• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Motivational story : டென்ஷனை விட்டொழிக்கும் வழிமுறை... ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்றவரின் கதை!

Motivational story : டென்ஷனை விட்டொழிக்கும் வழிமுறை... ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெற்றவரின் கதை!

பறவை வேட்டை

பறவை வேட்டை

நாம் மனதுக்குள்ளாக ஒரு பர்பக்ஷனை, பியூரிட்டியை அளவு கோளாக வைத்து எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறோம். அவ்வாறு அந்த நிகழ்ச்சிகள் நடைபெறாவிட்டால் கோபம் கொள்கிறோம். மாறாக, நிலைமைகளில் இருந்து உங்களின் மனதின் கருத்துகளை உருவாக்குங்கள், நடைமுறை வாழ்க்கையை கணக்கில் கொண்டு, அதன் அடிப்படையில், உங்களின் மதிப்பீடை செய்து பாருங்கள்.

  • Share this:
ஒரு ஊரில் நாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர் வாழ்ந்து வந்தார். பிறர் மீது கோபப்படுவது. அதிகமாக டென்ஷன் ஆவது என எப்போதும் மன இருக்கத்துடனேயே காணப்பட்டார். இதனால், குடும்பத்தில் இருப்பவர்களிடம் அவரால் அன்பாக இருக்க முடியவில்லை. நல்ல நண்பர்களையும் பெற முடியவில்லை. அவரின் பிள்ளைகள் கூட அவருடன் வெறுப்பாக நடந்து கொண்டனர்.

இதனால் மன வேதனை அடைந்த அவர், ஒருநாள் தனிமையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார். இதை எப்படி சரி செய்யவது என்று அவருக்குத் தெரியவில்லை. இதனால் அவரின் மனம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. அப்போது, அந்த வழியாக மருள் நீக்கியார் சென்று கொண்டிருந்தார். அவர் ஊர் மக்களுக்கு பல நல்ல ஆலோசனைகளை சொல்லி வருபவர் என்பதால் அவரிடம் தன் நிலையை எடுத்துரைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரின் நிலையை பெறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த மருள் நீக்கியார், "எல்லாம் விரைவில் சரியாகிவிடும்" என்ற நம்பிக்கை மிக்க சொற்களோடு பேசத் தொடங்கினார். "ஒரு ஊரில் வேடர் ஒருவர் இருந்தார். அவர் பறந்துவரும் பறவைகளை வீழ்த்துவதில் திறமை வாய்ந்தவர். அப்படி ஒருநாள் பறவைகளை சுட்டுக் கொண்டிருந்தார்.

அவருடன் உதவியாளர் ஒருவர் சென்றிருந்தார். சுடப்பட்டு கீழே விழும் பறவைகளை எடுத்து சேகரிப்பது அந்த உதவியாளரின் வேலை. அந்த வேடர் குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒருமுறை அவர் சுட்டபோது குறி தவறியது. அப்போதும் அவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆரவாரவம் செய்தார். இதை கவனித்த வேடரின் உதவியாளர், "குறி தவறி ஒரு குண்டு வீனாகியுள்ளது, அதற்கும் மகிழ்ச்சியடைகிறீங்களே?" என்று கேட்டார். அதற்கு அந்த வேடர் கூறினார், "எவ்வளவு லாகவமாக அந்த பறவை தப்பித்தது. அதை பார்க்கும் போது மனதில் தானாகவே மகிழ்ச்சி பொங்குகிறது" என்று பதிலளித்தாராம். அவ்வாறு நாம் நினைத்தது நடக்காவிட்டால் கோபம் கொள்ளாமல் எதிர் தரப்பின் நிலைமைகளையும் நல்ல ரசனையோடு பார்க்கப் பழக வேண்டும்.

நாம் மனதுக்குள்ளாக ஒரு பர்பக்ஷனை, பியூரிட்டியை அளவு கோளாக வைத்து எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறோம். அவ்வாறு அந்த நிகழ்ச்சிகள் நடைபெறாவிட்டால் கோபம் கொள்கிறோம். மாறாக, நிலைமைகளில் இருந்து உங்களின் மனதின் கருத்துகளை உருவாக்குங்கள், நடைமுறை வாழ்க்கையை கணக்கில் கொண்டு, அதன் அடிப்படையில், உங்களின் மதிப்பீடை செய்து பாருங்கள். தப்பித்த பறவைகளை ரசித்த வேடனைப்போல மற்றவர்களின் திறமைகளும், உணர்வுகளும் உங்கள் கண்ணில் படும். நீங்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்வீர்கள். உங்கள் மீதான அன்பும் அதிகரிக்கும். உங்களின் மன இருக்கமும் காணாமல் போய்விடும்" என்றார் மருள் நீக்கியார்.

Must Read : மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவர் ஒரே நாளில் மாறிய கதை!

இந்த வழிமுறைகளை பின்பற்றி தொடர் பயிற்சி மேற்கொண்டு, வாழ்க்கை நிலைமைகளை கணக்கில் கொண்டு தன் மன இருக்கத்தையும் டென்ஷனையும் விட்டொழித்து அன்பாக, அரவவணைப்பாக நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார் அந்த நபர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: