• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து செடி வளர்க்க பைகள் தயாரித்து மும்பை மாணவர் புதுமுயற்சி..

பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து செடி வளர்க்க பைகள் தயாரித்து மும்பை மாணவர் புதுமுயற்சி..

காட்சி படம்

காட்சி படம்

மும்பையை சேர்ந்த மாணவர் ஒருவர் பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து ‘க்ரோ பேக்ஸ்’ தயாரித்து அசத்தியுள்ளார்.

  • Share this:
ஜினாய் கடா என்ற இளைஞர் கே. ஜே. சோமையா அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டதில் இருந்து அவர் வீட்டில் தோட்டக்கலை தொடங்கினார். முதலில் ரோஜா உட்பட பல்வேறு பூக்கும் தாவரங்களை வளர்த்த அவர் பின்னர் பழங்கள் மற்றும் காய்கறி தாவரங்களை கூட வளர்க்க ஆரம்பித்தார்.

வீட்டில் தோட்டம் அமைக்கும் பலரும் "ரீயூஸ் மற்றும் ரீசைக்கிள்" என்ற முறையை அதிகம் பின்பற்றுகின்றனர். அதாவது வீட்டில் இருக்கும் காய்கறி கழிவுகளை வீணாக்காமல் பயன்படுத்துவது போன்றவை அடங்கும். மேலும் தாவரங்களை வளர்க்க இயங்காத குளிர்சாதனப்பெட்டிகள், வாட்டர் கேன்கள், ட்ரம்கள் போன்ற பல வீட்டுப் பொருட்களை பயன்படுத்துகின்றனர் . இதனை வைக்க தாராளமான இடம் தேவைப்படுகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய எண்ணிய ஜினாய் கடா, இதற்கு தீர்வாக நெய்யாத துணியிலிருந்து வளரும் பைகளை உருவாக்கியுள்ளார்.

ஜினாய் கடா இந்த ஆண்டு ஜூலை மாதம் பிளான்டேரியா தோட்டத்தை தொடங்கிய நிலையில் தற்போது நாடு முழுவதும் "க்ரோ பைகளை" சந்தைப்படுத்தத் தொடங்கியுள்ளார். தி பெட்டர் இந்தியாவிடம் இதுகுறித்து பேட்டியளித்த ஜினாய், "க்ரோ பைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கவர்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நெய்யப்படாத துணியிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என விளக்கியுள்ளார். இந்த பைகள் உறுதியாக இருக்கும், இதில் நீர் வடிகால்கள் மற்றும் காற்று சீரமைப்பு அம்சங்கள் இருப்பதால் இந்த பைகள் செடிகள் நன்கு வளர உதவுகிறது.

இதுவரை நான் 200 பைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் விற்பனை செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாவரங்கள் வளர்க்க முதலில் கடைகளில் பைகள் வாங்க சென்ற போது அவை அனைத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டவை மற்றும் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்ததால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய க்ரோ பைகளை உருவாக்க முடிவு செய்ததாக அவர் கூறுகிறார்.

இதுகுறித்து சில ஆராய்ச்சிகள் நடத்தி அதன் மூலம் க்ரோ பைகள் துணியை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்பதை அவர் அறிந்துள்ளார், சோதனைகள் அடிப்படையில் சில பைகளை வாங்கியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதில் சிலர் பைகள் மிகவும் மெல்லியதாக இருந்தன மற்றும் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்காதது பொலவும், நீர் வடிகால் போன்ற பிரச்சினைகள் இருந்தன. எனவே அதன்பின்னர் சொந்தமாக க்ரோ பைகள் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார்.

Also Read : இதை படித்தால் இனி செப்பு பாத்திரத்தில் தான் தண்ணீர் குடிப்பீங்க..

அதன்படி அவர் தயாரித்த பைகள் வேகமான வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அதன் நுண்துளைகளின் காரணமாக அனைத்து பக்கங்களிலிருந்தும் காற்று சுழற்சி இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பையின் கீழேயும் நீரை வெளியேற்றும் வகையில் நான்கு வெவ்வேறு அளவுகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பைகள் ரூ .50 முதல் ரூ .120 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பெரும்பாலான பகுதியில் இருந்தும் ஆர்டர் வருவதாக ஜினாய் கடா கூறியுள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: