முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோடைகாலத்தில் கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு

கோடைகாலத்தில் கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் அதிகம் - ஆய்வு

 கருச்சிதைவு

கருச்சிதைவு

கர்ப்பம் அடைந்து 20 வாரங்களைக் கடந்திராத பெண்களில் 30 சதவீதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தலைசுற்றல், மயக்கம் போன்ற உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் என்பது நாம் பரவலாக கேள்விப்பட்ட விஷயம் தான். ஆனால், இதையெல்லாம் தாண்டி, கர்ப்பினிகளுக்கு கருச்சிதைவு கூட ஏற்படலாம் என்கிறது ஒரு ஆய்வு. அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழக பொது சுகாதார ஆராய்ச்சி பிரிவு வெளியிட்டுள்ள ஆய்வில் இத்தகைய அதிர்ச்சிக்குரிய தகவல் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பம் அடைந்து 20 வாரங்களைக் கடந்திராத பெண்களில் 30 சதவீதம் பேருக்கு கருச்சிதைவு ஏற்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலும் கருச்சிதைவு பிரச்சினைக்கு சரியான காரணம் கண்டறியப்படாமலேயே அதை கடந்து சென்று விடுகிறோம். ஆனால், கருச்சிதைவுக்குப் பிறகு மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

8 மாதங்களுக்குள் கருச்சிதைவு

வட அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் கோடை காலத்தில் 44 சதவீத கர்ப்பிணி பெண்களுக்கு 8 வார கர்ப்பத்திற்குள்ளாக கருச்சிதைவு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கருத்தரிப்போருக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என ஆய்வு தெரிவிக்கிறது.

கோடைகாலம் மிக உக்கிரமாக இருக்கும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் முறையே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர ஆய்வு தேவை

எனினும் எதிர்பார்க்கப்படாத திடீர் கருச்சிதைவுக்கு பின்னால் உள்ள உண்மையான காரணங்களைக் கண்டறிவதில் இன்னும் அதிகமான ஆய்வு தேவைப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆய்வுக் குழுவின் தலைவரும், தொற்றா நோய் ஆராய்ச்சி பிரிவின் உதவிப் பேராசிரியருமான மருத்துவர் அமீலியா வெஸ்லிங்க் கூறுகையில், “கருச்சிதைவு அபாயம் என்பது, குறிப்பாக 8 வாரங்களுக்கு உள்ளான கர்ப்பிணி பெண்களிடம் கருச்சிதைவு அபாயம் கூடுதலாக இருக்கிறது. கோடைகாலத்தில் இவர்களுக்கு எதனால் கருச்சிதைவு ஏற்படுகிறது என்ற காரணத்தை இன்னும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது’’ என்று கூறினார்.

குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் ஆண்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

ஆய்வில் பங்கேற்ற 6,104 பெண்கள்

கருச்சிதைவு மற்றும் இதர பிரச்சினைகள் தொடர்பான ஆய்வில் மொத்தம் 6,104 பெண்கள் பங்கேற்றனர். இவர்களது உடல்நிலை அறிக்கை, மருத்துவ வரலாற்று அறிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்தம் 12 மாதங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

பெண்கள் கர்ப்பம் அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பருவ கால மாற்றங்களால் ஏற்படும் கருச்சிதைவுகளை புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

எடை குறைவு, குறைப்பிரசவம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்

கோடைகாலத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு பிரச்சினை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் குழந்தை எடை குறைவாக பிறப்பது, குறைப்பிரசவம் நிகழ்வது போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது, பருவகால மாற்றங்களை எதிர்கொள்ள தயாராவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக கருச்சிதைவை தடுக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

First published:

Tags: Pregnancy Miscarriage, Summer Heat