ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலம், அதிகாரப்பூர்வமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாறியது. இதனையடுத்து மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் புதிய எல்லைகளை வகுத்து புது இந்திய வரைப்படத்தை வெளியிட்டது.
இந்த நிலையில் தற்போது லடாக் யூனியன் பிரதேசத்தின் மாநில விலங்கு மற்றும் மாநில பறவைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கறுப்பு-கழுத்து நாரை மாநில பறவையாகவும், பனிச்சிறுத்தை மாநில விலங்காகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இவை இரண்டும், அரியவகை இனங்களாக கருதப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
கறுப்பு-கழுத்து நாரை லடாக்கின் கிழக்கு பகுதியில் மட்டுமே காணப்படுவதால் அதனை மாநில பறவையாக அறிவித்துள்ளனர், பனிச்சிறுத்தைகள் இமயமலையின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில், லடாக், ஜம்மு & காஷ்மீர் , இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மாநில விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,
உத்தரப் பிரதேசம் :
மாநில பறவை: சாரசு கொக்கு
மாநில விலங்கு : சதுப்புநில மான் (பாரசிங்கா)
உத்தரகாண்ட் :
மாநில பறவை: இமயமலை மோனல்
மாநில விலங்கு : ஆல்பைன் கஸ்தூரி மான்
திரிபுரா :
மாநில பறவை: பச்சை இம்பீரியல் புறா
மாநில விலங்கு: ஃபைரின் லாங்கூர்
தமிழ்நாடு :
மாநில பறவை: மரகத புறா
மாநில விலங்கு: நீலகிரி தஹ்ர்
தெலுங்கானா :
மாநில பறவை: இந்திய ரோலர் (பால குருவி)
மாநில விலங்கு: புள்ளிமான் (ஜிங்கா)
சிக்கிம் :
மாநிலப் பறவை: இரத்த பீசன்
மாநில விலங்கு: சிவப்பு பாண்டா
ராஜஸ்தான் :
மாநில பறவை: பெரிய இந்திய பஸ்டார்ட்
மாநில விலங்கு: சிந்தாரா
பஞ்சாப் :
மாநில பறவை: வடக்கு கோஷாக்
மாநில விலங்கு: புல்வாய் (பிளாக்பக்)
ஒடிசா :
மாநில பறவை: மயில்
மாநில விலங்கு: யானை
நாகாலாந்து :
மாநில பறவை: ப்ளைத்தின் டிராகோபன்
மாநில விலங்கு: கயல்/மிதுன்
Also Read : தென்னாப்பிரிக்காவில் உருவாகியுள்ள புதிய கொரோனா மாறுபாடு C.1.2.. தீவிர பாதிப்பை ஏற்படுத்துமா?
மிசோரம் :
மாநில பறவை: திருமதி குயூமின் நெடுவால் வண்ணக் கோழி
மாநில விலங்கு: இமயமலை செரோவ்
மேகாலயா
மாநில பறவை: மலை மைனா
மாநில விலங்கு: சிறுத்தை
மணிப்பூர்
மாநில பறவை: திருமதி குயூமின் நெடுவால் வண்ணக் கோழி
மாநில விலங்கு: சனகை
மகாராஷ்டிரா
மாநில பறவை: பச்சை புறா
மாநில விலங்கு: இந்திய ராட்சத அணில்
மத்தியப் பிரதேசம்
மாநில பறவை: அரசவால் ஈபிடிப்பான்
மாநில விலங்கு: சதுப்புநில மான் (பாரசிங்கா)
கேரளா
மாநில பறவை : மலை இருவாட்சி
மாநில விலங்கு : இந்திய யானை
ஜார்க்கண்ட்
மாநில பறவை: ஆசிய குயில்
மாநில விலங்கு : இந்திய யானை
கர்நாடகா
மாநில பறவை: இந்திய ரோலர் (பனங்காடை)
மாநில விலங்கு : இந்திய யானை
இமாச்சல பிரதேசம்
மாநில பறவை: மேற்கத்திய டிராகோபான்
மாநில விலங்கு : பனிச்சிறுத்தை
ஹரியானா
மாநில பறவை: கருப்பு பிராங்கோலின்
மாநில விலங்கு : புல்வாய் (பிளாக்பக்)
குஜராத்
மாநில பறவை: பெரிய ஃபிளமிங்கோ
மாநில விலங்கு : ஆசிய சிங்கம்
Also Read : கோவிட் தொற்றிலிருந்து மீண்ட பிறகு வழக்கம் போல தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடலாமா?
கோவா
மாநில பறவை :பிளாக் புல்புல்
மாநில விலங்கு : இந்திய காட்டெருமை
பீகார்
மாநில பறவை: வீட்டு குருவி
மாநில விலங்கு : கவுர்
சத்தீஸ்கர்
மாநில பறவை: (பஸ்தர்) மலை மைனா
மாநில விலங்கு : நீர் எருமை
அருணாச்சல பிரதேசம்
மாநில பறவை: மலை இருவாட்சி
மாநில விலங்கு : காட்டெருமை
அசாம்
மாநில பறவை: வெள்ளை இறகு மர வாத்து
மாநில விலங்கு : ஒரு கொம்பு காண்டாமிருகம்
ஆந்திர பிரதேசம்
மாநில பறவை: பனங்காடை
மாநில விலங்கு : பிளாக்பக் (புல்வாய்)
டெல்லி
மாநில பறவை: வீட்டு குருவி
மாநில விலங்கு : நீலகை
சண்டிகர்
மாநில பறவை: இந்திய சாம்பல் இருவாச்சி
மாநில விலங்கு : சாம்பல் நிற முங்கூஸ்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாநில பறவை: அந்தமான் மர புறா
மாநில விலங்கு : டுகோங் (ஆவுளியா)
புதுச்சேரி
மாநில பறவை: ஆசிய குயில்
மாநில விலங்கு : இந்திய பனை அணில்
லட்சத்தீவு :
மாநில பறவை: சூட்டி டெர்ன்
மாநில விலங்கு : பட்டாம்பூச்சி மீன்
தாத்ரா மற்றும் நகர் அவேலி, தமன் & தியு யூனியன் பிரதேசங்களுக்கு மாநில பறவை மற்றும் விலங்கு இன்னும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.