நெட்வொர்க் 18-ன் முயற்சி எடுத்திருக்கும் மிஷன் பானி வாட்டர்தானை தொகுத்து வழங்கும் பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார், தண்ணீருக்காக நீண்ட தூரம் நடக்கும் பெண்களின் அவலநிலையை உணர்த்தும் விதமாக ட்ரெட்மில்லில் 21 கி.மீ தூரம் நடக்க முடிவு செய்தார்.
மராத்தான் ஓடும் வீரர்களுக்கு ஒவ்வொரு சந்திப்பிலும் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில், கடின உழைப்பாளிகளான பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். முன்னதாக, தண்ணீரைச் சேமிப்பதற்கான மூன்று எளிய வழிகளையும் அக்ஷய் கூறினார்.
விருந்தினர்களுக்கு அரை கிளாஸ் தண்ணீரை மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும், அவர்கள் தாகமாக உணர்ந்தால் மேலும் கேட்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். தண்ணீரைச் சேமிப்பதற்காக சிறிய குழாயைப் பயன்படுத்தவும் அவர் கேட்டுக்கொண்டார். மூன்றாவதாக தண்ணீரின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் வீடுகளில் சென்சார் குழாய்களை நிறுவ வேண்டும் என்றார்.
தண்ணீரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடம் உரையாற்றிய அக்ஷய் குமார், நீர் சிகிச்சையின் (ஹைட்ரோதெரபி) பல விஷயங்களைப் பற்றி பேசினார். ஃபிட்னஸ் ஃப்ரீக்காக இருக்கும் அவர், தனது கடுமையான பயிற்சி அமர்வுகளைப் பற்றியும், தண்ணீர் எவ்வாறு தன்னை மீட்க உதவியது என்பதைப் பற்றியும் ஒரு கண்ணோட்டத்தை அளித்தார்.
ஹைட்ரோ தெரபி அல்லது அக்வாதெரபி எனும் நீர் சிகிச்சை கடினமான பயிற்சி அல்லது கடுமையான காயத்திலிருந்து மீண்டு வர உதவும் வகையில் அளிக்கப்படும் ஒரு வகை சிகிச்சை முறை. இது பிரபலமான சிகிச்சை முறையாகவும், விளையாட்டு வீரர்களுக்கான உடற்பயிற்சி வடிவமாகவும் மாறியுள்ளது.
நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் இந்தியா ஆகியவற்றின் முன்முயற்சியான 'மிஷன் பானி வாட்டர்தான்’, மிகப் பெரிய பிரபலங்கள், தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களை ஒன்றிணைத்து தண்ணீரைச் சேமிப்பதற்கும், அடுத்த தலைமுறையினர் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் கைகோர்க்கத் தயாராக உள்ளது. இந்தியாவில் நீர் நெருக்கடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘பானி கி கஹானி, ’பாரத் கி ஜுபானி’ என இந்த நிகழ்வு வலியுறுத்தப்படும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Akshay Kumar, Mission Paani