன வழி...?

ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக கொண்டாடப்படுகிறது.

news18
Updated: August 17, 2019, 11:59 AM IST
உலக தேனீக்கள் தினம் : அழிந்து வரும் தேனீக்கள்... காப்பாற்ற என்ன வழி...?
உலக தேனீக்கள் தினம்
news18
Updated: August 17, 2019, 11:59 AM IST
தேனீக்களின் சுறுசுறுப்புக்கு மனிதனாலும் ஈடு கொடுக்க முடியாது. அது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. குறிப்பாக விவசயிகளுக்கு இவை செய்யும் உதவி அளப்பரியது. தேனீக்களின் வாழ்க்கை முடிகிறதெனில் உங்களுக்கான அழிவும் காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மறவாதீர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் .

ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டே அமெரிக்காவில் ஒவ்வொரு ஆகஸ்டு மாத மூன்றாவது வார சனிக்கிழமையை தேனீக்களின் தினமாக அறிவித்தனர். அந்தவகையில் 17-ம் தேதியான இன்று தேனீக்கள் தினத்தை உலகம் முழுவதும் அனுசரிக்கின்றனர். இந்த நாளில் தேனீக்களின் பாதுகாப்பு, வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது.
தேனீக்களை எப்படி பாதுகாப்பது என்பதைக் இங்கே காணலாம்.....

பூச்சிக்கொல்லி மருந்துகளை புறக்கணியுங்கள் : பூச்சிக்கொல்லிகளால் நீங்கள் அழிக்க நினைக்கும் பூச்சிகள் இறப்பது மட்டுமன்றி மகரந்தத்தை நுகர வரும் தேனீக்களையும் இறக்க வைக்கிறது. எனவே தோட்டம், விவசாயம் எதுவாயினும் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாக இயற்கை முறையை உரங்களை கடைபிடிக்கலாம். உதாரணமாக பூண்டு, வெங்காயம், உப்பு, மிளகாய், மிளகு , சோப், சிட்ரஸ் பழங்கள் என இவற்றின் சாறுகளை ஸ்ப்ரே போல் தெளிக்கலாம்.

தேனீக்களின் விருப்பமான மலர்கள் : தேனீக்கள் நுகர்வதற்கு ஏற்ற பூச்செடிகளை வளர்க்க முற்படுங்கள். இதனால் அவை பெருக ஆரம்பிக்கும். தேனீக்களின் வேலையும் இடைவிடாது நடக்கும்.

Loading...தேனீக்கள் பற்றிய விழிப்புணர்வு : வீட்டில் உள்ள அடுத்த தலைமுறைக் குழந்தைகளுக்கு தேனீக்களின் நன்மைகள் குறித்து கற்றுக்கொடுங்கள். அதன் வளர்ப்பு, அதன் தேவையின் முக்கியதுவத்தை உணர்த்துங்கள். இதனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறையும் இதைக் கற்றுக்கொண்டு வளர்க்க , பாதுகாக்க முன்வருவார்கள்.

தேனீக்களின் காப்பானாக இருங்கள் : பல இடங்களில் தேனீக்கள் கூடு கட்ட அதற்கு ஏற்ற சூழலை அமைத்துத் தருகின்றார்கள். அப்படி நீங்களும் தேனீக்கள் சூழ உதவுங்கள். இதற்காக உலகம் முழுவதும் பல அமைப்புகள், குழுக்கள் இருக்கின்றன. நீங்களும் குழு அமைத்து தேனீக்களை பாதுகாக்கலாம். அதனால் நன்மையும் அடையலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...