முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / எதிர்மறை எண்ணங்களை குறைத்துக்கொண்டால் முதுமையில் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம் - ஆய்வு

எதிர்மறை எண்ணங்களை குறைத்துக்கொண்டால் முதுமையில் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம் - ஆய்வு

எதிர்மறை எண்ணங்கள்

எதிர்மறை எண்ணங்கள்

எதிர்மறை எண்ணங்கள், பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை நரம்பியல் சார்ந்த நோய்கள் மற்றும் டிமென்ஷியா என்ற மறதி நோயை உண்டாக்க கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண்ணங்கள் தானாகவே வருவதில்லை, நாம் எதையாவது யோசித்துக் கொண்டு இருக்கும் போது ஏற்படும் அல்லது உருவாகும் சிந்தனைகளின் அதிர்வுகளால் அந்த எதிர்மறைத்தாக்கம் அதிகம் அமைந்தால் அதை தான் எதிர்மறை எண்ணங்கள் என்கிறோம்.

எதிர்மறை எண்ணங்கள், பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை நரம்பியல் சார்ந்த நோய்கள் மற்றும் டிமென்ஷியா என்ற மறதி நோயை உண்டாக்க கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா பல்கலைக்கழகத்தின் (UNIGE) நரம்பியல் விஞ்ஞானிகள், உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது இளம் மற்றும் வயதானவர்களின் மூளை செயல்படுவதைக் கவனித்துள்ளனர். அவர்களின் ஆய்வின்படி, உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வயதானவர்களின் மூளையில் எதிர்மறை உணர்ச்சிகளின் தாக்கம் குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனால் எதிர்மறை உணர்ச்சிகளை எதிர்கொள்வது மோசமான விளைவுகளை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

உணர்ச்சிகளை விரைவாக மாற்றும் திறன் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை பயக்கும் என்பதை உளவியலில் முந்தைய ஆய்வுகள் காட்டுகிறது. ஆனால் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் மற்றும் நீண்ட நேரம் அதே உணர்ச்சி நிலையில் இருப்பவர்கள் மன அழுத்தத்தின் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உணர்ச்சிகரமான காட்சிகளைப் பார்த்த பிறகு மனித மூளையின் எதிர்வினை மற்றும் அந்த உணர்வில் இருந்து விடுபடும் மீட்பு வழிமுறைகளை மதிப்பிடுவதற்காக, 65 வயதுக்கு மேற்பட்ட 27 பேர் கொண்ட குழுவை சுமார் 25 வயதுடைய 29 பேர் கொண்ட குழுவுடன் ஒப்பிட்டு, சில ஷார்ட் ஃபிலிம் வீடியோ கிளிப்களைக் காண்பித்துள்ளனர். உதாரணமாக இயற்கை பேரழிவு அல்லது துயர சூழ்நிலை நடுநிலை உணர்ச்சி போன்ற வீடியோக்கள் காண்பிக்கப்பட்டு MRI- ஐ ஸ்கேன் பயன்படுத்தி அவர்களின் மூளையின் செயல்பாட்டைக் கண்காணித்துள்ளனர்.

அதே பரிசோதனையானது வயதான 127 பெரியவர்களுடன் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டதாக கூறும் விஞ்ஞானிகள், வயதானவர்கள் பொதுவாக இளம் வயது உடையவர்களிடமிருந்து மாறுபட்ட மூளை செயல்பாடுகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Also Read : குளிர்காலத்தில் முதியவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிப்பது அவசியம்..!

கடந்த 20 ஆண்டுகளாக மனிதனின் மூளை உணர்ச்சிகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைக் கவனித்து வருவதாக் கூறும் டாக்டர் ஓல்கா கிளிமெக்கி, மனிதனின் மூளை உணர்ச்சி தூண்டுதலை உணரும் தருணத்தில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ளத் தொடங்குகிறோம் என்று கூறும் அவர், மூளை ஒரு உணர்ச்சியிலிருந்து மற்றொன்றுக்கு எப்படி மாறுகிறது? அது எப்படி அதன் ஆரம்ப நிலைக்குத் திரும்புகிறது? வயதுக்கு ஏற்ப உணர்ச்சி மாறுபாடு மாறுமா? உணர்ச்சிகளை தவறாக நிர்வகிப்பதால் மூளைக்கு என்ன விளைவுகள் ஏற்படும்? அதன் பிறகு மூளையின் செயல்பாடுகள் என்ன நடக்கிறது என்பது ஒரு மர்மமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எதிர்மறை எண்ணங்களை விரட்டுவது எப்படி?

நெருங்கிய உறவு அல்லது நட்பு வட்டத்தில் எதிர்மறையான எண்ணங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டால் அவை பாதியாக குறையும். எதிர்மறை எண்ணங்களைச் சமாளிப்பதற்கான ஒரு வழி, மற்றவருக்கு உதவுவதில் கவனம் செலுத்துவதாகும். வேறொருவருக்கு உதவுவதன் மூலம், உங்கள் வாழ்க்கையில் நேர்மறையைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை நீங்களே வழங்குகிறீர்கள்.

மற்றவருக்கு உதவுவது உங்களுக்கு நீங்களே உதவுவதற்கான சிறந்த வழியாகும். நடக்காது, கிடைக்காது என்பது போன்ற எதிர்மறை வார்த்தைகளைப் பேசாதீர்கள். நடக்கும் என்று நம்புங்கள். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கை கொள்ளுங்கள். நடக்கவில்லையென்றாலும், இதுவும் நன்மைக்கே என்று நேர்மறையாக கருதுங்கள்.

First published:

Tags: Life Tips