• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Motivational story : இதய காயங்களை இதமாகப் போக்கும் 'இனியவை கூறல்'!

Motivational story : இதய காயங்களை இதமாகப் போக்கும் 'இனியவை கூறல்'!

அன்பான ஜோடி

அன்பான ஜோடி

உறவினர்கள் நண்பர்கள் என யார் தவறு செய்தாலும், இனிமையான சொற்களால் எடுத்துக் கூறினால், இதயம் இதமாக மாறும், தவறும் விரைவாக திருத்தப்படும்.

  • Share this:
"சண்டை சச்சரவு இல்லாத குடும்பம் எங்க இருக்கு? மூணாவது மனுஷங்க தலையிடாம இருந்தாலே போதும் புருஷன் பொண்ஜாதி சண்டையெல்லாம் புஸ்ஸூனு போயிரும்." என்று கூறினாள் பேச்சியம்மா பாட்டி.

பேச்சியம்மா பாட்டி நூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் திடகாத்திரமான மூதாட்டி. சாதாரணமாகப் பேசினாலே அவர் வாயிலிருந்து எதுகை, மோனை எல்லாம் எழுந்து நடமாடும். ஊரில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் அனைவரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறுவர்களுக்குக் கதை சொல்லி சிரிக்கவைப்பார், பெரியவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் இருந்து வியக்க வைப்பார். ஒருநாள் பள்ளியில் படிக்கும் பெண் பிள்ளைகள், பேச்சியம்மா பாட்டியிடம் கதை சொல்லுமாறு கேட்டனர். பாட்டி எப்போதும் உற்சாகம் மிகுந்த பாசிட்டிவ் கதைகளைத்தான் அதிகமாகச் சொல்லுவார்.

அன்றும் அப்படித்தான் கதையைத் தொடங்கினார். "ஒரு ஊர்ல ஒரு ராணி இருந்தாங்களாம்...." என ஆரம்பித்தார். அப்போது ஒரு சிறுமி குறுக்கிட்டு, பாட்டி எங்க வீட்ல அம்மாவும் அப்பாவும் எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுட்டே இருக்காங்க" என்றாள்.

Read More : வாய்ப்புகள் கைநழுவுகிறதா கவனமான இருங்கள்... இவர் உங்களுடனும் இருக்கலாம்!

இதை கேட்டும் கேட்காததுபோல் கதையைத் தொடர்ந்த பாட்டி, அந்த சிறுமியைப் பார்த்து சிரித்துக் கொண்டே கூறினார், அந்த ராணியும் ராஜாவும் எப்பவும் சண்டை போட்டுக்க மாட்டாங்களாம். ஒரு நாள், அந்த ராணியிடம் தோழி கேட்டாங்களாம், "உங்களுக்கும் ராஜாவுக்கும் சண்டையே வராதா?" ராணி சொன்னாங்களாம், "நான் ஏதாவது தவறு செய்துவிட்டால், ராஜா என் அருகில் வந்து அமர்ந்து அன்பாகவும், அமைதியாகவும் பேசத் தொடங்குவார். அப்போது, நான் செய்த தவறால் ஏற்படும் தீமைகளை, இன்முகத்தோடு, எடுத்துச் சொல்லுவார்".

அப்போதெல்லாம் எனக்கு கோபமும் வராது, கொந்தளிப்பும் வராது. அன்புதான் அதிகமாகும். நான் செய்த தவறு என்னை உறுத்தும்." என்று சொன்னாங்களாம். அதுமட்டுமல்ல, "இப்படித்தான், கணவன்-மனைவியை கலங்கடிக்கும் விஷயம் மட்டுமல்ல, உறவினர்கள் நண்பர்கள் என யார் தவறு செய்தாலும், இனிமையான சொற்களில் கூறினால், இதயம் இதமாக மாறும், தவறும் விரைவாக திருத்தப்படும்.

Must Read : வெற்றுக் கனவுகளை விடுத்து வாழ்க்கையில் முன்னேறுவோம்

கடுஞ்சொல் மனக் காயங்களைத்தான் ஏற்படுத்தும். அன்புதான் அரவணைப்பைக் கொடுக்கும்." என்று கூறிவிட்டு, பிள்ளைகளைப் பார்த்து பொக்கைவாய் பிளந்து சிரித்த பாட்டி, "சண்டை இல்லாத குடும்பம் எந்த கண்டத்துலயும் இல்ல." இதய காயங்களையும் இதமாகப் போக்கும் ‘இனியவை கூறல்’னு பெரியவங்க சொல்லிருக்காங்க.

புருஷன் பொண்டாட்டி சண்டை எல்லாம் தானாவே தணிஞ்சு போகும். மூணாவது மனுஷங்க தலையிடாம இருந்தாலே போதும் நீருபூத்த நெருப்பா அணைஞ்சு போகும். என்ன ஒன்னு, அன்பை மட்டும் குறையாம பார்துக்க வேணும்" என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: