ஒவ்வொரு 90ஸ் கிட்ஸ்களுக்கும் பள்ளி நாட்களில் மிகவும் மறக்க முடியாத தருணம் மற்றும் அனுபவமாக இன்றும் நினைவில் இருப்பது பிறந்தநாள் விழாக்கள்.
குழந்தைப் பருவத்தில் பக்கத்து வீடுகள் மற்றும் தெருக்களில் வசிக்கும் குழந்தைகளின் பிறந்தநாள் மற்றும் நண்பர்களாக இருக்கும் குழந்தைகளின் பிறந்தநாள் என்றால் 90ஸ் கிட்ஸ்கள் செம குஷியாகி விடுவார்கள். ஏனென்றால் அன்று தான் அவர்கள் அழகான புத்தம் புதிய ஆடைகளை அணிந்து கொண்டு அம்மாக்கள் வீட்டில் தராத நொறுக்கு தீனிகளான கேக், குளிர்பானங்கள், சிப்ஸ்கள் மற்றும் சாக்லேட்டுகள் என அனைத்தையும் ஒரே சமயத்தில் வெளுத்து கட்டுவதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும். மேற்கண்ட நொறுக்கு தீனிகளை ஆரோக்கியமற்ற தின்பண்டங்கள் என 90ஸ் கிட்ஸ்களின் கண்ணில் காட்ட மாட்டார்கள் அவர்களின் அம்மாக்கள்.
அந்த நாட்களில் பிறந்தநாள் விருந்துகளுக்கு சென்றால் மட்டுமே இது மாதிரியான நொறுக்கு தீனிகளை ஆசை தீர சாப்பிட முடியும் என்ற அனுபவ நினைவலைகளுடன் வாழ்ந்து வருபவர்கள் 90ஸ் கிட்ஸ்கள். இந்நிலையில் ஒரு ட்விட்டர் யூஸர் சில தின்பண்டங்கள் நிறைந்த ஒரு பிளேட் ஃபோட்டோவை ஷேர் செய்து, உங்களுக்கு இதை பார்த்தால் ஏதேனும் சில ஃப்ளாஷ்பேக்குகள் இருக்கிறதா என்று கேட்டார். அவர் ஷேர் செய்துள்ள அந்த ஃபோட்டோவில் பிளேட்டில் ஒரு சமோசா, ஒரு பிளாக் ஃபாரஸ்ட் கேக் பீஸ், ஒரு நெஸ்லே மன்ச் சாக்லேட், கொஞ்சம் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் இருந்தன.
https://twitter.com/ipurpleBTSis7/status/1397800179722448897
நொறுக்கு தீனிகள் அடங்கிய பிளேட்டை பார்த்த பல 90ஸ் கிட்ஸ் ட்விட்டர் யூஸர்களும் அந்த ட்வீட்டுக்கு பதிலளித்தனர் மற்றும் அதனுடன் தொடர்புடைய அவர்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். பலர் தங்கள் சுற்றுப்புறத்திலோ அல்லது பள்ளியிலோ விருந்துகளில் கலந்து கொண்டு இதே நொறுக்கு தீனிகள் அடங்கிய பிளேட்டை பெற்றுள்ளதாக குறிப்பிட்டனர். ஒரு யூஸர் தனது அனுபவம் பற்றி கூறுகையில் கேக்கில் இருக்கும் கிரீம் பிளேட்டில் உள்ள சமோசா அல்லது சிப்ஸில் ஒட்டி கொள்ளும். முழுதாக கேக்கை கிரீமுடன் சேர்த்து சுவைக்க முடியாமல் போன தருணங்களை வெறுப்பதாக குறிப்பிட்டுள்ளார். மற்றொரு யூஸர் இந்த தருணத்தில் நீங்கள் Fanta அல்லது Sprite உள்ளிட்ட கூல் டிரிங்க்ஸை மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/yaegerkoo/status/1397806933596200962
https://twitter.com/Jamaiswoomebish/status/1397841459156373504
மற்றொருவர் கேக்கில் இருக்கும் கார்ட்டூனின் முகத்துடனோ அல்லது அதில் உண்ணக்கூடிய டெக்கரேட்டிவ் பொருள் எனக்கும் வேண்டும் என்பதற்காக நான் சண்டையிட்டதில்லை என்று வேடிக்கையாக தெரிவித்துள்ளார். மற்றொரு யூஸர் என்ன பிளேட் மிகவும் க்ளீனாக இருக்கிறது. ஆனால் நான் எப்போதும் புளிப்பு,கிரிஸ்பி , கிரீமி மற்றும் கலந்து பிளேட்டில் இருக்கும் அனைத்தும் ஒரு குளோப்ஜாமுன் ஜீராவில் ஊறி இருக்கும் தின்பண்டங்களையே கையில் பெறுவேன் என்று குழந்தை பருவத்தின் வேதனையை பகிர்ந்துள்ளார். மற்றொரு யூஸர் மன்னிக்கவும், உங்கள் சிப்ஸ்கள் ஏன் கிரீம் படாமலும், சமோசா கேக்கால் மூடப்படாமலும் உள்ளது. இது நமது வேதனையான குழந்தை பருவ கலாச்சாரத்தின் தவறான பிரதிநிதித்துவம் என்று கூறி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Happy BirthDay