முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Mission Paani: ராஜஸ்தான் மக்களின் தாகம் தீர்த்த அமலா ருயா

Mission Paani: ராஜஸ்தான் மக்களின் தாகம் தீர்த்த அமலா ருயா

அமலா ருயா

அமலா ருயா

அமலாவின் தொண்டு நிறுவனம் 2006 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் 317 அணைகளைக் கட்டியுள்ளது. இதனால் ராஜஸ்தானில் இருக்கும் 182 கிராமங்களும் நேரடியாக பலனடைகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று இயற்கை வளங்களின் தேவைகளையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும் அவசியத்தை கற்றுக்கொடுத்துவிட்டது. இந்தியாவின் பல பகுதிகளில் இன்னும் குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது என்றால் மிகையல்ல. அதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது ராஜஸ்தான்.

உத்திரபிரதேசத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் அமலா ரூயா. இவர் 1998 ல் ராஜஸ்தானின் கடுமையான வறட்சியின்போது வெளியான பயங்கரமான படங்கள் மூலம் இந்த பிரச்சினையின் மோசமான விளைவுகளை உணர்ந்து இந்த உதவி செய்யும் எண்ணம் தோன்றியுள்ளது .

அங்கு வசிக்கும் மக்கள், இவரால் பல நன்மைகளைக் அடைந்துள்ளனர். அவர் அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்துள்ளார். அங்கு Aakar Charitable Trust என்னும் தொண்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் முற்றிலும் தண்ணீர் பெற இயலாத கிராமங்களுக்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இந்த தொண்டு நிறுவனம் 200 குடிநீர் தொட்டிகளை உருவாக்கியுள்ளது. பாரம்பரியமாக தண்ணீர் சேகரிக்கும் பகுதிகளிலிருந்து குடிநீரை சேமித்து வருகின்றனர். இதன் மூலம் வருடத்திற்கு 1 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்கின்றனர். இந்த தண்ணீரை அரசாங்கத்தால் வழங்க முடியாத கிராமங்களுக்குச் சென்று கொடுக்கின்றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தொட்டிகளின் செலவுக்கு 25% நிதியை அளிக்கின்றனர்.

அமலாவின் தொண்டு நிறுவனம் 2006 முதல் 2018 வரையிலாக காலகட்டத்தில் 317 அணைகளைக் கட்டியுள்ளது. இதனால் ராஜஸ்தானில் இருக்கும் 182 கிராமங்களும் நேரடியாக பலனடைகின்றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அமலா தண்ணீர் வசதி செய்து கொடுப்பது மட்டுமன்றி அவர்களுடைய வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தியுள்ளார். அவர்களை வறுமை கோட்டிலிருந்து மீட்டெடுத்துள்ளார். மொத்தமாக 4,82,900 மக்கள் நேரடியாகவும் , மறைமுகமாகவும் அந்த அணைகளின் நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்தின் இறுதியில் 11 கோடி நன்கொடையாகவும், 4.7 கோடி அங்கு வசிக்கும் கிராம மக்களாலும் கொடுக்கப்பட்டது. இந்த அணைகள் மூலம் பல மைல் தூரம் நடந்து தண்ணீர் கொண்டு வரும் பெண்களின் துயரங்களை தீர்த்துள்ளார் அமலா. இந்த தண்ணீர் மூலம் மக்கள் மட்டுமன்றி விவசாயமும் அதிகரித்துள்ளது. கால்நடைகளின் வளர்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த மாற்றம் அங்குள்ள கிராம மக்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தியுள்ளது. Aakar Charitable Trust கூற்றுப்படி அந்த கிராம மக்கள் தற்போது ஆண்டு வருமானமாக 500 கோடி ஈட்டுவதாக கூறுகிறது. இந்த வருமானத்திலிருந்து கிராம மக்கள் அணைகளின் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவுகளுக்கு பங்களிப்பதாகவும் கூறுகின்றனர். இந்த தொண்டு நிறுவனம் ராஜஸ்தான் மக்களின் கல்வி செலவுகளுக்கும் உதவி செய்வது குறிப்பிடத்தக்கது.

ஹார்பிக் - நியூஸ் 18 மிஷன் பானி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நீங்களும் இணையுங்கள். தண்ணீரைச் சேமிப்பதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் வாட்டர்டானின் புதிய அப்டேட்டுகளுக்கு இங்கே பார்க்கவும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Mission Paani, Save Water, Water Crisis