எல்ஜி எக்ஸ்4 ஸ்மார்ட்போன் அறிமுகம்

news18
Updated: March 7, 2018, 10:12 PM IST
எல்ஜி எக்ஸ்4  ஸ்மார்ட்போன் அறிமுகம்
news18
Updated: March 7, 2018, 10:12 PM IST
சர்வதேச அளவில் எலெக்ட்ரானிக் சந்தையில் முன்னணியில் உள்ள எல்ஜி நிறுவனம்   எக்ஸ் 4 என்ற  புதிய  ஸ்மார்ட்போனை  அறிமுகப்படுத்தியுள்ளது. எக்ஸ் 4 பிளஸ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து தற்போது இந்த புதிய போனை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில்  5.3 இன்ச் ஹெச்டி திரை, ஸ்னாப்டிராகன் 425 சிப்செட், ஆன்ட்ராய்டு 7.1 நெளக்கட், 8 எம்பி பின்பக்க கேமரா, 5 எம்பி செல்பி கேமரா ஆகிய வசதிகளை கொண்டிருக்கிறது.  மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை மூலம் செயல்படுத்தும் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.  இந்த சென்சார் மூலம் ஸ்மார்ட்போனை அன்லாக் செய்வது மட்டுமின்றி செல்பி கேமராவினை இயக்கமுடியும்.  3000 எம்ஏஹெச் பேட்டரி திறன் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


கருப்பு மற்றும் தங்க நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்  கிடைக்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.17,780 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தைக்கு வர இருக்கிறது
First published: March 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்