Motivational story : விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

அன்பான குடும்பம்

குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பதும், சிறியவர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுப்பதும் நமது வழக்கம்.

  • Share this:
அன்பு நிறைந்த வாழ்க்கை நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்பார்கள். உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் போற்றுதலுக்கு உரியவராகின்றனர். ஆம், ‘விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை.’

ஒரு ஊரில் அன்பு நிறைந்த குடும்பம் ஒன்று இருந்தது. அதில் தாத்தா, பாட்டடி, அப்பா, அம்மா பிள்ளைகள் என அனைவரும் அன்பாக வாழ்ந்து வந்தனர். ஒருநாள் தாத்தாவிடம் பேரன் கேட்டான், "நீங்களும் அப்பாவும் சண்டை போட்டதே இல்லையா தாத்தா!." தாத்தா, "இல்லை அதற்கு அவசியம் இல்லை." என்று பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படியாக குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் அனைவரிடமும் கேட்டான் அந்த சிறுவன். அனைவரும் இன்முகத்தோடு, சண்டை போட்டதில்லை என்று பதில் கூறினார்கள்.

பாட்டியிடம் சென்ற சிறுவன். "பாட்டி நீங்க யாருமே சண்டை போட்டதில்லைனு சொல்றீங்க. ஆனா நானும், அக்காவும் எப்போவுமே சண்டை போட்டுட்டே இருக்கோம் பாட்டி" என்று கூறினான். இதைக் கேட்டு, பேரனை கட்டிப் பிடித்து முத்தமிட்ட பாட்டி, "நீங்கள் சிறுவர்கள். இனி வளர வளர சண்டைகள் தானாக குறைந்துவிடும்." என்று கூறினாள்.

Must Read : ‘பிறர் துன்பத்தை தன் துன்பமாக எண்ணி உதவ வேண்டும்’ - சிறுவர்களுக்கு கதை கூறிய மருள் நீக்கியார்!

மேலும், “உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப்போவதில்லை. அதேபோல நம் குடும்பத்தில் இருப்பவர்களை மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் இருப்பதும் முக்கியமானது. எதிரிகளிடம் விட்டுக் கொடுக்கமல் இருப்பதும், நமக்குள் தாராள மனதுடன் விட்டுக் கொடுத்து வாழ்வதும் நாம்மை மேன்மை அடையச் செய்யும்” என்று கூறிய பாட்டி. இதெல்லாம் நீ வளர வளர மேலும் நன்றாக உனக்குப் புரியும்.

நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் பெரியவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பதும், சிறியவர்களுக்கு உரிய சுதந்திரம் கொடுப்பதும் நமது வழக்கம். அன்பு நம்மிடம் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டும்'' என்று கூறினாள் பாட்டி. “நீங்க சொல்றது கொஞ்சம் கொஞ்சம் புரியுது, ஆனா கொஞ்சம் குழப்பமா இருக்கு பாட்டி” என்று கூறியவாறு அங்கிருந்து எழுந்து விளையாடச் சென்றான் சிறுவன்.
Published by:Suresh V
First published: