Home /News /lifestyle /

கர்ப்பகாலத்தில் ஜொலிக்கும் நடிகை ஆலியா பட் - ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பகாலத்தில் ஜொலிக்கும் நடிகை ஆலியா பட் - ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

கர்ப்பகால பளபளப்பால் ஜொலிக்கும் நடிகை ஆலியா பட்

கர்ப்பகால பளபளப்பால் ஜொலிக்கும் நடிகை ஆலியா பட்

கர்ப்பகால பளபளப்பு என்பது கர்ப்பிணிகள் எதிர்நோக்கும் பொதுவான உடலியல் மாற்றங்களில் ஒன்றாகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் அதிகரிப்பால் ஏற்படும் சரும மாற்றங்களில் pregnancy glow எனப்படும் கர்ப்பகால பளபளப்பும் ஒன்றாகும். பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் - நடிகர் ரன்பீர் கபூர் திருமணம் கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்தது. திருமணமான 2 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூனில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோஷியல் மீடியா மூலம் அறிவித்தார் ஆலியா பட்.

    இதனிடையே அம்மாவாகப் போகும் ஆலியா பட் சோஷியல் மீடியாவில் சமீபத்தில் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் அவர் pregnancy glow-வில் இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. கர்ப்ப நேரத்தில் பூரிப்பாக இருப்பதை வெளிப்படுத்தி உள்ள ஆலியா பட் போல pregnancy glow-வை பெறக் கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்.

    ஹைட்ரேஷன்:

    கர்ப்பிணிகள் தங்கள் சருமத்தை உள்ளே மற்றும் வெளியே நீர்ச்சத்து நிரம்பியதாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருப்பதும் மிகவும் முக்கியம். எனவே அலியா தவறாமல் தன் உடலுக்குத் தேவையான போதுமான அளவு தண்ணீரை குடித்து, சருமத்தை மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறார். ஒரு நாளைக்கு இரண்டு முறை ஹைட்ரேட்டிங் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துகிறார்.

    குறைவான மேக்கப்:

    ஆலியா பட் தன் நிறத்தைக் கூட்டிக் காட்டவோ அல்லது மாற்றவோ அதிக கவனம் செலுத்துவதில்லை. மாறாக பேஸ்டல்கள் மற்றும் லைட் ஹியூஸ் போன்ற கலர் டோன்களில் அதிக கவனம் செலுத்துகிறார். maybeline நிறுவனத்தின் baby lips தயாரிப்பு இவருக்கு மிகவும் ஃபேவரைட்டான ஒன்று.

    டோனிங்:

    டோனர்கள், ஃபேஸ் மிஸ்ட், ஃபேஷியல் சீரம்கள் உள்ளிட்டவை சருமத்தின் பிஎச் (ph) பேலன்ஸை நிர்வகிக்க உதவுகின்றன. எனவே இவற்றைத் தவறாமல் பயன்படுத்தி சருமத்தை ஆரோக்கியமாக, பளபளப்பாக வைத்துக் கொள்கிறார் ஆலியா.

    சுறுசுறுப்பு:

    உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்வது உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மற்றும் மன அமைதிக்குப் பெரிதும் உதவும். சரும செல்களை ஆக்டிவாக வைத்து இயற்கையான ஒளிரும் சருமத்தை அடைய உதவுவதாக நம்புகிறார் ஆலியா.

    Also Read : எண்ணெய் பசை சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் தேவையா ? அழகு நிபுணர்கள் தரும் ப்யூட்டி டிப்ஸ்!

    ஹெர்பல் தயாரிப்புகள்:

    ஆலியா கெமிக்கல் கலந்த தயாரிப்புகளை முடிந்தவரைத் தவிர்க்க முயற்சிக்கிறார். தனது மேக்கப்பை அகற்ற கார்னியர் பியூர் ஆக்டிவ் நீம் துளசி ஹை ஃபோமிங் ஃபேஸ் வாஷ் மற்றும் நேச்சுரல் ஹெர்பல் வைப்ஸ் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்துகிறார்.

    ஃபேஸ் பேக்:

    முகப்பரு, தழும்புகள், போர்ஸ் மற்றும் பிக்மென்ட்டேஷன்களை சரி செய்யும் இயற்கைப் பொருளான முல்தானி மிட்டியை ஃபேஸ் பேக்காக பயன்படுத்துகிறார்.

    ஆரோக்கிய உணவு:

    முடிந்தவரை ஜங்க் ஃபுட்களை தவிர்த்து வீட்டிலேயே சிறந்த முறையில் சேமிக்கப்பட்ட உணவைச் சாப்பிடுகிறார். இப்பழக்கம் சீரான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது.

    ஃபிரெஷ் ஜூஸ்கள்:

    நடிகையின் பளபளப்பான சருமத்திற்கான மற்றொரு ரகசியம் இழந்த ஆற்றலை மீண்டும் பெறவும், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் எப்போதும் ஃபிரெஷ் ஜூஸ்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறார்.
    Published by:Janvi
    First published:

    Tags: Alia Bhatt, Pregnancy care, Skin Care

    அடுத்த செய்தி