• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • Work from home-ஆல் அலுவலகச் சூழலை மிஸ் பண்ணுவதாக கூறும் இந்தியர்கள்..! சென்னைக்கு எந்த இடம் தெரியுமா..?

Work from home-ஆல் அலுவலகச் சூழலை மிஸ் பண்ணுவதாக கூறும் இந்தியர்கள்..! சென்னைக்கு எந்த இடம் தெரியுமா..?

மாதிரி படம்

மாதிரி படம்

வீட்டில் பணி புரிவதால் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்ற கேள்விக்கு இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது என 64 % பேர் கூறியுள்ளனர்.

 • Share this:
  கொரோனா ஊரடங்கில் பல விஷயங்கள் டிரெண்டானது. பல புதிய விஷயங்கள் உருவானது. அதேசமயம் பழைய மரபுகளும் வெளிவரத்தொடங்கின. குறிப்பாக Work from home என்னும் இந்த கலாச்சாரம் பலருக்கும் பரிட்சயமானது. என்னதான் Work from home கலாச்சாரம் ஏற்கனவே இருந்தாலும் அது பலருக்கும் புதிதல்ல. அதேபோல் Work from home என்பது மகிழ்ச்சியான விஷயம் என்பதும் பலரது என்னமாக இருந்தது. அது மார்ச், ஏப்ரல்..ஏன் மே , ஜூன் வரையில் கூட ஹேப்பியாகத்தான் இருந்திருக்கும். ஆனால் மாதங்கள் செல்ல செல்லதான் அதில் இருந்த சிக்கல்களே பலருக்கும் புரிய ஆரம்பித்தது.

  நேரமில்லா வேலை, அழுத்தம், கம்பூனிகேஷன் தடை, தனிமை, வீடு வேலை இரண்டும் ஒன்றானது என இப்படி பல விஷயங்கள் மெல்ல மெல்ல அவர்களை பயமுறுத்த ஆரம்பித்தது. தற்போது லாக்டவுன் தளர்வுகள் வந்துவிட்டது. சில நிறுவனங்களும் திறந்துவிட்டு ஊழியர்களையும் வர சொல்லிவிட்டது. ஆனாலும் முழு மூச்சாய் இன்னும் இறங்கவில்லை. சில நிறுவனங்கள் இன்னும் Work from home நிலையை நீட்டித்துள்ளது. சிலருக்கு இதுவே நிரந்தரமாகிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்காகத்தான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் இந்த Work from home கலாச்சாரம் நல்லதல்ல என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதைப் போலத்தான் ஊழியர்களின் பாதிப்பும் இருக்கிறது. ஆம்..சமீபத்தில் Work from home நிலை ஆரம்பித்து ஒரு வருடம் ஆனதால் அதன் தாக்கம் எப்படி உள்ளது என்பதை பற்றிய கருத்துக்கணிப்பை நடத்தியது நியூஸ்18 குழுமம். அதிலிருந்து சில உங்களுக்காக..

  நியூஸ்18 குழுமம் இந்தியாவில் உள்ள ஐடி மற்றும் ஐடி-இ நிறுவனங்களில் பணிபுரியும் 1600 ஊழியர்களிடம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது..  முதலில் ஆஃபீஸ் சுற்றுச்சூழலை எந்த அளவிற்கு நீங்கள் மிஸ் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு டெல்லிதான் முதலிடத்தில் உள்ளது. அதாவது டெல்லி 98 சதவீதமும் இரண்டாவது மும்பை 94% அடுத்ததாக பெங்களூர் 91 என்றும் நான்காவது இடத்தில் சென்னை 90%மும் பூனே 88% பின் ஆறாவது இடத்தில் ஹைதராபாத் 81% என இருக்கிறது. இப்படி அதிக நிறுவனங்களைக் கொண்ட தலை நகரங்களில் உள்ள ஊழியர்கள் பதில் தெரிவித்துள்ளனர்.

  வேறு என்ன மிஸ் செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு வேலை சார்ந்த கலந்துரையாடல்கள் அதில் கிடைக்கும் நன்மைகளை மிஸ் செய்கிறோம் என 53% மும், முகத்திற்கு முகம் பார்த்து ஐடியாக்களை பகிர்வது கலந்துரையாடுவதை மிஸ் செய்கிறோம் என 49% பேரும் கூறியுள்ளனர். குறிப்பாக வேலையைக் காட்டிலும் டீ அவுட் செல்வதைத்தான் மிகவும் மிஸ் செய்வதாகக் கூறியுள்ளனர். அதாவது இவ்வாறு 49% பேர் கூறியுள்ளனர். ஆனால் வேலை தொடர்பான டிஸ்கஷனிற்கு 44% பேர் மட்டும்தான் மிஸ் செய்கிறார்களாம்.

  பின் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் மானியங்கள், உணவுகளை மிஸ் செய்வதாக 23% பேரும், உடன் பணியாற்றுபவர்களிடமிருந்து வேலை திறன்களை கற்றுக்கொள்ள தவறுவதாக 39% பேரும், ஜிம், நீச்சல் குளம் போன்ற ஆடம்பர சலுகைகளை மிஸ் செய்வதாக 21% கூறியுள்ளனர்.  அடுத்ததாக வீட்டில் பணி புரிவதால் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன என்ற கேள்விக்கு இண்டர்நெட் வேகம் குறைவாக உள்ளது என 64 % பேர் கூறியுள்ளனர். குறிப்பாக கிராமங்களில் வசிப்போருக்கு இந்த பிரச்னை அதிகமாகவே உள்ளது. முறையான கட்டமைப்பு இல்லை என 50% பேர் கூறியுள்ளனர். அடுத்ததாக குடும்பத்தினரின் தொந்தரவு 42% இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின் முறையான வேலை செய்வதற்கான கட்டமைப்பு இல்லை என்றும் கூறியுள்ளனர். கிடைத்த இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலையில்தான் பல ஊழியர்கள் இருக்கின்றனர். ஒரு சிலருக்கு மட்டுமே நிறுவனத்தில் வேலை செய்வது போல் ஸ்டடி டேபில் செட் அப்பில் வேலை செய்கிறார்கள். அதை உண்மை என கூறும் விதமாக 28% பேர் கூறியுள்ளனர்.

  பாலியல் வன்கொடுமைகளை குறைக்க என்ன செய்யலாம்? கலந்துரையாடல்கள், போராட்டம், கட்டுரைகள் மட்டுமே போதுமா..?

  சரி..குறைகள் மட்டும்தான் இதில் உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை, சில நிறைகளும் உள்ளன. அவை என்னென்ன என்று கேட்டதற்கு சிலர் அலுவலகம் செல்லும் நேரம் மிச்சமாகியுள்ளது என 60% பேர் கூறியுள்ளனர். பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்கு உண்மையில் இது மிகப்பெரிய மிச்சம்தான். பின் வேலை ஷெட்யூட் நம் விருப்பத்திற்கு ஏற்ப செய்துகொள்ளலாம் என 39% பேர் கூறியுள்ளனர். அலுவலகம் தொடர்பான தொந்தரவுகள் இல்லை என38% பேர் கூறியுள்ளனர்.  பின் Work from home குறைகள் என்ன என்ற கேள்விக்கு...குழுவுடன் ஒரு நெருக்கம் இல்லை என 42% பேரும், சமூக வாழ்க்கை, அலுவலக வாழ்க்கையை இழப்பதாக 43% பேரும் , முறையான ஆடை நேர்த்தி இல்லை,தகவல்கள் முழுமையாகத் தெரிவதில்லை என 42% பேரும் கூறியுள்ளனர்.

  இப்படி அலுவலக வேலை , வீடு என இரு பெரும் கட்டமைப்புகளுக்குள் வாழ்ந்தவர்களுக்கு இரண்டும் ஒன்றானதில் சிக்கல்களும் உள்ளன. அதேசமயம் நன்மைகளும் உள்ளன. எதுவாயினும் இது உடல் நலன் கருதி, கொரோனா என்னும் பெருந்தொற்றிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முடிவு என்பதையும் புரிந்துகொள்வது நல்லது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sivaranjani E
  First published: