கேரளாவில் டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச்!

இந்த சர்வீசில் தலை மற்றும் கால்களுக்கான மசாஜ் 100 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.

news18
Updated: June 13, 2019, 8:10 PM IST
கேரளாவில் டிரெண்டாகும் ஃபுல்ஜார் சோடா சேலஞ்ச்!
ஃபுல்ஜார் சோடா
news18
Updated: June 13, 2019, 8:10 PM IST
ஒருவர் பிரபலமாக வேண்டுமெனில் இன்றைய டெக்னாலஜி காலகட்டத்தில் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஸ்டேட்டஸுகள், கருத்துகளை பகிர்ந்தாலே நீங்கள் பிரரபலமாகலாம். அதில் ஒரு வகைதான் சமூகவலைதளத்தில் டிரெண்டை உருவாக்குவது அல்லது பின்பற்றுவது.

அப்படி தற்போது யாரோ போஸ்ட் செய்த ஃபுல்ஜார் சோடா என்னும் வீடியோ சேலஞ் பலராலும் பின்பற்றப்பட்டு கேரளாவை கலக்கி வருகிறது.
என்னது ஃபுல்ஜார் சோடாவா!

அதாவது ஒரு கண்ணாடி கிளாஸில் சோடாவை நிரப்ப வேண்டும். 10 பச்சை மிளகாய் , இஞ்சி, புதினா , எலுமிச்சை சாறு , உப்பு ஆகியவற்றை மைய அரைத்து அதில் சப்ஜா விதையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின் ஷாட் கிளாசில் அதை சேர்த்து தண்ணீர் நிரப்பி அப்படியே அந்த சோடா நிரம்பிய கிளாஸில் போட வேண்டும். பின் அது பொங்கி ஊற்றத் துவங்கும். உடனே அதை ஒரே வாயில் இடைவெளி விடாமல் குடித்து முடிக்க வேண்டும். இதுதான் இந்த ஃபுல்ஜார் சோடா சேலஞ். ஃபுல் ஜார் என்பதற்கு ஜார் முழுவதும் சோடா என்று அர்த்தமாம். மொத்தத்தில் இது காரம் மற்றும் சோடா இணைந்து மண்டைக்கு ஏறும் விறுவிறு சேலஞ்.

First published: June 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...