• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தேசிய நண்பர்கள் தினம் ; வாழ்த்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

தேசிய நண்பர்கள் தினம் ; வாழ்த்துகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Friend Day 2021

Friend Day 2021

1935 ஆம் ஆண்டு முதல் நெருங்கிய நண்பர்கள் தின நாள் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியமான நாளை நீங்கள் வீணடித்துவிட வேண்டாம்.

  • Share this:
ஆண்டுதோறும் ஜூன் 8 ஆம் தேதி தேசிய நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை அடிப்படையாகக் கொண்டு நண்பர்கள் தினமும், பெண் நண்பர்கள் தினமும் உருவானதான நம்பப்படுகிறது.

சிறந்த நண்பர்கள் தின நாளில் தொலைந்துபோன உங்கள் நட்பை புதுபித்துக்கொள்ளலாம். கால இடைவெளியில் திசைக்கு ஒரு பக்கமாக இருக்கும் நீங்கள், உங்களின் பழைய நினைவுகளை, அவர்களுடன் செலவிட்ட நேரத்தை, மறக்க முடியாத அனுபவங்களை மீண்டும் நினைத்து பார்த்து இன்புறலாம்.

அவர்கள் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை மகிழ்ச்சியாக கடத்தியதற்காகவும், உங்கள் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பதற்கும் நன்றி தெரிவிக்கலாம். கொரோனா போன்ற இந்த கடினமான காலத்தில் நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அவர்களை சந்திக்க முயற்சிக்கலாம். டெக்ஸ் மெசேஜ், GIF, வாழ்த்து மடல்களை கைப்பட எழுதி அவர்களுக்கு அனுப்பலாம்.

ALSO READ | யோகா செய்வதால் உடல் என்னென்ன நன்மைகள் பெறுகின்றன தெரியுமா?

நீண்ட நாள் தொடர்பில் இருந்து தொலைந்துபோனதற்கான காரணத்தையும், பிரிவுக்குப் பிறகு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். அன்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம், கண்ணீர் என அத்துனையும் இந்த ஒருநாளில் உங்களின் நெருகிய நட்புகளிடம் உரையாடும்போது பெறமுடியும். அவர்கள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியமானவர்கள்?, என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்?, அவர்களின் தேவையை எந்த சூழல்களில் எல்லாம் உணர்ந்திருக்கிறீர்கள்? என பட்டியலிடுங்கள். அன்பை பறிமாறிக்கொள்வதில் மட்டுமே ஆனந்தம் ஒளித்திருக்கிறது. ஒருவரின் மனதை படிக்க முடியும், நெருக்கத்தை உணரலாம்.

1935 ஆம் ஆண்டு முதல் நெருங்கிய நண்பர்கள் தின நாள் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியமான நாளை நீங்கள் வீணடித்துவிட வேண்டாம். நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்களை இப்போதே தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுக்கான வாழ்த்துகளை தெரிவித்து மகிழுங்கள். என்ன பேசுவது? எப்படி பேசுவது? என உங்களுக்கு தெரியவில்லை என்றால், கூகுளில் ஏராளமான மெசேஜ்களும், வாழ்த்து அட்டைகளும், வாட்ஸ் அப் ஸ்டிக்கர்களும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை பதிவிறக்கம் செய்து உங்களின் நெருங்கிய நட்புகளுக்கு அனுப்புங்கள்.

ALSO READ | வீட்டில் பிள்ளைகளுடனான நெருக்கத்தை அதிகரிக்க அப்பாக்கள் செய்ய வேண்டியவை..!

உங்களுக்காக சில மெசேஜ்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

1. உண்மையான நட்பு, இருளையும், வெளிச்சத்தையும் சரியாக தரம்பிரித்து காட்டும் என்பார்கள். அதனை நீ சரியாக செய்துள்ளாய் என நினைக்கிறேன். எனக்கு ஏற்பட்ட கடினமான காலத்திலும், மகிழ்ச்சியான தருணங்களிலும் உடனிருந்திருக்கிறாய். அது தொடர வேண்டும் என விரும்புகிறேன். இனிய நெருங்கிய நட்பு நாள் வாழ்த்துகள்.

2. திசை தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தபோது, ஏற்றிவிடும் ஏணியாக, வழி காட்டும் ஒளியாக இருந்த நண்பனே, நீ எனக்கு நட்பாக கிடைத்ததில் பெருமை கொள்கிறேன்.

ALSO READ | உங்கள் தந்தைக்கு என்ன கிஃப்ட் தரலாம்..? சூப்பரான சில யோசனைகள்..!

3. அழுதபோது தோள் கொடுத்தாய், பசித்தபோது உணவளித்தாய், என் வாழ்க்கை குறித்து என்னைவிட அதிக அக்கறை கொள்ளும் தூய்மையான இதயமே, உனக்கு என்னுடைய இனிய நெருங்கிய நட்பு நாள் வாழ்த்துகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: