Home /News /lifestyle /

வாழ்க்கைப் பாடங்கள் சொல்லும் கார்ட்டூன் கேரக்டர்கள்

வாழ்க்கைப் பாடங்கள் சொல்லும் கார்ட்டூன் கேரக்டர்கள்

வாழ்க்கைப் பாடங்கள் சொல்லும் கார்ட்டூன் கேரெக்டர்கள்

வாழ்க்கைப் பாடங்கள் சொல்லும் கார்ட்டூன் கேரெக்டர்கள்

life lessons from cartoon characters: சிறுவர்கள் வளரும் போது அவர்களுக்கு வாழ்வின் விழுமியங்களையும்( ethics ) சொல்லித்  தர இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுவர்களோடு பெரியவர்களும் அதிலிருந்து வாழ்க்கைப்பாடங்களை கற்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கிற்காக பார்க்க விரும்புவது கார்ட்டூன்கள் தான். அவர்கள் பார்க்கும் கார்ட்டூன்  கதாபாத்திரங்கள் என்ன செய்கிறதோ அதுபோலவே தானும் செய்வேன் என்று வளர்கின்றனர்.

அதனால் தான் சிறுவர்கள் வளரும் போது அவர்களுக்கு வாழ்வின் விழுமியங்களையும்( ethics ) சொல்லித்  தர இந்த கார்ட்டூன் கேரக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. சிறுவர்களோடு பெரியவர்களும் அதிலிருந்து வாழ்க்கைப்பாடங்களை கற்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் சிலவற்றை இன்று பார்ப்போம். முக்கியமாக 90ஸ் கிட்ஸ் கார்ட்டூன்கள் பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

மிஸ்டர் பீன்:

மிஸ்டர் பீன்


கோட், சூட், டை போட்ட மெலிதான உடல், கன்னத்தில் மச்சம். கையில் ஓரு உயிரற்ற மெல்லிய கரடி பொம்மை. ஒரு மனிதன் வாழ, கூட ஆட்கள் வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் சுக துக்கங்களை பகிர யாரும் இல்லை என்று வருத்தப்பட கூடாது. தனிமையான வாழ்க்கையே சுகம்தான். மகிழ்ச்சி என்பது நம்மிடம் தான் உள்ளது என்பதை காட்டும் கார்ட்டூன் அது.

டாம் அண்ட் ஜெர்ரி 

டாம் அண்ட் ஜெர்ரி


எலியும் பூனையும் சண்டை போடுவது என்றளவில் அதை நிறுத்தி விட முடியாது. அதன் வாழ்க்கைக்காக ஒன்றை ஒன்று துரத்தினாலும் ஒன்றை விட்டு ஒன்று வாழாது. இது தான் உண்மையான நட்பு. பூனையின் உணவு எலி என்று தெரியும். ஆனால் எலியின் நண்பன் பூனை என்ற கரு கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கதை. எதிர்மறையான குணம் கொண்டவர்களின் நட்பு பாராட்டல் தான் டாம் அண்ட் ஜெர்ரி.

ஸ்பாஞ்பாப்:

ஸ்பாஞ்பாப்


குட்டையான மஞ்சள் நிற ஸ்பாஞ்ச், நீருக்கடியில் உள்ள நகரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாகசங்கள் செய்கிறது. எல்லாவற்றிலும் நல்லதை எப்படிப் பார்ப்பது என்பதை ஸ்பாஞ்பாப் கற்றுக் கொடுத்தது. மனம் என்ன சொல்கிறதோ அதைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை நமக்குக் காட்டியது.வாழ்க்கையில் குழந்தைத்தனமான உற்சாகத்தைக் கொண்டாட கற்றுத்தருகிறது. வயதானாலும் எண்ணங்கள் இளமையாகவே இருக்கும் என்றுரைக்கிறது. எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று எண்ணு ம் நேரத்தில் அந்த சம்பவத்தில் இருக்கும் நல்லதை நினைத்து மகிழக் கற்று  கொடுக்கிறது.

பவர்பஃப் கேர்ள்ஸ்

பவர்பஃப் கேர்ள்ஸ்


பபுள், பிளாசம், பட்டர்க்கப் எனும் மூன்று பெண்குழந்தைகள் தங்கள் பள்ளி முடிந்த பின் ஹிம் எனும் அரக்கனிடம் இருந்து தங்கள் கிராமத்தைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். பெண் குழந்தைகள் என்றால் பாண்டி விளையாடிக்கொண்டு, தாயம் , பல்லாங்குழியை ஆடிக்கொண்டு வீட்டில் அமைதியாக இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்து பெண்குழந்தைகள் தைரியமாக பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதை விதைக்கிறது. சூப்பர்பவர்களை விலை கொடுத்து வாங்க முடியாது நம் உழைப்பால் வளர்த்துக் கொள்வதுதான் என்று புரியவைக்கிறது.

பாப் பில்டர்

பாப் பில்டர்


பாப் தனது கூட்டாளியான வெண்டி மற்றும் அவரது கட்டுமான வாகனங்களுடன் சேர்ந்து உடைந்த அனைத்தையும் சரி செய்கிறார். அதையும், எது உடைந்திருந்தாலும் சரி செய்வோம் என்ற ஒரு பாடலோடு கலகலப்பாக செய்கின்றனர். வாழ்க்கையில் உடைந்த பொருட்களையும் உறவுகளையும் சரி செய்ய நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர வைக்கிறது .

டிமோன் மற்றும் பும்பா(timon and pumbaa)

டிமோன் மற்றும் பும்பா


Hakuna matata! மீதமுள்ள நாட்களில் எந்த கவலையும் இல்லை என்று பொருள். எந்த விதிகளும் இல்லாமல் வாழுங்கள், குறைவாக கவலைப்படுங்கள் மற்றும் ஒவ்வொரு நாளும் இன்னும் கொஞ்சம் அதிகமான சந்தோசத்துடன் வாழுங்கள் என்று சொல்லும் கதை இது. டிமோன் ஒரு புத்திசாலியான கீரிப்பூனை. பும்பா ஒரு அப்பாவி, அஞ்சாத போர்வீரக் காட்டுப்பன்றி. இவர்களின் குணங்கள் வேறுபட்டாலும் அவர்களின் நட்பு தான் சிறந்தது. கவலையின்றி காட்டுக்குள் செய்யும் சாகசங்கள் தான் கதை.

வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள், அதனால் நமக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை, தனிமை, அதில் ஏற்படும் விரக்தி, வாழ்க்கையை நினைத்து எழும் கசப்பான எண்ணங்களை எல்லாம் மாற்றும் பாடங்களை இந்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் நமக்குச்  சொல்லித்தருகின்றன.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Children education, Love life, Mr Beans movie

அடுத்த செய்தி