இன்றைய காலகட்டத்தில் 20 - 40 வயதுக்குட்பட்ட பலர் மனநலப் பிரச்சினைகளைப் பற்றி புகார் செய்கின்றனர், துரதிர்ஷ்டவசமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. ஹைப்பர்டென்ஷன் என்றால் என்ன? எந்தெந்த வேலைகளில் டென்ஷன் அதிகம்? இதனால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? இதை சரிசெய்ய வேலை வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பு நியாயமானதாக உள்ளதா? வாருங்கள், மேலோட்டமாக அலசி பார்ப்போம்!
ஹைப்பர்டென்ஷன் என்றால் என்ன?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஹைப்பர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) என்பது உடலின் இரத்த நாளங்கள் தொடர்ந்து அழுத்தத்தை உயர்த்தும் ஒரு நிலை ஆகும். இந்த நிலை இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். இருப்பினும், ஒரு நபர் தனது ஆரோக்கியத்தை சரியான முறையில் கவனித்துக்கொண்டால், இந்த நோயைத் தடுக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம்.
உலகெங்கிலும் உள்ள மிகவும் "மன அழுத்தம் மிக்க" வேலைகள்:
கேரியர்கேட்ஸ்டின் படி, இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் மிகவும் அழுத்தமான வேலைகளின் பட்டியல் இதோ:
01. என்லிஸ்டட் இராணுவப் பணியாளர்
02. தீயணைப்பு வீரர்
03. ஏர்லைன் பைலட்
04. போலீஸ் அதிகாரி
05. ஒளிபரப்பாளர் (பிராட்காஸ்டர் )
06. ஈவென்ட் கோஆர்டினேட்ட்டர்
07. செய்தித்தாள் நிருபர்
08. மக்கள் தொடர்பு நிர்வாகி
09. சீனியர் கார்ப்பரேட் எக்ஸிகியூட்டிவ் மற்றும் டாக்ஸி டிரைவர் வேலைகள்
10: டாக்ஸி டிரைவர்கள்
ஆரக்கிளின் ஒரு சமீபத்திய ஆய்வின்படி, கோவிட்-19 தொற்றுநோய் காலமானது ஹைப்பர்டென்ஷன் பிரச்சனையை இன்னும் மோசமாக்கியுள்ளது; அதற்கு முக்கிய காரணம் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழ்நிலையே ஆகும்.
சோம்பேறித்தனமாக உணர்ந்தால் உடனே ஜப்பானியர்கள் இதைத்தான் செய்வார்களாம்..!
11 நாடுகளில் 12,000 பணியாளர்கள், மேலாளர்கள், எச்ஆர் லீடர்கள் மற்றும் சி-லெவல் எக்சிகியூட்டிவ்களை கொண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 78 சதவீதம் பேர் தொற்றுநோய் தங்கள் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதித்ததாகக் கூறியுள்ளனர். “மனநல பிரச்சனை பணியிடங்களில் மட்டுமல்ல; இது மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குறிப்பாக வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் வாழ்க்கையிலும் பரவுகிறது" என்றும் கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கை கூறுகிறது.
கணக்கெடுக்கப்பட்ட மொத்த நபர்களில், 85 சதவீதம் பேர், அவர்களின் மனநலப் பிரச்சனைகள் ஆனது தூக்கமின்மை, மோசமான உடல் ஆரோக்கியம், குடும்ப உறவுகளுக்கு இடையே பாதிப்பு, நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுதல் மற்றும் வீட்டில் மகிழ்ச்சியின்மை போன்றவைகளை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர்.
பணியாளர்கள் சந்திக்கும் மேற்கண்ட மனநலப் பிரச்சனைகளை சமாளிக்க வேலை வழங்கும் நிறுவனங்கள் செய்யும் விஷயங்கள் மிகவும் குறைவு என்றும் வெளியான அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 76 சதவிகித தொழிலாளர்கள் தங்கள் மனநலத்தைப் பாதுகாக்க தங்கள் நிறுவனம் இன்னும் அதிகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நம்புவதாக கூறி உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.