Home /News /lifestyle /

நல்லா பணம் சம்பாதிக்க இந்த 4 விஷயத்தை பின்பற்றுங்க.. ஷாருக்கான் கூறும் யோசனைகள்..

நல்லா பணம் சம்பாதிக்க இந்த 4 விஷயத்தை பின்பற்றுங்க.. ஷாருக்கான் கூறும் யோசனைகள்..

Shahrukh khan

Shahrukh khan

Money Earning Tips by ShahRukh Khan: பணம் சம்பாதித்ததற்கும், வெற்றி அடைந்ததற்கும் ஷாருக்கான் கடைப்பிடித்த சில சூட்சமங்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்..

திரைப்படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளை கண்ட நடிகர் ஷாருக்கான் நமது இதயங்களையும் வென்றவர் ஆவார். படங்களில் மட்டுமல்லாமல் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் எண்ணிலடங்கா பணத்தை சம்பாதித்தவர் அவர். திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவது, கமர்ஷியல் விளம்பரங்களில் நடிப்பது, விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, திரைப்பட தயாரிப்பு மற்றும் கிரிக்கெட் டீம் நிர்வாகம் என அவரது வியாபார பயணம் பல்கிப் பெருகிக் கொண்டே போகிறது.

குறிப்பாக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலக தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஷாருக்கான் நடத்தி வருகிறார். இந்த அளவு பணம் சம்பாதித்ததற்கும், வெற்றி அடைந்ததற்கும் ஷாருக்கான் கடைப்பிடித்த சில சூட்சமங்கள் தான் காரணம் ஆகும். அவை என்ன என்று இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

ஒரே தொழிலில் பணத்தை முடக்கிப் போடக் கூடாது

தொழில் செய்ய நினைப்பவர்கள் ஒரே இடத்தில் முதலீட்டை குவித்து போடக் கூடாது. ஷாருக்கானை போல பலதரப்பட்ட இடங்களில் முதலீடு செய்ய வேண்டும். பணம் ஈட்டும் பல தொழிலை அவர் நடத்தி வருகிறார். எல்லாமே ஒன்றுக்கு, ஒன்று வேறுபட்டவை ஆகும். ஒரு தொழிலில் நீங்கள் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், டிரெண்ட் என்ன என்பதை கவனித்து, அதற்கு தகுந்தாற்போல ஊக்குவிக்க வேண்டும். பிசினஸ் பார்ட்னரை சேர்த்துக் கொள்வது என்றால் அவர் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும்.

கடன் வாங்கக் கூடாது

முதலீட்டிற்கு தேவையான பணத்தை உங்கள் சேமிப்பில் இருந்து எடுத்து போட வேண்டும். பெரிய அளவுக்கு அவசரத் தேவை இல்லை என்றால் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. தன்னுடைய சொந்தப் பணத்தை வைத்து படம் தயாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் ஷாருக்கான் ஆவார்.

கனவுகளோடு செயல்பட வேண்டும்

நீங்கள் என்ன செய்தாலும் அதை 100 சதவீத ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். சொந்தமாக ஒரு ஃபிலிம் ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்பது தான் ஷாருக்கானின் கனவு ஆகும். இந்தத் தொழிலில் உடனடியாக லாபம் கிடைத்து விடாது என்றாலும், ஒரு ஸ்டுடியோ அமைக்க வேண்டும் என்பது ஷாருக்கானின் கனவாக இருக்கிறது. சில சமயம், மிகுந்த மன உறுதியுடன் நீங்கள் போராடும் போது, அதன் விளைவாக உங்களுக்கு தங்கம் கூட கிடைக்கலாம்.

ஒற்றை பார்முலாவை கடைப்பிடிக்க கூடாது

வெற்றியை அடைவதற்கு இது ஒன்றுதான் வழி என்ற வரையறை எதுவும் கிடையாது. ஆகவே, அனைத்து வழிகளிலும் தன்னால் முடிந்த அளவுக்கு ரிஸ்க்குகளை ஷாருக்கான் எடுக்கிறார். கடைசியாகக் கூட அவர் நடித்த படம் தோல்வி அடைந்தது. இப்படி எந்த தோல்வி ஏற்பட்டாலும் தன்னுடைய முயற்சி எதையும் அவர் கைவிட்டது இல்லை அல்லது பின்வாங்கியது இல்லை
Published by:Arun
First published:

Tags: Shah rukh khan

அடுத்த செய்தி