மதுரை கிழக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர் சந்தோஷி ராஜா. இவர் ஆடை வடிவமைப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாது சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாடலிங் செய்து வருகிறார்.
அண்மையில் சென்னைக்கு வந்தபோது 3 வயது சிறுமி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தலைமுடி இல்லாமல் இருந்ததை பார்த்து வேதனைப்பட்டுள்ளார்.
தன்னுடைய முடியை தானமாக கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறார். இதையடுத்து சிலமாதங்கள் நீளமாக முடி வளர்த்த அவர், நேற்று மதுரையில் உள்ள சலூனுக்கு சென்று மொத்தமாக தலையை மொட்டை அடித்து தானமாக கொடுத்துள்ளார்.
எந்த சிறுமியைப் பார்த்து இந்த முடிவுக்கு சந்தோஷி வந்தாரோ, அந்த சிறுமி இப்போது உயிரோடு இல்லை என்பது வேதனையின் உச்சம். இருந்தாலும் முடியில்லாத யாரோ ஒரு பெண்மணிக்கு தன்னுடைய முடியை கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முடியை மொட்டை அடிப்பதற்கு சந்தோஷியின் மகன் ஒத்துக் கொள்ளவே இல்லையாம்.
இதுகுறித்து சந்தோஷியிடம் நாம் பேசியபோது, "பிரண்ட்ஸ், சொந்தக்காரங்க நிறைய பேரு வேண்டாம் அப்படின்னு தான் சொன்னாங்க. ஆனால் என்னுடைய கணவர் இதுக்கு முழுமையா சம்மதித்தார். என்னோட பையன் ரெண்டு நாளா அழுது அடம்பிடித்து மொட்டை அடிக்க கூடாதுன்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான்.
மதுரை மல்லிகையை தலையில தொங்கவிட்டு பாக்குறது எனக்கு அவ்ளோ பிடிக்கும். இருந்தாலும் எவ்வளவோ பேருக்கு பணமாகவோ, பொருளாகவோ நாம கொடுக்கிறது இருந்தாலும், முடியில்லாத பெண்களோட வேதனை ரொம்பவே கஷ்டமானது.
Also read... 'மாண்புமிகு மாணவன்' முதல் 'மாஸ்டர்' வரை..! நடிகர் விஜயின் திரைப்பயணம் #HBDTHALAPATHYVijay
அதனால தான் இந்த முடிவுக்கு வந்தேன். மாடலிங் துறையில் முடியில்லாம இருந்தா சில வாய்ப்புகள் பறிபோகும்,பரவாயில்லை எதுவா இருந்தாலும் ஆறு மாசத்துக்குள்ள மீண்டும் வளர்ந்துடும்ங்ற நம்பிக்கைதான் இந்த முடிவுக்கு காரணம்.மனசு முழுக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார் சந்தோஷி!
தானத்தில் சிறந்த தானம் எத்தனையோ இருந்தாலும் சந்தோஷியின் இந்த தானம் உயர்ந்து நிற்கிறது. கொடுத்தவருக்கு அது வெறும் கூந்தல்! பெற்றுக்கொண்டவர்க்கோ வாழ்வில் பெரும் ஏந்தல்!! சந்தோஷியின் கூந்தல் அவருக்கே முன்பின் தெரியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, முடியில்லாத யாரோ ஒரு பெண்மணியின் தலையை மதுரை மல்லிகையின் வாசத்தோடு அலங்கரிக்கப் போகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.