• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இன்று என்ன சமைக்கலாம்... யூடியூப்பில் ஆராயும் இல்லத்தரசிகள்... உதவும் ஆண்கள்!

இன்று என்ன சமைக்கலாம்... யூடியூப்பில் ஆராயும் இல்லத்தரசிகள்... உதவும் ஆண்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

வீடுகளில் போண்டா, பஜ்ஜி, வடை, சிப்ஸ், மட்டுமல்லாது பெயர் தெரியாத பலவகையான நொறுக்குபண்டங்களும் தயாராகின்றன.

  • Share this:
    கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, மக்கள் வெளியில் நடமாடாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஆண்களும், பெண்களும் தங்கள் பங்குக்கு சமையலில் அசத்தி வருகின்றனர் என்றால் அது மறுப்பதற்கில்லை எனலாம்.

    ஊரடங்கு காரணமாக சிலர் வீட்டிலே அலுவலக வேலைகளை செய்கின்றனர். சிலர் வீட்டு வேலையில் மூழ்கிக்கிடக்கின்றனர். வழக்கமான சாப்பாடு, கடையில் வாங்கிய நொறுக்குத்தீனிகளை அரைத்துக்கொண்டிருந்த அனைவரின் வாயில் தினம் தினம் சுவையான புதுப்புது உணவு ஐட்டங்கள் செல்கின்றன.

    வீட்டில் இருக்கும் கணவன்மார்கள் , தங்கள் மனைவியை வெரைட்டியான உணவு வகைகளை யூடியூப்பில் இருந்து எடுத்து காண்பித்து செய்ய சொல்லி சாப்பிடுகின்றனர். இன்னும் ஒருபடி மேலே போய், யூடியூப்பில் புது புது சமையல் குறிப்புகளை பெற்று பெண்கள் தங்கள் வீட்டாருக்கு சர்ப்ரைஸ் விருந்து கொடுக்கின்றனர்.

    மனைவிக்கு உதவியாக கணவன் காய்களை நறுக்குவது, வெங்காயம் உரிப்பது என சிற்சில உதவிகளையும் செய்து வருகின்றனர். போண்டா, பஜ்ஜி, வடை, சிப்ஸ், மட்டுமல்லாது பெயர் தெரியாத பலவகையான நொறுக்குபண்டங்களும் தயாராகின்றன.

    வீடடங்கி போன ஆண்கள், இப்போது தங்கள் கைவண்ணத்தை நேரில் கண்டு வியந்து பாராட்டி வருவதாக  பெண்களே சொல்கின்றனர்.

    இன்னும் குட்டீஸ் உள்ள வீடுகளில் தந்தையிடம் கதை சொல்லியும், பட்டம்  உள்ளிட்டவற்றை செய்ய சொல்லியும் வற்புறுத்துவதால், யூடியூப் தளங்களில் பார்த்து செய்து கொடுக்கின்றார்கள்.

    எது எப்படியோ, வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருந்த நடுத்தர மக்களின் வாழ்க்கை குடும்பம் இருப்பதை சற்று உணர்த்திவிட்டது இந்த கொரோனா ஊரடங்கு...

    தினம் தினம் யூடியூப்பில் சமையல் தொடர்பாக தேடப்படுவதால், ட்ரெண்டாகும் வீடியோ பட்டியலில் சமையல் வீடியோக்கள் ஆக்கிரமித்துள்ளன. உங்களுக்காக சில வீடியோக்களை பட்டியலிட்டுள்ளோம்...

     







     













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: