HOME»NEWS»LIFESTYLE»lucky stone according to zodiac sings esr ghta

உங்கள் ராசிக்கான லக்கி சார்ம் கற்கள் எது தெரியுமா...?

நம் கைவிரல்களில் அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

உங்கள் ராசிக்கான லக்கி சார்ம் கற்கள் எது தெரியுமா...?
மாதிரி படம்
  • Share this:

ஒவ்வொரு ராசி மற்றும் கிரகத்திற்கு ஏற்ற கற்களை நமக்கு ஜோதிட சாஸ்திரம் வழங்கியிருக்கிறது. நவரத்தினக் கற்களை ஜாதக ரீதியான அணுகுமுறையில் ஆராய்ந்து நாம் அணியவேண்டும். அதுவே நமக்கு நன்மையைக் கொடுக்கும். ஒவ்வொருவருடைய லக்னம் என்ன? அவரின் ராசி என்ன? என்ன தசா புத்தி நடக்கிறது? எந்தந்த கிரகம் பலமாக இருக்கிறது? என்னென்ன காரியங்களுக்காக நாம் அணிய வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பது நமக்கு நன்மையைக் கொடுக்கும்.

'தன் கையே தனக்கு உதவி' என்பது ஆன்றோர் மொழி. நம் கைகள் தான் நம் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன. மேலும், நம் கைவிரல்களில் அணியும் ராசிக்கல் மோதிரமானது, நமக்கு கூடுதல் பலம் தந்து நமக்கு சாதகமான சூழல்களை உருவாக்கி, நம்மை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. அந்த வகையில் 12 ராசிக்கார்களுக்கும் உரித்தான லக்கி கற்களை இப்போது காண்போம்.

ராசிக்காரர்கள் லக்கி சார்ம் கற்களை அணியும் முறைகள்:



கட்டைவிரலில் பொதுவாக மோதிரம் அணிவதைத் தவிர்ப்பது நன்மையைக் கொடுக்கும். ஆட்காட்டி விரலில் குருவினுடைய புஷ்பராக கல், செவ்வாயினுடைய பவளம் அணிவது நல்லது. நடுவிரலில் நீலம் மற்றும் அமிதிஸ்ட் கல்லை அணிவது நன்மையைக் கொடுக்கும். வைரத்தை மோதிர விரலில் அணிவதால் நன்மைகள் பெருகும். சுண்டுவிரலில் பச்சை அல்லது வைரம் அணிவது சிறப்பு. ராகு கேதுவிற்கு கல் மோதிரம் அணிவது தொடர்பாக ஜாதகத்தைப் பார்த்து முடிவெடுப்பதே சிறந்தது.



மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் அணியவேண்டிய ராசிக்கல் பவளம். மேலும் செவ்வாய் திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம் . இதை அணிந்தால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். நம் கோபத்தைக் குறைத்து மனநிம்மதியைத் தரும். பல்வேறு அதிர்ஷ்டங்களைத் தரும். நல்லறிவையும், துணிவையும் கொடுக்கும். தீய சிந்தனைகளை நம் மனதுக்குள் அனுமதிக்காது. நமக்கு தைரியத்தை கொடுக்கும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு ராசியான எண்கள் 1, 6.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்கள் அணியவேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இதை அணிந்தால் நல்ல மகிழ்ச்சி கிட்டும். வசீகரமான தோற்றத்தைத் தரும். அதிர்ஷ்டத்தை உருவாக்கும். உடல் மற்றும் மனதுக்கு நல்ல உரமேற்றக் கூடியது. வெற்றி, செல்வம், அதிர்ஷ்டம் போன்றவற்றை கொடுக்கக் கூடியது . நமக்கு தன்னம்பிக்கையைத் தரக் கூடியது. ராசியான நிறம் மஞ்சள், நீலம், வெள்ளை ராசியான எண்கள்: 2, 6.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் புதன் திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் தரும். நல்ல கற்பனை வளத்தைக் கொடுக்கும். மலட்டுத்தன்மையைப் போக்கும். தீய சக்திகளிடம் இருந்து நம்மைக் காக்கும். நல்ல கல்வியைக் கொடுக்கும். பேச்சாற்றல் வளரும். நினைவாற்றலைப் பெருக்கும். ராசியான நிறம் மஞ்சள், பச்சை. ராசியான எண்கள்: 5, 9.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. மேலும் சந்திர திசை நடப்பவர்களும் முத்து அணியலாம். இது செல்வ விருத்தியைக் கொடுக்கும். அமைதியையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் தரும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமையைத் தரும். நீண்ட ஆயுளைத் தரும். உறவுகளை வலுப்படுத்தும். நட்பினைப் பாதுகாக்கும். ராசியான நிறம் வெள்ளை, நீலம். ராசியான எண்கள் 1,7.



சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். மேலும் சூரிய திசை நடப்பவர்களும் மாணிக்கம் அணியலாம். இது மிகுந்த அதிர்ஷ்டத்தைத் தரும். வாழ்வில் உயர்வைத் தரும். புத்திசாதுர்யத்தைத் தரக் கூடியது. நீண்ட ஆயுளைக் கொடுக்கும். மன உறுதியையும், தன்னம்பிக்ககையையும் தரும். கருத்து வேறுபாடுகளை போக்கும். நல்ல தூக்கத்தைத் தரும். உணர்ச்சி வசப்படுதலைக் கட்டுப்படுத்தும். ராசியான நிறம் வெள்ளை, மஞ்சள், பச்சை. ராசியான எண்கள் 3, 5.

இந்த 5 ராசிக்காரர்களுக்கு கன்னாபின்னா கோபம் வருமாம்.. உங்களுக்கு பிடிச்சவங்களும் இதில் இருக்காங்களா..?

கன்னி:

கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் மரகதம் அணியலாம். இது தொழில் விருத்தியையும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது. மலட்டுத் தன்மையைப் போக்கும். காதல் உணர்வைத் தரும். சிறந்த கல்வியைக் கொடுக்கும். பில்லி, சூனியங்களில் இருந்து நம்மைக் காக்கும். பேச்சாற்றலை வளர்க்கும். உடல் வளர்ச்சி பெரும். மரகதக் கல்லை உற்று நோக்கினாலே புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ராசியான நிறம் பச்சை, மஞ்சள் ராசியான எண்கள் 2, 7.

துலாம்:

துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். மேலும் சுக்கிர திசை நடப்பவர்களும் வைரம் அணியலாம். இது மகிழ்ச்சியையும், யோகத்தையும் தரக்கூடியது. நல்ல வசீகரத்தைத் தரும். நெஞ்சுறுதியைத் தரும். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆண்-பெண் உறவை வலுப்படுத்தும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். பிறருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைப் போக்கும். பேச்சாற்றலைத் தரும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம். ராசியான நிறம் வெள்ளை, இளஞ்சிவப்பு, ராசியான எண்கள் 3, 6.

விருச்சிகம்:

விருட்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். மேலும் செவ்வாய் மற்றும் கேது திசை நடப்பவர்களும் பவளம் அணியலாம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிட்டும். கோபம் குறையும். அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல துணிச்சலைத் தரும். பொறாமை, வெறுப்பு போன்ற தீய குணங்களைப் போக்கி ஞானத்தைக் கொடுக்கும். பயத்தைப் போக்கும். தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும். பதவி உயர்வு கிடைக்கும். ராசியான நிறம் ஆரஞ்சு, ஊதா. ராசியான எண்கள் 1,9.



தனுசு :

தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். குரு திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் மன நிம்மதியைக் கொடுக்கும், நல்ல செல்வத்தைக் கொடுக்கும். இந்தக் கல் அணிவது நமக்கு கம்பீரத்தைக் கொடுக்கும். துணிச்சல் பிறக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடை நீங்கும். வீடு கட்டும் வாய்ப்பு உண்டாகும். பெரும்புகழ் கிடைக்கும். சூழ்ச்சிகளில் இருந்து நம்மை விடுவிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். மேலும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம். இதை அணிந்தால் சமூகத்தில் நம் செல்வாக்கு உயரும். தெய்வீக சிந்தனையைத் தரும். நல்ல செல்வ வளத்தைக் கொடுக்கும். நல்ல பண்புகளைக் கொடுக்கும். உடல்பலத்தை அதிகரிக்கும் . ஆழ்மனது தெளிவை கொடுக்கும். பகையைப் போக்கக் கூடியது. மகர ராசிக்காரர்களுக்கு ராசியான நிறம் நீலம், இளஞ்சிவப்பு ராசியான எண்கள் 2,6.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது நீலக்கல். ராகு மற்றும் சனி திசை நடப்பவர்களும் நீலக்கல் அணியலாம் இதை அணிவதால் செல்வ வளம் பெருகும். சமூகத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும். உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரவல்லது. தியானத்துக்கு உகந்தது. திருமண உறவை மேம்படுத்தும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். பெருந்தன்மையை வளர்க்கும். ராசியான நிறம் சிவப்பு, பச்சை. ராசியான எண்கள்: 2,9. திருஷ்டியைத் தடுக்கும். ஞானம், சாந்தம் கொடுக்கும்.

மீனம் :

மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்பராகம். வியாழன் திசை நடப்பவர்களும் கனக புஷ்பராகம் அணியலாம். இதை அணிந்தால் செல்வ விருத்தியைக் கொடுக்கும். தோற்றத்தில் கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிட்டும். திருமணத் தடை நீங்கும். கோபம் குறையும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பைக் கொடுக்கும்.

மேற்சொன்ன ராசிக்காரர்கள் அவர்களுக்கே உரித்தான எண்கள், நிறங்கள் போன்ற பல அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் ராசி கற்களை அணிந்திருந்தால் வாழ்வில் ஏற்றத்தை பெறலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sivaranjani E
First published: