முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

மச்ச சாஸ்திரம்: ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்...

ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்...

நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் ஏன் துரதிர்ஷ்டத்தையும் கூட தரும் பலன் கொண்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் வந்து விட்டாலோ அல்லது நிறைய பெண் நண்பர்கள் இருந்தாலோ “அவனுக்கு என்னப்பா மச்சக்காரன்” என்பார்கள் நண்பர்கள். அப்படிக் கூறுபவர்கள் கொஞ்சம் பொறாமையால் இதனைக் கூறினாலுமே அது ஒரு வகையில் உண்மை தான். ஆம்! நமது உடலில் ஏற்படும் மச்சங்கள் கூட நமக்கு அதிர்ஷ்டத்தையும் ஏன் துரதிர்ஷ்டத்தையும் கூட தரும் பலன் கொண்டது. இந்த உண்மையைக் கண்டு அறிந்து அதனை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது தான் மச்ச சாஸ்திரம் ஆகும்.

மச்சம் என்றால் என்ன?

நமது உடலில் தலையில் இருந்து கால் பாதங்கள் வரையில் சதைப் பாகத்தை மூடியிருக்கும் மேல் தோலில் அமைந்துள்ள சிறிய புள்ளிகள் தான் மச்சங்கள் எனப் படும். இது மஞ்சள், நீலம் , சிவப்பு, வெளுப்பு, கருப்பு போன்ற ஏதாவது ஒரு நிறத்திலோ அல்லது பல நிறத்திலோ இருக்கலாம். அது போல இதன் அளவுகள் கூட வேறு படலாம். உதாரணமாக கடுகைப் போலவோ, மிளகைப் போலவோ அல்லது அதற்கு மேலும் பெரிதாகவோ காணப்படலாம்.

ஆண்களும் அவர்களின் உடலில் உள்ள மச்சங்களும் : 

1.இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டகரமான மனைவி அமைவார்.

2.வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

3. வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

4.வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

5.தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான். வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு  கூட மனதை அலட்டிக் கொள்வார்.

6. வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும்  உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

7. வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

8.மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா செளகரியகும் பெற்றிடுவார்கள். மூக்கின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி  முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். இடது கன் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும்  இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குஅமும் இருக்கும்.

10. தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும். கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம்  பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Lifestyle, Mole