'மல்டி டாஸ்கிங்' குழந்தைகளைப் பாதிக்குமா..? ஆய்வு சொல்வது என்ன

குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது, வீட்டுப் பாடம் எழுதுவதை வலிந்து செய்வதாகவும், மீடியா சார்ந்த விஷயங்களை உற்சாகத்தோடு செய்வதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது.

'மல்டி டாஸ்கிங்' குழந்தைகளைப் பாதிக்குமா..? ஆய்வு சொல்வது என்ன
மல்டி டாஸ்கிங்
  • News18
  • Last Updated: November 6, 2019, 8:28 PM IST
  • Share this:
மனித தொடர்புபியல்துறை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் குழந்தைகளுக்கான மல்டி டாஸ்கிங் என்பது அதிக நன்மை மற்றும் ஆபத்து என இரண்டையும் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இன்றையக் குழந்தைகள் கல்வியைத் தாண்டி பல விஷயங்களைச் செய்கின்றனர். அதேபோல் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும்போதே மற்றொரு வேலையையும் செய்கின்றனர்.

உதாரணமாக முன்பெல்லாம் பள்ளிக்குச் சென்றால் கல்வியில் மட்டுமே அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் இருக்கும். ஆனால் இன்றைய குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும் ஒரு பகுதியாக இருக்கிறது. அதாவது கல்வியைத் தாண்டி அவர்களுக்கு விளையாட்டு பயிற்சி, இசை, பாட்டு என பல விஷயங்களை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை பெற்றோர்கள் அவர்களின் முன் வைக்கின்றனர். இவை ஒருபுறம் இருக்க செல்ஃபோன் பழக்கம் இன்று குழந்தைகளிடம் அதிகரித்திருப்பதும் வேதனைக்குரிய விஷயமாக குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆனால் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது, வீட்டுப் பாடம் எழுதுவதை வலிந்து செய்வதாகவும், மீடியா சார்ந்த விஷயங்களை உற்சாகத்தோடு செய்வதாகவும் ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது மற்ற மல்டி டாஸ்கிங் விஷயங்களைக் காட்டிலும் செல்ஃபோனில் டெக்ஸ்ட் செய்வது, கேம் விளையாடுவது என்பன போன்ற மல்டி டாஸ்கிங் விஷயங்களைதான் விரும்பி செய்வதாக தெரிவித்துள்ளது.இந்த ஆய்வில் 11 முதல் 17 வயதிற்கு உட்பட்ட 71 சிறுவர் சிறுமிகள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு மூன்று முறை மீடியா மற்றும் மீடியா அல்லாத பணிகளை 14 நாட்கள் அளிக்கப்பட்டது.அதில் வீட்டுப்பாடம் எழுதுவது, புராஜெக்ட் என கல்வி சார்ந்த விஷயங்களை ஒரு நாளும், விடியோ கேம், டெக்ஸ்டிங் என மீடியா சார்ந்த விஷயங்களை மற்றொரு நாளும் வழங்கியிருக்கிறது. அப்போது அவர்கள் வெளிப்படுத்திய ஏழு உணர்ச்சிகளில் மூன்று மட்டுமே நல்ல விதமானதாகவும் மற்ற நான்கு எதிர்மறையான உணர்சிகளாகவும் இருந்தன என்று குறிப்பிடுகிறது.

இதன் மூலமே அவர்கள் மல்டி டாஸ்கிங் என எதை செய்தாலும் அதில் நன்மை மற்றும் தீமை இரண்டும் கலந்துள்ளன என்று குறிப்பிடுகிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்