ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சருமத்தில் ஏற்படும் இந்த பாதிப்புக்கு மனநல பிரச்சனைகள்தான் காரணமா.?

சருமத்தில் ஏற்படும் இந்த பாதிப்புக்கு மனநல பிரச்சனைகள்தான் காரணமா.?

மனநல பிரச்சனை

மனநல பிரச்சனை

Mental Health and the Skin | மனநல கோளாறுகளைப் பொறுத்தவரை சருமத்தைப் போலவே முடிக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவது உண்டு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதை விட மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது இன்றியாமையாததாக மாறிவிட்டது. ஏனெனில் மன அழுத்தம் சரும ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கூடியது என உலகெங்கிலும் உள்ள முன்னணி care மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் மனநோய் நிலைகள் காரணமாக சருமத்தை பாதிக்கக்கூடிய பல சரும பிரச்சனைகளையும் மருத்துவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

மனதை விட மூளை பெரியது:

மனம் என்பது வேறும் செயல்முறைகளைப் பற்றியது, ஆனால் மூளையானது நமது மனம் உட்பட ஒட்டுமொத்த விஷயத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய அதிகார மையமாக விளங்குகிறது. அப்படி மூளையில் ஏதாவது கோறுகள் ஏற்பட்டால் பல்வேறு அறிகுறிகள் மூலமாக அவை வெளிக்காட்டப்படும், அதில் முக்கியமானது தோல் சம்பந்தமான வியாதிகள் ஆகும்.

மனநலக்கோளாறு காரணமாக உருவாகும் சரும பிரச்சனைகளை மனநல மருத்துவர்கள் சைக்கோ டெர்மட்டாலஜிக் என அழைக்கின்றனர். சைக்கோ (மூளை) + டெர்மா (தோல்) என இரண்டையும் இணைக்கும் சொல்லாடலாகும். இந்த மனோதத்துவக் கோளாறு மன ஆரோக்கியத்திற்கும் தோலுக்கும் இடையிலான தொடர்பை குறிக்கிறது.

சைக்கோ டெர்மட்டாலஜிக் வகைகள்:

மனோதத்துவ கோளாறுகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, அவை,

1. உளவியல் இயற்பியல் கோளாறுகள்

2. முதன்மை மனநல கோளாறுகள்

3. இரண்டாம் நிலை மனநல கோளாறுகள்

Also Read : இந்த பண்டிகைக் காலத்தில் வீட்டிலேயே இயற்கையாக ஒளிரும் முகத்தைப் பெற உதவும் 5 DIY டிப்ஸ்..!

உளவியல் இயற்பியல் கோளாறுகள்:

சோரியாஸிஸ், எக்ஸிமா போன்ற தோல் அழற்சி நோய்கள் தனிநபரின் உணர்ச்சி நிலையை பிரதிபலிப்பவை என மனோதத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக இந்த மாதிரியான சரும பிரச்சனைகள் அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படக்கூடும்.

முதன்மை மனநல கோளாறுகள்:

மனநல கோளாறுகளைப் பொறுத்தவரை சருமத்தைப் போலவே முடிக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவது உண்டு. முதன்மை மனநல கோளாறுகளைப் பொறுத்தவரை, டிரிகோட்டிலோமேனியா (Trichotillomania) என்பது ஒருவர் தன் முடியை பிடித்து இழுக்க வேண்டும் என்கிற கட்டுப்படுத்த முடியாத தூண்டுதலை எதிர்கொள்ளும் ஒரு நிலை ஆகும். இது ஹேர் புல்லிங் டிஸ்ஆர்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் முடி உதிர்வு, வழுக்கை போன்ற பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைக்கும் மன அழுத்தமே முதன்மையான காரணமாக உள்ளது.

Also Read : சரும பராமரிப்பில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மையை கொடுக்கும் யோகர்ட்..!

இரண்டாம் நிலை மனநலக் கோளாறுகள்:

மிகப்பெரிய உளவியல் பிரச்சனைக்கு ஆளானவர்கள் மற்றும் மனச்சோர்வு, அவமானம், விரக்தி மற்றும் சமூகம் தொடர்பான பயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மோசமான தோல் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது சுய மதிப்பு மற்றும் உடல் தோற்றத்தில் கடுமையான நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சிகிச்சை முறைகள்:

மனநல கோளாறுகள் அல்லது மனநல நோய்கள் முற்றிலும் குணப்படுத்தக்கூடியவையாகும். நோயாளிகளை அசாதாரணமாகவோ அல்லது விசித்திரமாகவோ கருதாமல், அவர்களிடம் புரிதலுடனும், ஆதரவுடனும் செயல்படுவதோடு, மனோதத்துவ நிபுணர்கள் அல்லது மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும்.

Also Read : வீட்டிலிருந்தே உங்கள் சருமத்தை பளபளப்பாக்க சிம்பிள் டிப்ஸ்..

மனநல மருத்துவர் முதலில் குறிப்பிட்ட நபர் எந்த வகை மன நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஆராய்ந்து கண்டறிவார். அதன் பின்னர் மருந்துகள், உளவியல் சிகிச்சை மற்றும் நடத்தை சிகிச்சை, ஹிப்னாஸிஸ், தளர்வு, தியானம் மற்றும் ஆதரவு குழுக்கள் போன்ற முறைகள் மூலமாக பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

Published by:Selvi M
First published:

Tags: Health, Mental Health, Skin Care