முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

உணவு

உணவு

Immunity booster : நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் நல்லது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் கடந்த 3 ஆண்டுகளாகக் குறிப்பாக கொரோனா தொற்றிற்குப் பிறகு இம்யூனிட்டி என்ற வார்த்தையை அதிகளவில் கேள்விப்பட்டிருப்போம். ஆம் இம்யூனிட்டி அதாவது நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டின் காரணமாகத் தான் பாக்டீரியா, வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் அல்லது பிற நுண்ணுயிர்களால் ஏற்படும் தொற்று நம்மை எளிதில் தாக்குகிறது. எனவே இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு மண்டலம் நம் உடல் முழுவதும் பரவியிருப்பதால் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து எதிர்த்துப் போராட முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி

இதோடு நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க என்னென்ன உணவுகளைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும் என்று பட்டியலிட்டுள்ள நிலையில், அவை என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

இஞ்சி:

இஞ்சி

இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அதிகளவில் உள்ளதால் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவியாக உள்ளது. எனவே தினமும் சட்னி, சூப்கள், சாலட்கள், தக்காளி சாதம் போன்றவற்றில் இஞ்சியைச் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தினமும் காலையில் இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடிக்கும் போது வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதோடு உடலுக்கும் ஆரோக்கியம் தருகிறது.

தயிர்:

தயிர்

தயிரில் உள்ள வைட்டமின் டி போன்ற பிற சத்துக்கள் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கப் பெரிதும் உதவுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதை சாப்பாட்டுடன் சாப்பிடலாம் அல்லது தினசரி ஸ்மூத்தியில் தயிரை நீங்கள் சேர்த்துக் கொள்வது நல்லது.

பூண்டு:

பூண்டு

நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் உணவுகளில் ஒன்றாக உள்ளது பூண்டு. இதில் உள்ள ஜின்க், சல்பர், செலினியம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளது. எனவே உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் மறக்காமல் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Also Read : 50% புற்றுநோய் தொடர்பான இறப்புகளைத் தவிர்க்க முடியும் - ஆய்வில் வெளியான தகவல்!

சிட்ரஸ் பழங்கள்:

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்ச் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. பொதுவாக வைட்டமின் சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இதோடு இயற்கையாகவே சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்துப்போராடும் தன்மை இந்த சிட்ரஸ் பழங்களுக்கு உள்ளதால் மறக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

மிளகுத் தூள்:

மிளகுத் தூள்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள உணவுப் பொருள் தான் மிளகுத்தூள். சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளைப் போக்கவும் உதவுகிறது. எனவே சமைக்கும் அனைத்து உணவுகளிலும் சிறிதளவு மிளகு தூள் சேர்த்து சாப்பிடுவது உங்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும்.

கிரீன் டீ:

கிரீன் டீ

இதில் ஆன்டி ஆக்சிடென்ட், ஆன்டி வைரஸ் போன்றவை இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்திக்குச் சிறந்த பானமாக உள்ளது. தினமும் காலையில் கிரீன் டீ அருந்துவது மிகவும் நல்லது. ஒரு வேளை கசப்பின் சுவையை அறியும் பட்சத்தில் ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடலாம்.

காளான்கள்:

காளான்கள்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் அற்புதமான உணவுப் பொருள்களில் ஒன்று தான் காளான்கள். இது நுண்ணுயிர் மற்றும் பிற பூஞ்சை தொற்றுகளைக் குணப்படுத்த உதவுகிறது. இதோடு ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்புக்குத் தேவையான வைட்டமின் டி, செலினியம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் காளானில் உள்ளது. எனவே இயற்கையாக விளைவித்த காளான்களைச் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

இந்த உணவுப்பொருள்கள் மட்டுமில்லாது கீரைகள், பாதாம், நெல்லிக்காய், வெங்காயம் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள்களையும் உங்களில் உணவு முறையில் மறக்காமல் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழப் பழகுங்கள்.

First published:

Tags: Healthy Food, Immunity, Immunity boost