கொரோனா வைரஸ் பற்றிய கண்ணோட்டம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் வேறுபடுகின்றன: ஆய்வில் கண்டுபிடிப்பு

பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு கொரோனா வைரஸ் குறித்து பெறப்பட்ட பதில்களில் உள்ள வேறுபாடு, பெண்கள் தலைமையிலான நாடுகள் நெருக்கடியின் போது சிறப்பாக செயல்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறது.

கொரோனா வைரஸ் பற்றிய கண்ணோட்டம் ஆண்கள் மற்றும் பெண்களிடம் வேறுபடுகின்றன: ஆய்வில் கண்டுபிடிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: October 17, 2020, 12:22 PM IST
  • Share this:
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பெண்கள் கொரோனா வைரஸை பற்றி ஆண்களை விட வித்தியாசமாக பதிலளிக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸின் நெருக்கடி குறித்த அவர்களின் அணுகுமுறைகளில் உள்ள வேறுபாடுதான், இந்த ஆய்வின் முடிவுகளால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸை கவலைக்குரிய காரணியாக கருதுவதால் பெண்கள் ஒருசில நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை, எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெண்கள் கொரோனா வைரஸ் குறித்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதை ஆய்வு நிரூபிக்கிறது என்று ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் உறுப்பினராக உள்ள எட்டு நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் கணக்கெடுக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும், இந்த சுகாதார நெருக்கடி குறித்த அணுகுமுறைகளில் பாலின அடிப்படையிலான வேறுபாடுகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது.


இந்த நடத்தை வேறுபாடுகள் இரண்டு பாலினங்களும் ஒன்றிணைந்த சூழ்நிலைகளில் அல்லது கொரோனா வைரஸால் நேரடியாக பாதிக்கப்பட்டால் மட்டுமே, ஓரளவு குறைவாக தெரியும். ஆகையால், இரு பாலினங்களுக்கிடையில் குறிப்பிடத்தக்க நடத்தை வேறுபாடு இருப்பதால், பாலினம் குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் தகவல்தொடர்புகளை உருவாக்குவது பற்றி, சுகாதார கொள்கை வகுப்பாளர்களை சிந்திக்க கட்டாயப்படுத்தும் ஒரு அத்தியாவசிய கண்டுபிடிப்பை இந்த ஆய்வு முன்வைக்கிறது.

Also read... கிரெடிட் கார்டு மூலம் பேடிஎம் வாலட்டை பணத்தை செலுத்துவதற்கு 2% கட்டணம்: பேடிஎம் அறிவிப்புகொரோனா வைரஸ் நெருக்கடி தோன்றியதிலிருந்து உலகச் செயல்பாட்டையே மாற்றியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 39 மில்லியன் ஆகும், அதே நேரத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் இறந்துள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள முதல் மூன்று நாடுகள்- அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகும். மேலும் இந்த நாடுகள் அனைத்தும் ஆண்களால் வழிநடத்தப்படுகின்றன.பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு கொரோனா வைரஸ் குறித்து பெறப்பட்ட பதில்களில் உள்ள வேறுபாடு, பெண்கள் தலைமையிலான நாடுகள் நெருக்கடியின் போது சிறப்பாக செயல்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறது. ஜசீண்டா ஆர்டெர்ன் மற்றும் ஏஞ்சலா மேர்க்கெல் போன்ற பெண் தலைவர்களின் கீழ் உள்ள நாடுகள் கொரோனா வைரஸின் நெருக்கடியை சிறப்பாக கையாண்டுள்ளன என்று ஒரு ஆய்வு முன்பு கூறியது.

மேலும் ஆண்கள் தலைமையிலான இந்த நாடுகளில் தான் பாதி மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அது கண்டறிந்துள்ளது. முன்னதாக நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதால், கொரோனா வைரஸின் பாதிப்பால் ஜசிந்தா ஆர்டெர்னின் கீழ் உள்ள நியூசிலாந்தில் 25 இறப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading