நீங்கள் பணம் செலவழிப்பதை வைத்து உங்கள் பர்சனாலிட்டியைக் கணிக்க முடியும்..!

திகமாக செலவு செய்யும் சூப்பர் மார்கெட் , பர்னிச்சர், துணிக் கடைகள், இன்சூரன்ஸ் பாலிசி, ஆன்லைன் ஷாப்பிங், காஃபி ஷாப் என ஒவ்வொருவரின் கிரெட் கார்ட் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்துள்ளது.

news18
Updated: July 24, 2019, 9:53 PM IST
நீங்கள் பணம் செலவழிப்பதை வைத்து உங்கள் பர்சனாலிட்டியைக் கணிக்க முடியும்..!
நீங்கள் பணம் செலவழிப்பதை வைத்து உங்கள் பர்சனாலிட்டியைக் கணிக்க முடியும்
news18
Updated: July 24, 2019, 9:53 PM IST
நீங்கள் எந்த விஷயத்திற்காக அதிகமாகப் பணம் செலவு செய்கிறீர்களோ அதை வைத்தே உங்களின் பர்சனாலிட்டியையும் கணிப்பது சாத்தியம் என்கிறது சமீபத்தில் வெளியான ஆய்வு.

இந்த ஆய்வில் இரண்டு மில்லியன் தரவுகளை ஆய்வு செய்துள்ளது. அதை கவனித்தபோது ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் அவர்களின் ஆளுமைப் பண்புகளையும் , அவர்கள் எந்த அளவிற்கு சுயக் கட்டுப்பாடு கொண்டவர்கள், எந்த அளவிற்கு பொருள் சார்ந்த ஈர்ப்பு உள்ளது என்பனவற்றைக் கண்டறிய முடிந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்கள் அதிகமாக செலவு செய்யும் சூப்பர் மார்கெட் , பர்னிச்சர், துணிக் கடைகள், இன்சூரன்ஸ் பாலிசி, ஆன்லைன் ஷாப்பிங், காஃபி ஷாப் என ஒவ்வொருவரின் கிரெட் கார்ட் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்துள்ளது.
அவர்களை ஐந்து வகைகளாகப் பிரித்து அதன்படி அவர்களின் செலவு செய்யும் பழக்கத்தை பட்டியலிட்டுள்ளது. அதில் அதிகமாக விமானங்கள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த நபராயின் அவர்கள் அனுபவம் நிறைந்தவர்கள் என்றும், சோஷியலைஸ் பர்சன் என்று சொல்லக் கூடிய பரந்துபட்ட குணத்துடன் எல்லோரிடமும் ஜாலியாக சகஜமாக பேசும் குணம் கொண்டோர் அதிகமாக உணவு மற்றும் மதுவிற்கு பணத்தை  செலவு செய்வார்கள்.

தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளுக்கு அதிகமாக பணம் செலவழிப்போர் ஏற்றுக் கொள்ளும் குணம், எதற்கும் உடன்படும் குணம் கொண்டவர்களாவும் இருப்பார்கள். எப்போதும் பொருப்புடனும் கவனத்துடனும் செயல்படுவோர், பணத்தை அதிகமாக சேமிக்கும் வழிகளைதான் பின்பற்றுவார்கள். அதற்கேற்ப வாழ்க்கை முறையையும் அமைத்துக்கொள்வார்கள். பொருட்கள் மீது ஈர்ப்பு கொண்டவர்களாயின் நகை, ஆடை மீது அதிக கவனமும் சேமிக்கும் பழக்கமின்றி மற்றவர்களுக்கு கொடுக்கும் குணமும் இருக்காது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Loading...

இதில் நீங்கள் எந்த வகை..?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...