• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Motivational Story : மோதி வெற்றி கொண்டே ஆகவேண்டும் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

Motivational Story : மோதி வெற்றி கொண்டே ஆகவேண்டும் - ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

இளைஞர்

இளைஞர்

ஒதுங்கி இருப்பதும் பயந்து நடுங்குவதும் நம்மை மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர்களுக்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்

  • Share this:
ஒரு ஊரில் ஒரு இளைஞர் இருந்தார். அவர் அதிகாரிகளைக் கண்டால் பயந்து நடுங்குவார். பிரச்னைகளில் இருந்து தப்பி எஸ்கேப் ஆவதில்தான் அதிக கவனம் செலுத்துவார். பிரச்னைகளில் தலையிட்டு அதற்குத் தீர்வு கண்டு முன்னேற வேண்டும் என்பதில் முனைப்பு காட்ட மாட்டார்.

வாழ்க்கையில் பிரச்னைகள் புற்றீசல் போல வந்து கொண்டுதானே இருக்கும். அதிலிருந்து தப்பித்து எங்கும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ அல்லவா. ஆனால், இந்த இளைஞர் பயந்தாங்கொல்லியாக இருந்தார். தான் நினைப்பதை மற்றவர்களிடம் சொல்வதற்கும் பயப்படுவார். இந்த தயக்கம் அவருக்கு இருக்கும் திறமையை அவரே அறிய முடியாமல் போவதற்குக் காரணமாக இருந்தது.

அந்த இளைஞர் பணிபுரிந்த இடத்தில் அவரை நம்பி முக்கிய பொறுப்புகளை கொடுப்பதற்கு முன்வர வில்லை. அவரின் இந்த தயக்கமும் பயமும் அவரை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தின. தன் கருத்தை மற்றவர்களிடம் சொல்வதற்குப் பயப்படுவார். தான் ஏதேனும் தவறாகப் பேசிவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி பொதுவாக கூட்டத்தில் பேசுவதை தவிர்ப்பார். குடும்பத்திலும் சரி, பணிபுரியும் இடத்திலும் சரி, ஒதுங்கி இருப்பதையே விரும்புவார்.

Must Read : வாய்ப்புகள் கைநழுவுகிறதா கவனமான இருங்கள்... இவர் உங்களுடனும் இருக்கலாம்!

இதுபோன்ற அச்சம் கொள்ளும் பயந்தாங்கொல்லி இயல்புகள் நம்மிடம் வெளிப்படையாகவோ, பதுங்கியோ இருந்தால், அதனை மாற்றிக் கொண்டு முன்னேற வேண்டும். சிக்கல்களில் தலையிட்டு அதனை முறையாகக் கையாண்டு வெற்றி கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒதுங்கி இருப்பதும் பயந்து நடுங்குவதும் நம்மை மட்டும் அல்ல, நம் சுற்றாத்தாருக்கும் தீராத துன்பம் கொடுப்பதாக அமைந்துவிடும். "அச்சம் தவிர்" என்று கூறுகிறார் பாரதியார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: