Home /News /lifestyle /

பணியிடத்தில் மோசமான அனுபவத்தை பெறும்போது உங்கள் மனநலனை நிர்வகிக்க டிப்ஸ்..!

பணியிடத்தில் மோசமான அனுபவத்தை பெறும்போது உங்கள் மனநலனை நிர்வகிக்க டிப்ஸ்..!

வேலை அழுத்தம்

வேலை அழுத்தம்

என்றைக்காவது ஒருநாள் பணிசார்ந்த மன பாரம் நம்மை ஆட்கொள்கிறது என்றால் பரவாயில்லை. ஆனால், அதுவே வாடிக்கையாக இருந்தால் நம் மனநலனை அது பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பணியின் தரத்தையும் குறைத்து விடும்.

பணியிடம் என்பது அனைத்து நாட்களிலும் சுமூகமான அனுபவங்களைக் கொண்டதாக இருக்கும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. அவ்வபோது நமக்கு பணிச்சுமை, சோர்வு அல்லது அலுவலகத்தில் அளிக்கப்படும் இதர தொந்தரவுகள் என மாறுபட்ட அனுபவங்களைக் கொண்டதாக இருக்கும்.

அதே சமயம், என்றைக்காவது ஒருநாள் பணிசார்ந்த மன பாரம் நம்மை ஆட்கொள்கிறது என்றால் பரவாயில்லை. ஆனால், அதுவே வாடிக்கையாக இருந்தால் நம் மனநலனை அது பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பணியின் தரத்தையும் குறைத்து விடும்.

ஆகவே, பணியிடத்தில் நமது மன நலன் குறித்து அக்கறை கொள்வது முக்கியமானது. பணியிடத்தில் மோசமான நாட்களை எதிர்கொள்ளும் சமயங்களில் கீழ்காணும் டிப்ஸ்களை நீங்கள் கடைப்பிடிக்கலாம்.

’முடியாது’ என சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் :

ஏற்கனவே, உங்கள் மனம் ஒருநிலையில் இல்லை என்கிறபோது, உங்கள் அன்றாட பணிகள் கூட சுமையை கொடுப்பதாக அமைந்து விடும். அத்துடன் கூடுதல் பணிகள் கொடுக்கப்பட்டால், அது உங்களுக்கு கூடுதல் நெருக்கடி தருவதாக அமையும். இது உங்கள் மன நலனை பாதிப்பதோடு, பணியின் தரத்தையும் கெடுத்து விடும். ஆகவே, பணி செய்ய உங்கள் மனம் தயாராக இல்லை என்கிறபோது நீங்கள் ‘முடியாது’ என மறுப்பதே சிறந்தது.



மனநல ஆலோசனை :

மனநல ஆலோசனை என்பது நம் சமூகத்தில் இன்றளவும் ஒவ்வாமையாகக் கருதப்படுகிறது. முன் பின் தெரியாத ஒரு நபரிடம் சென்று தங்கள் பிரச்சனைகளை கொட்டுவதற்கு மக்கள் தயங்குகின்றனர். இதற்குப் பதிலாக, சக ஊழியர்களிடம் பேசி, அவர்களிடம் உதவி கோருகின்றனர். இருப்பினும், நல்ல மனநல ஆலோசகரைச் சந்தித்து உங்கள் பிரச்சனைகளை பேசினால், அதற்கு எளிதான தீர்வுகள் கிடைக்கும்.

சோம்பேறித்தனமாக உணர்ந்தால் உடனே ஜப்பானியர்கள் இதைத்தான் செய்வார்களாம்..!

 

விடுமுறை எடுக்கலாம் :

பெரும்பாலான பணியிடங்களில் உங்கள் உடல்நிலை சரியில்லை என்றால் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், உங்கள் மனநலனும் முக்கியம் என்பதையும், அது உங்கள் உடல் நலனை பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, உங்கள் மன நலன், பணி செய்ய ஒத்துழைக்காத நாட்களில் விடுமுறை எடுத்துக் கொள்வது நல்லது.

உங்கள் மீது கவனம் செலுத்துங்கள் :

ஓய்வு எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் பணி செய்யலாம் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால், பிறகு உங்கள் மீது நீங்கள் கவனம் கொள்ளுங்கள். குறிப்பாக, அவ்வபோது பிரேக் எடுத்துக் கொண்டு, மீண்டும் புத்துணர்ச்சியோடு பணி செய்ய தொடங்கலாம். மனதிற்கு பிடித்தமானவற்றை செய்யுங்கள்.



சக ஊழியர்களுடன் இணைந்து இருங்கள் :

பணியிடத்தில் உங்களை சுற்றியுள்ள நபர்களுடன் நீங்கள் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி நேரில் பார்த்து, தொடர்ந்து தொடர்பில் இருக்கும் ஒருவரிடம் நீங்கள் நல்லதொரு உறவை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. நீங்கள் குழுவாக சேர்ந்து, புத்துணர்ச்சி பெறுவதற்கான காரியங்களை மேற்கொள்ளலாம். அவ்வபோது அரட்டை அடிப்பது கூட மனதுக்கு ரிலாக்ஸ் தருவதாக அமையும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Mental Stress, Office Work

அடுத்த செய்தி