• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா பாஸிட்டிவாகாமல் இருக்க மனதளவில் பாஸிட்டிவாக இருப்போம் - சைக்காலஜிஸ்ட் அபிலாஷா!

கொரோனா பாஸிட்டிவாகாமல் இருக்க மனதளவில் பாஸிட்டிவாக இருப்போம் - சைக்காலஜிஸ்ட் அபிலாஷா!

நேர்மறை எண்ணத்தை அதிகரிப்போம்.

நேர்மறை எண்ணத்தை அதிகரிப்போம்.

ஒருவருக்கொருவர் நேர்மறையான வார்த்தைகளை பகிர்ந்துக் கொள்வது, மிகப்பெரிய வித்தியாசத்தை உணர வைக்கும்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் கோரத்தாண்டவத்தை நாள்தோறும் கடந்துக் கொண்டிருக்கிறோம். முதல் அலையைப் போல் அல்லாமல், வயது, உடல்நிலை என எந்த வித்தியாசமும் இன்றி போகிற போக்கில் எல்லோரையும் சீண்டி விட்டு செல்கிறது இந்த கொரோனா இரண்டாம் அலை.

ஆக்ஸிஜன், படுக்கை என மருத்துவ உதவி கேட்டு ஒருபுறம் எழும் குரலுக்கு மறுபுறம் உதவிக்கரங்கள் நீள்கின்றன. அதே நேரத்தில் குடும்ப உறுப்பினர், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் என கொரோனாவால் பாத்திக்கப்பட்டோர் மட்டுமின்றி இப்படி பலரை இழந்தும் நிற்கிறோம். இதைப் படிக்கும் நீங்கள் கூட கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கலாம். நெருக்கமானவர்களை இழந்து தவிக்கும் அந்த தருணம், எத்தனை வலிமையான மனதையும் பதம் பார்த்து விடுகிறது. முதன்முறையாக வாழ்க்கை மீதான ஒருவித பயத்தை ஒவ்வொரு நாளும் நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கிறோம். இதை உளவியல் ரீதியாக எப்படி அணுகுவது என சைக்காலஜிஸ்ட் அபிலாஷாவிடம் கேட்டோம்…

முதலில், ஒரு வருடத்துக்கும் மேல் கொரோனா தொற்றில் இருப்பதால் சிலர் இதற்கு பழகிவிட்டார்கள். ஆனால் சீக்கிரம் சரியாகி விடும், சரியாகி விடும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்ததால், சிலர் தற்போது இன்னும் பயந்துக் கொள்கிறார்கள். இரண்டாவதாக, இது வரைக்கும் பொருளாதார ரீதியாக தாக்குப் பிடித்தவர்கள், பழைய நிலைமையை அடைய இன்னும் நாளாகுமா என அதிர்ச்சியாகியிருக்கிறார்கள். மூன்றாவது, குடும்பத்தில் எல்லாரும் வீட்டில் இருக்கிறார்கள். குழந்தையை பள்ளி / கல்லூரி சேர்க்க வேண்டும், அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி பெற்றோரை அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

போதாக்குறைக்கு இறப்பு விகிதம் அதிகமாவது, சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள், வட இந்தியாவின் சூழல் போன்றவை எல்லாம் நம்மை அதிக பயத்துக்கு ஆளாக்குகின்றன. இதையெல்லாம் நமது பாஸிட்டிவிட்டியால் தான் வெல்ல முடியும். கொரோனா வருவதற்கு முதல் காரணம், நோயெதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பது தான். இது எப்படி குறையும் என்றால், நாம் பயந்தாலே குறையும். நீங்கள் என்ன தான் சத்தாக சாப்பிட்டு, ஓய்வெடுத்து மற்ற கொரோனா நெறிமுறைகளை மிகச் சரியாக பின்பற்றினாலும், மனதில் பயம் என்ற ஒன்று இருந்தால், தானாக நோயெதிர்ப்பு தன்மை குறைந்துவிடும். இன்னும் சிலர் நமக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் தற்கொலை கூட செய்துக் கொள்கிறார்கள். அதனால் முதலில் பயத்தில் இருந்து வெளியில் வர வேண்டும்.

corona second wave Throw away the fear Lets beat the corona with positivity Psychologist Abhilasha
சைக்காலஜிஸ்ட் அபிலாஷா


அடுத்ததாக, ஒருவருக்கொருவர் நேர்மறையான வார்த்தைகளை பகிர்ந்துக் கொள்வது, மிகப்பெரிய வித்தியாசத்தை உணர வைக்கும். இத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதை விட்டுவிட்டு, இத்தனை பேர் மீண்டு வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி பேசலாம். இத்துடன் உங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நம்ம வீட்டு நபர்களுக்கு கொரோனா வந்து விடுமோ என்ற பயமும், பதட்டமும் சில வீட்டு பெண்களுக்கு வரக்கூடும். இது அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சைக்கலாஜிகல் கவுன்சிலிங் தேவைப்படலாம். குழந்தைகளை ஊக்குவிக்க உலகப்போர், போலியோ, சுனாமி என நாம் மீண்டு வந்த கதைகளை நிறைய சொல்லலாம். ஏனென்றால் குழந்தைகள் உள்ளுக்குள் உடைந்துப் போவதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. பின்னர் அவர்களை மீட்பது கடினமாகி விடும். அதனால் குடும்பமாக நம்மால் எவ்வளவு வலிமையாக இருக்க முடியுமோ, அந்தளவுக்கு ஒருவருக்கொருவர் வலிமையாக இருத்தல் அவசியம். சிலருக்கு தினமும், எத்தனை புதிய தொற்று, இறப்பு என்பதை பார்ப்பதே வாடிக்கையாகியிருக்கும். அதையெல்லாம் பார்த்து இன்னும் குழம்பிப் போகாமல், செய்தி பார்ப்பதை குறைத்து, மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

இதற்கடுத்ததாக தொழில் முடங்கிவிட்டது என நினைப்பவர்கள், அரசு அமல்படுத்தும் ஊரடங்கால் உங்கள் ஒருவரின் தொழில் மட்டும் பாதிக்கவில்லை, நம்மைப் போல் தான் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயம் எனக்கு மட்டுமல்ல என்ற எண்ணமே நம்மை கொஞ்சம் அமைதிப்படுத்தும். நோயைக் கட்டுப்படுத்தவே ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது என்பதையும் மனதில் கொள்க.

சரி ஒருவேளை யாருக்காவது கொரோனா வந்தாலும், கவலைப்பட வேண்டாம். எல்லா தொற்றும் கடினமானதல்ல. இதை என்னால் கடந்து வர முடியும், எத்தனை பேர் மீண்டு வந்திருக்கிறார்கள், அதனால் நம்மாளும் முடியும் என்ற தன்னம்பிக்கை கட்டாயம் வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வெளியில் எந்த வேலையும் இருக்கப்போவதில்லை. அதனால் அவர்கள் வீட்டிலேயே இருப்பது நன்று. உங்களது ரெகுலர் மாத்திரை மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும். முன்பு போல நினைத்ததும் மருத்துவமனைக்கு போக முடியாத சூழலை உணர்ந்து கவனமுடன் இருக்கவும். தேவைப்படும் சமயத்தில் உங்கள் மருத்துவரை ஃபோனில் தொடர்புக் கொண்டு ஆலோசனை பெறவும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: