ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

யோகா மேட் பயன்படுத்துறீங்களா..? அதை பூஞ்சை பிடிக்காமல் பராமரிக்க டிப்ஸ்..!

யோகா மேட் பயன்படுத்துறீங்களா..? அதை பூஞ்சை பிடிக்காமல் பராமரிக்க டிப்ஸ்..!

யோகா மேட்

யோகா மேட்

யோக பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, அதை செய்வதற்காக நாம் உபயோகிக்கும் மேட் அல்லது விரிப்பு குறித்து அக்கறை கொள்வது இல்லை. நம்முடைய கவனக்குறைவு காரணமாக அதனை பல சமயங்களில் அழுக்காகவே வைத்துக் கொள்கிறோம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எத்தனையோ வழிமுறைகள் உண்டு என்றாலும், பாரம்பரிய ரீதியாக கடைப்பிடிக்கப்படும் யோகாவுக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய கலாச்சாரத்தில் கலந்துவிட்ட யோக கலையை, ஐ.நா. அமைப்பின் அங்கீகாரம் கிடைத்த பிறகு உலகெங்கிலும் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட இப்போது யோக பயிற்சிகளை செய்ய முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர். குறிப்பாக, இந்தியக் கலை என்ற வகையிலும், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற வகையிலும் இப்போது பலர் யோக பயிற்சிகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.

எப்படி யோகாசனம் செய்ய வேண்டும்? எந்தெந்த ஆசனத்திற்கு என்ன மாதிரியான பலன்களை நாம் உணர முடியும் என்பது குறித்து நல்லதொரு பயிற்சியாளர் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், யோக பயிற்சிகளை செய்யத் தொடங்கும் முன்பாக அடிப்படையான விஷயம் ஒன்று குறித்து நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதாவது, யோக பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, அதை செய்வதற்காக நாம் உபயோகிக்கும் மேட் அல்லது விரிப்பு குறித்து அக்கறை கொள்வது இல்லை. நம்முடைய கவனக்குறைவு காரணமாக அதனை பல சமயங்களில் அழுக்காகவே வைத்துக் கொள்கிறோம்.

Also Read :  நீங்கள் தினமும் அலாரம் வைத்து எழுந்திருப்பவரா..? உடல் நலப்பிரச்சனைகளையும் சேர்த்து எழுப்புகிறீர்கள் என அர்த்தம்

தரையில் விரிக்கப் போகும் பொருள் தானே, அது அப்படித்தான் அழுக்காக காட்சியளிக்கும் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம். ஆனால், சுத்தம் இல்லாத மேட் அல்லது தரை விரிப்பில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை வெகு இயல்பாக பெருகி, நம் மீது ஊடுருவக் கூடும் என்பது நமக்கு தெரிவதில்லை.

நோய்கிருமிகள் நம் உடலில் சேர்ந்தால் பல விதமான நோய்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திற்காக யோகா செய்யப் போய், உடல் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக் கொள்ள வகை செய்ததாகிவிடும்.

தரைவிரிப்பை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான வழிகள் :

ஒரு பெரிய வாளி நிறைய தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் சோப்பு தூள் அல்லது சோப்பு பயன்படுத்தி கரைத்துக் கொள்ளவும். இப்போது உங்கள் தரை விரிப்பை அதில் ஊற வைக்கவும்.
சுமார் 10 நிமிடங்கள் கழித்து உங்கள் தரை விரிப்பை மீண்டும் நல்ல தண்ணீரில் அலசி, வெயிலில் காய வைக்க வேண்டும். தரை விரிப்பின் இரண்டு பக்கமும் சுத்தம் செய்யவும். அழுக்கு நீங்கும் வரை சோப் அப்ளை செய்யவும்.
உங்கள் தரை விரிப்பை காய வைப்பதற்கு முன்பாக நல்ல ஈரமில்லா துணி கொண்டு அதனை துடைத்து வைக்கவும்.
உங்கள் தரை விரிப்பை அலசி காய வைத்துக் கொண்டால், அதனை மடித்து பத்திரமாக வைத்துக் கொள்ளவும். ஒவ்வொரு முறையும் தரை விரிப்பை பயன்படுத்தும்போது அதன் மீது சானிடைசர் அப்ளை செய்யவும். மீண்டும் வாரம் ஒருமுறை அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறை இதேபோல சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
Published by:Sivaranjani E
First published:

Tags: Home tips, Yoga