ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள்... இது எங்க போய் முடியும் தெரியுமா..?

news18
Updated: August 9, 2018, 6:43 PM IST
ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள்... இது எங்க போய் முடியும் தெரியுமா..?
Night time connection
news18
Updated: August 9, 2018, 6:43 PM IST
செல்போனைப் பற்றி எனக்கு தெரிந்ததை விட என் மகனுக்குத்தான் நன்றாக தெரியுமென பெற்றோர்கள் பலரும் பெருமையாக  சொல்வதைப் பார்க்கிறோம். குழந்தைகளின் சேட்டைகளை குறைக்க பெற்றோர்களுக்கு தெரிந்த எளிமையான வழி போனைத் தூக்கி கொடுத்துவிடுவதுதான். டிஜிட்டல் யுகத்தில் கிடைக்கும் இலவச டேட்டாக்கள் கூடுதல் நேரம் குழந்தைகள் செல்போனில் வீடியோக்கள் பார்த்தும் ஆன்லைன் கேம்களை விளையாடியும் பொழுதுகளை கழிக்கிறார்கள்.

குழந்தைகள் செல்போனுக்கு அடிமையாவதற்கு பெற்றோர்கள்தான் காரணம். அருகில் இருப்பவர்களிடம் கூட பேசாமல் வெளியில் சென்று விளையாடாமல் போனும் கையுமாகவே பல குழந்தைகள் சுற்றத் தொடங்கி விட்டார்கள். இதனால் குழந்தைகளின் உடல்நலமும் மன நலமும் சீர்கெடத் தொடங்கிவிட்டது.

கதிர்வீச்சுசெல்போனில் தொடர்ச்சியாக பேசவும் அதையே விளையாட்டுப் பொருளாகவும் கொண்டு விளையாடும் குழந்தைகள் கதிர்வீச்சினால் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் குழந்தைகள் தாமதமாக பேசவும், கவனக் குறைவு, கவனச் சிதறல், கற்றல் திறன் குறைபாடு, தூக்கமின்மை, பதற்றம், பயம், மனச்சோர்வுக்கும் ஆளாகின்றனர்.

பார்வை திறன் குறைதல்

Loading...
எப்போதும் தலைகவிழ்ந்த படியே செல்போனை பயன்படுத்துவதால் கழுத்து வலியினாலும் செல்போனிலிருந்து வரும் வெளிச்சத்தினால் தலைவலியும் ஏற்படுகிறது. குழந்தைகள் சிறு வயதிலேயே பார்வை திறன் குறைந்து கண்ணாடி அணிவதற்கும் இதுவே காரணம்.

செல்போன் மட்டும் உலகமல்ல’அமெரிக்கன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ்’ என்ற ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செல்போன் ஆர்வத்தை பெருமையோடு பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில்கொள்ள மறந்து விடுகிறார்கள். அதாவது செல்போனில் இருந்து பெறப்படும் அறிவு ஒரு குறுகிய எல்லையைகொண்டது. அதையும் தாண்டிய அறிவை அவர்கள் வளர்த்துக்கொண்டால்தான், இந்த சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ முடியுமென தெரிவிக்கிறது.

தவறான புரிதல்சில பெற்றோர்கள் ஸ்மார்ட் போனால் தங்கள் பிள்ளைகளின் தகவல் தொழில் நுட்ப அறிவு பெருகுவதாக நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை மாறாக குழந்தைகளின் தகவல் தொடர்பு திறன் குறைகிறது. மனிதர்களை நேருக்கு நேர் பேசும்போதுதான் தகவல் தொடர்பு திறன் அதிகரிக்கும் தன் கருத்தை சரியாக பேசி மற்றவர்களுக்கு புரியவைக்க முடியும்.

நிஜ உலகம் என்பது செல்போன் கொடுக்கும் விர்ச்சுவல் உலகம் போல் ஒருபோதும் இருப்பதில்லை. சக மனிதர்களிடம் பேசவும் பழகவும் செய்ய வேண்டும். மனிதர்களினால் கிடைக்கும் அனுபவம் மட்டும் குழந்தைகளின் வாழ்க்கையை செழுமைப்படுத்தும் என்பதை பெற்றோர்கள் மறக்கக் கூடாது.

தொடர்ந்து குழந்தைகள் செல்போன்களின் அடிமையானால், அந்த குழந்தைகள் உலகத்திலிருந்து தனித்து நிற்பார்கள், சமூகத்தோடு ஒட்ட முடியாது... அவர்களுக்கு என்று கற்பனை உலகில் சஞ்சரிப்பார்கள்... அவர்களின் இந்த நிலையின் உச்சம் தான் மனநலம் பாதிப்பு.
First published: August 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...