• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Motivational Story : வாய்ப்புகளை முறையாக பயன்டுத்திக் கொள்ள வேண்டும் - ‘வரம் கொடுத்த தேவதை’ கதை சொல்லி உணர்த்திய விவேகானந்தர்

Motivational Story : வாய்ப்புகளை முறையாக பயன்டுத்திக் கொள்ள வேண்டும் - ‘வரம் கொடுத்த தேவதை’ கதை சொல்லி உணர்த்திய விவேகானந்தர்

விவேகானந்தர்

விவேகானந்தர்

‘பேராசை பெரு நஷ்டம்’, ‘பதறாத காரியம் சிதறாது’ என்பது பழமொழி. இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • Share this:
    ஒரு தேவதைக்குத் திருப்தி ஏற்படும்படி ஏழை ஒருவன் நடந்து கொண்டான். அந்தத் தேவதை அவன் முன்னர் தோன்றி, மூன்று சொக்கட்டான் காய்களைக் கொடுத்து, அவற்றை உருட்டி மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. மகிழ்ச்சி அடைந்த அந்த மனிதன் வீடு திரும்பி, தன் மனைவியிடம் விவரத்தைச் சொன்னான். பண ஆசை பிடித்த அவளோ பணத்திற்காகக் காயை உருட்டும்படிச் சொன்னாள்.

    அதற்கு அவன், நம் இருவருக்கும் மூக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஊர் மக்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். எனவே, முதலில் அழகான மூக்கு வேண்டும் என்று காயை உருட்டுவோம் என்றான். ஆனால் பணத்தை விரும்பிய மனைவியோ காயை உருட்ட விடாமல் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். கணவனோ திமிறிக் கையை விடுவித்து ‘எங்கள் இருவருக்கும் அழகான மூக்குகள் அமையட்டும்’ மூக்குகளைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று காயை உருட்டி விட்டான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    உடனே அவர்கள் இருவர் உடம்பிலும், அழகிய ஆனால் பல மூக்குகள் தோன்றி விட்டன. பல மூக்குகள் இருப்பது அவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் மூக்குகளே வேண்டாம் என்று காயை உருட்ட அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள். அதன்படி உருட்டியப் போது, மூக்குகளே இல்லாமல் போய்விட்டன. இப்படி இரண்டு வரங்கள் வீணாகிவிட்டன. என்ன செய்வது என்று அவர்கள் திகைத்தனர். கேட்பதற்கு இனி ஒரே ஒரு வரம் தான் மீதி இருந்தது.

    Read More : விவசாய வேலை செய்த புத்திசாலிகள்... இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது சமூகம்!

    மூக்குகள் இல்லாத காரணத்தால் அதிக விகாரமாக இருந்தது. எனவே, வெளியில் போக அவர்கள் மிகவும் வெட்கப்பட்டனர். அழகிய மூக்கு எப்படி வந்தது என்று ஊரார் கேட்பார்களே, அதற்கு என்ன பதில் சொல்வது என்று அஞ்சினார்கள். பின்னர், தங்கள் மடமையை நினைத்து வருத்தப் பட்டார்கள். அதனால் அழகற்ற பழைய மூக்கே தங்களுக்கு வந்தால் போதும் என்று கூறி காயை உருட்டினார்கள். பழைய மூக்கே திரும்பவும் வந்தது.

    Must Read : ‘பிறர் துன்பத்தை தன் துன்பமாக எண்ணி உதவ வேண்டும்’ - சிறுவர்களுக்கு கதை கூறிய மருள் நீக்கியார்!

    ‘பேராசை பெரு நஷ்டம்’, ‘பதறாத காரியம் சிதறாது’ என்பது பழமொழி. இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை உரிய வகையில், முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைப்பதாக விவேகானந்தர் கூறிய இந்த கதை அமைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: