முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / முதன்முறையாக தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!

முதன்முறையாக தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக் கண்டுபிடிப்பு!

தாய்ப்பால்

தாய்ப்பால்

மார்பக பால் மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டறியப்பட்டது. அவற்றில் 75 சதவீத மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

  • Last Updated :
  • Chennai |

முதன்முறையாக, விஞ்ஞானிகள் தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்துள்ளனர், இதுகுழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல அபாயங்கள் குறித்த கவலைகளை எழுப்புகிறது.

மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது ஐந்து மில்லிமீட்டர் (0.2 அங்குலம்) விட்டம் கொண்ட சிறிய பிளாஸ்டிக் துகள்கள். அழகுசாதனப் பொருட்கள், உடைகள், உணவு பேக்கேஜிங், தொழில்துறை செயல்முறைகள் போன்ற பல்வேறு மூலங்களிலிருந்து சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் நுழைகின்றன.

2004 இல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இது, ஆழ்கடல், ஆர்க்டிக் பனி , அண்டார்டிக் பனி, மட்டி, டேபிள் உப்பு, குடிநீர் என்று எல்லாவற்றிலும் ஊடுருவியுள்ளது. இந்த சிறிய துண்டுகள் முழுமையாக சிதைவதற்கு பல தசாப்தங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.

எப்போதுமே கூலா ஜாலியா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!

பாலிமர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட மார்பக பால் ஆராய்ச்சியில், தாய்ப்பாலில் பாலிஎதிலீன், பிவிசி மற்றும் பாலிப்ரோப்பிலீன் ஆகியவற்றால் ஆன மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்தது.

இத்தாலியின் ரோமில் குழந்தை பிறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, ஆரோக்கியமான 34 தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட மார்பக பால் மாதிரிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் கண்டறியப்பட்டது. அவற்றில் 75 சதவீத மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பிளாஸ்டிக்கில் பெரும்பாலும் தாலேட்டுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன, அவை ஏற்கனவே தாய்ப்பாலில் காணப்பட்டன.

பிளாஸ்டிக் பேக்கேஜிங்,கடல் உணவுகள், பானங்களை உட்கொள்வதற்கும், பிளாஸ்டிக் கொண்ட தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும் மைக்ரோபிளாஸ்டிக் இருப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர். சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எங்கும் காணப்படுவது மனிதனின் வெளிப்பாட்டைத் தவிர்க்க முடியாததாக ஆக்குகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

சிகரெட் கழிவுகளை கலையாக்கும் டெல்லி இளைஞர்!

"தாய்ப்பாலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதற்கான ஆதாரம் தெரியவந்தது, பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை பற்றிய எங்கள் கவலையை அதிகரிக்கிறது" என்று இத்தாலியின் அன்கோனாவில் உள்ள யுனிவர்சிட்டா பாலிடெக்னிகா டெல்லே மார்ச்சேவைச் சேர்ந்த டாக்டர் வாலண்டினா நோட்டர்ஸ்டெபனோ கூறினார்.

மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதால் பாலுட்டும் பழக்கம் குறைந்து விடாமல் இருக்க வேண்டும். மாசுபடுத்தும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதால் ஏற்படும் தீமைகளை விட தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் மிக அதிகம் என்பதை வலியுறுத்த வேண்டும். பாலூட்டும் அளவு மாறாமல், மாசுபாட்டைக் குறைக்கும் சட்டங்களை ஊக்குவிக்க அரசியல்வாதிகளை வலியுறுத்த வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

top videos

    புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக்ஸை விழுங்கக்கூடும் என்றும் பசுவின் பாலில் மைக்ரோபிளாஸ்டிக் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது.

    First published:

    Tags: Breast milk