மோர்கன் நிறுவனத்தின் புதிய ஏரோ ஜிடி கார்

news18
Updated: March 12, 2018, 12:24 PM IST
மோர்கன் நிறுவனத்தின் புதிய ஏரோ ஜிடி கார்
மோர்கன் ஏரோ ஜிடி
news18
Updated: March 12, 2018, 12:24 PM IST
ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் மோர்கன் நிறுவனம் தனது புதிய ஏரோ ஜிடி காரை பார்வைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜெனீவாவில் கடந்த 8-ம் தேதி  மோட்டார் கண்காட்சி தொடங்கியது. இந்தக் கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்கள் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்திவ் வருகின்றன. அந்த வகையில் பிரிட்டனைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான மோர்கன் தனது புதிய மாடல் காரான ஏரோ ஜிடியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்போர்ட்ஸ்கார் வடிவில் இந்த புதிய ஏரோ ஜிடி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவே ஏரோ மாடல் கார்களில் கடைசி தயாரிப்பு என மோர்கன் நிறுவனம் கூறியுள்ளது.  அதேபோல என்62 வி8 இன்ஜின் பயன்படுத்தக் கூடிய கடைசி காராக இருக்கப் போகிறது. மேலும் மர வேலபாடுகள் இந்தக் காரில் அதிகமாக உள்ளன. மேலும்  காரின் புறத்தோற்றத்திலும் விண்டேஜ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

 
First published: March 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்