நீரிழிவு நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரை அல்லது குளூகோஸ் அளவு மிக கூடுதலாக இருக்கக் கூடிய நீண்ட கால பாதிப்பு ஆகும். நமது உடல் இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்காமல் இருந்தால் அது டைப் 1 நீரிழிவு நோய் என்றும், அதுவே இன்சுலினை உணரும் தன்மையை உடல் இழந்து விட்டால் அது டைப் 2 நீரிழிவு எனப்படும்.
உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் மூலமாக நீரிழிவு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், கண்கள், சிறுநீரகங்கள், பாதம் மற்றும் செரிமான கட்டமைப்பு போன்றவை பாதிக்கப்படும்.
நீரிழிவு ஏன் மிகுந்த தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது:
நாம் ஒவ்வொருவரும் கொரோனா வைரஸ் என்ற தொற்றுநோய் குறித்து கவலை கொண்டிருப்பதைப் போல, இந்த நூற்றாண்டின் ஆகப் பெரும் தொற்று நோய் என்றால் அது நீரிழிவு குறைபாடு தான். வாழ்வியல் மாற்றங்களால் படிப்படியாக நம்மை பாதிப்பது தான் டைப்-2 நீரிழிவு ஆகும். உலகம் மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் சூழலிலும், பொருளாதார வாய்ப்புகள் பெருகிவிட்ட சூழலிலும் நம் மக்களின் உணவுப் பழக்கங்கள் மாறி வருகிறது. குறிப்பாக அதிக சர்க்கரை சத்து கொண்ட உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருகின்றனர்.
மொத்த நோயாளிகள் எண்ணிக்கை எவ்வளவு
சர்வதேச நீரிழிவு சங்கத்திடம் உள்ள தகவல்களின்படி, கடந்த 2019ஆம் ஆண்டில் 20 முதல் 79 வயது வரையிலான மக்களில் நீரிழிவு பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 463 மில்லியன் ஆகும். இது 2045ஆம் ஆண்டில் 700 மில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு மிக அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குடல் நலனை மேம்படுத்தினால் நீரிழிவு குறைபாட்டை தடுக்க முடியுமா?
‘கட் மைக்ரோபிமீ’ என்ற சொல் மருத்துவத்தில் உபயோகிக்கப்படுகிறது. குடலில் வாழும் பல கோடிக்கணக்கான பாக்டீரியா, வைரஸ் மற்றும் பங்கஸ் ஆகியவற்றை இது குறிக்கிறது. நமது செரிமானம், மெட்டபாலிசம், நோய் எதிர்ப்பு சக்தி, சரும நலன் மற்றும் நமது எண்ண ஓட்டங்கள் மற்றும் உணர்வுகளை பாதிப்பதாக இவை அமைகிறது.
உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியா மற்றும் கெடுதல் செய்யும் பாக்டீரியா என இரண்டு வகைகளும் நமது குடலில் உள்ளன. இது இரண்டுமே சமநிலையில் இருக்க வேண்டும். இந்த சமநிலை தவறினால் வயிறு உப்புசம், குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
குடல் நலனை சரியாக கடைப்பிடித்தால் நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. உண்ணும் உணவில் நல்ல பாக்டீரியா அதிகம் இருந்தால், அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetes, Gut Health