ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகமாக இருக்கக் காரணம் என்ன தெரியுமா?

news18
Updated: August 10, 2018, 6:50 PM IST
ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் அதிகமாக இருக்கக் காரணம் என்ன தெரியுமா?
news18
Updated: August 10, 2018, 6:50 PM IST
கணவன் மனைவி சண்டையின் போது, ஆண்களில் டெஸ்டோஸ்டெரோன்(Testosterone) ஹார்மோன் அதிகமாக சுரப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். இவர்கள் தங்கள் மனைவியையோ, காதலியையோ ஏமாற்றுவார்கள் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறரை விட  நான் தான் சிறந்தவன் என நிரூபிக்க முயற்சிக்கும் போது ஆண்களின் டெஸ்டோஸ்டெரோன் சுரப்பில் மாற்றங்கள் நிகழ்கிறது. ஆண்களின் ஹோர்மோன் சுரப்பில் நிகழும் மாற்றங்கள் பாலியல் உறவின் தன்மையையும் தீர்மானிக்கும்.

``மனிதனின் உளவியல் மாற்றத்திற்கு ஹார்மோன்களே காரணம்.  `எண்டோகிரைன்’ (Endocrine System) என்ற அமைப்பே ஹார்மோன் சுரப்பை சுழலுக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்துகிறது. திருமணமான ஆண்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்று கட்டுப்பாடாக இருக்கும் ஆண்கள், குழந்தைகள் இருப்பவர்களுக்கு டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் அளவு குறைவாக இருக்கும் என்று முன்பு நடந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக’’ பிரிட்டிஷ் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் டேனி லாங்மென் கூறுகிறார்.

டெஸ்டோஸ்டெரோன் சுரப்பில் ஏற்படும் மாற்றம் சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுகிற மனநிலையை கொடுக்கிறது. உளவியலில் ஏற்படும் மாற்றத்தினால் தன் செக்ஸுவல் விருப்பத்திற்கு ஏற்றார்போல் இருக்கும் பிற பெண்களை கவர்கிறார்கள். அவர்களுடன் குறுகிய கால உறவு வைத்துக் கொள்ளவும் ஆண்கள் விரும்புகிறார்கள்.

பிரிட்டிஷ் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வை ஹியூமன் நேச்சர் பத்திரிகை வெளியிட்டது. இந்த ஆய்வில் சில சுவாரஸ்யமான போட்டிகளையும் ஆய்வாளர்கள் நடத்தியுள்ளனர். 20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு குழுவாகவும்  20 வயதுக்கு மேலுள்ள ஆண்கள் மற்றொரு குழுவாக பிரித்து போட்டிகளை நடத்தியுள்ளனர்.

ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் தனித்தனியாகப் போட்டியிட்டு, யார் அதிக பலசாலி என்பதை நிரூபிக்க வேண்டும். தன் மீதுள்ள சுயமதிப்பீட்டையும் வெளிப்படுத்த வேண்டும். ஆய்வின் போது, பெண்களை கவர்வதற்குத் தன்நம்பிக்கையுடன் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதையும், அப்போது அவர்களின் டெஸ்டோஸ்டெரோன் அளவையும் ஆய்வாளர்கள் அளவிட்டுள்ளனர்.

போட்டிக்கு முன்பும், போட்டி முடிந்த பின்பும் அவர்களின் ஹோர்மோன் சுரப்பில் ஏற்பட்ட மாற்றங்களையும் ஆய்வுக்குழு கண்காணித்து இந்த ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளனர்.

மற்ற ஆண்களை விட, இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோன் சுரப்பு  14.46% அதிகமாக இருந்தது. இவர்கள் பெண்களை கவர்வதிலும், பாலியல் உறவிலும் அதிக ஆர்வம் உள்ளவர்கள் என்றும் ஆய்வின் முடிவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...