• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Motivational Story: ஆசையும் பேராசையும்... ஓர் வியாபாரியின் கதை..!

Motivational Story: ஆசையும் பேராசையும்... ஓர் வியாபாரியின் கதை..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சில பல வேலையாட்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். கையை நீட்டினால் தேவையான பொருட்கள் கைக்கு வர வேண்டும்...

  • Share this:
    ஒரு ஊரில் மண்பாண்டம் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் இருந்தார். மண்பாண்டங்கள் செய்யும் இடத்தில் இருந்து, அவற்றை வாங்கி வந்து ஓரிடத்தில் வைத்து விற்பனை செய்தார். அவர் இந்த வியாபாரத்தை ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தன.

    வியாபாரிக்கு அதிக லாபம் பெற்று, உடனே செல்வந்தர் ஆக வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. தன்னை ஒரு செல்வந்தராக நினைத்துக் கொண்டார். தனக்கு ஒரு பெரிய பங்களா, விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ கார். சில பல வேலையாட்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். கையை நீட்டினால் தேவையான பொருட்கள் கைக்கு வர வேண்டும். கழுத்து நிறைய, தங்கச் சங்கிலி அணிய வேண்டும், இப்படியாக பல்வேறு எண்ணங்கள் அவர் நினைவில் வலம் வந்தன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவர் இந்த நிஜ உலகை மறந்து கனவுலக நினைவவுககளில் வாழத் தொடங்கினார். பல்வேறு எண்ணங்கள் அவர் நினைவில் வட்டமிட்டன. அவர், கற்பனை உலகில் மிதந்தார். திடீரென, அவருக்கு, தங்க வியாபாரி ஆகும் எண்ணம் உதயமானது. தங்கத்தை விற்பனை செய்தால் பணம் கொட்டோ, கொட்டோ என கொட்டும் . அப்போது மண் பாண்டத்தை தூக்கி போட்டுவிட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து காலை ஆட்டுவேன் என நினைத்துக் கொண்டே காலை ஆட்டினார் அப்போது, அவரின் கால் அங்கிருந்த மண்பாண்டங்கள்மீது மோதியதால் அவை கீழே விழுந்து உடைந்தன.

    Must Read : விவசாய வேலை செய்த புத்திசாலிகள்... இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது சமூகம்!

    கடந்த காலத்தை மதிப்பிட்டு, நிகழ் காலத்தின் நிலைமையை உணர்ந்து, எதிர்காலத்தை திட்டமிட வேண்டும். வாழ்க்கை நிலைமைகளை கணக்கில் கொள்ளாத ஆசைகளும் வெற்று கற்பனைகளும். துயரத்தை கொடுப்பதாக அமைந்துவிடும். இப்படிப்பட்ட பண்புகளுக்கு எதிராக, மக்கள் "நெனப்புதான் பாபொழப்பக் கெடுக்குமாம்" என பழமொழியாகக் கூறியுள்ளனர். அதேபோல “பேராசை பெரு நஷ்டம்” என்றும் கூறுவர். “இருப்பதை விடுத்து பறப்பதற்கு ஆசைப்பட்டால்” இப்படித்தான், உள்ளதும் போய்விடும். வாழ்க்கையின் முன்னேற்றம் வாழ்வின் நிலைமையில் இருந்துதான் வருகின்றன மாறாக நினைப்பில் இருந்து உடனே வந்துவிடுவததில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: