Home /News /lifestyle /

ஆன்லைனில் போலி கோவிட்-19 டெஸ்ட்டிங் கருவிகளை வாங்குவதை தவிர்ப்பது எப்படி.!!

ஆன்லைனில் போலி கோவிட்-19 டெஸ்ட்டிங் கருவிகளை வாங்குவதை தவிர்ப்பது எப்படி.!!

போலி கோவிட்-19 டெஸ்ட்டிங் கருவி

போலி கோவிட்-19 டெஸ்ட்டிங் கருவி

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அல்லது தொற்று பாதித்தவருடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் இந்த டெஸ்ட்டிங் கிட்ஸ்-ஐ வாங்கி சுயபரிசோதனை செய்து கொள்கின்றனர்.

நாடு முழுவதும் ஒமைக்காரன் தொற்று தீவிரமாக பரவி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒமைக்காரன் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதில் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டு மக்களும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் வீட்டிலேயே கோவிட் சுயபரிசோதனை செய்து கொள்ளும் வகையில் கிடைக்கும் Covid-19 Testing Kits வாங்குபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களில், கோவிட் டெஸ்ட்டிங் கிட்ஸ் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல நிறுவனங்கள் அவற்றை விற்பனை செய்து வருகின்றன. எனவே எதை வாங்குவது என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்படுவது இயல்பு தான். எது எப்படியிருந்தாலும், இந்த தயாரிப்புகள் உண்மையானதா இல்லையா என்பதும் கண்டிப்பாக கேட்கப்பட வேண்டிய ஒரு கேள்வி. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அல்லது தொற்று பாதித்தவருடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் இந்த டெஸ்ட்டிங் கிட்ஸ்-ஐ வாங்கி சுயபரிசோதனை செய்து கொள்கின்றனர்.

Covid19 self-test kits-ஐ வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால், சந்தர்ப்பவாத மோசடி செய்பவர்கள் தேவையின் அதிகரிப்பைப் பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே போலியான மற்றும் அங்கீகரிக்கப்படாத ஹோம் டெஸ்ட்டிங் கிட்ஸ் ஆன்லைனில் விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஹோம் டெஸ்ட்டிங் கிட்டின் நம்பகத்தன்மையை அளவிடுவதற்கான சில வழிகள் இங்கே..

அதிகாரப்பூர்வ அனுமதி (Official approval):

ஆன்லைனில் கிடைக்கும் Covid19 self-test kits-கள் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்வதே முதல் மற்றும் முக்கிய படியாகும். எனவே நீங்கள் வாங்க விரும்பும் டெஸ்ட்டிங் கிட் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ICMR) அங்கீகரிக்கப்பட்டதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

நம்பகமான நிறுவனங்கள் (Trusted companies):

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் சிறந்த Covid19 test kits-களை வாங்க குறைந்தபட்சம் நன்கு அறியப்பட்ட மற்றும் நம்பகமான பிராண்டுகளை பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். Mylab CoviSelf, Panbio Covid-19 Antigen Self-Test, CoviFind rapid antigen test kit, Ultra Covi-Catch rapid antigen test and Angcard Covid-19 Antigen Test Kit உள்ளிட்ட பிராண்டுகள் மிகவும் நம்பகமானவையாக இருந்து வருகின்றன.

கமெண்ட்ஸ்களை படிக்கவும் (Read Comments):

நீங்கள் ஆன்லைனில் எந்த ஒரு பொருளை வாங்கும் போதும் ஏற்கனவே அப்பொருளை வாங்கி இருக்கும் யூஸர்களின் கமெண்ட்ஸ்களை படித்து பார்க்க மறக்காதீர்கள். குறிப்பிட்ட தயாரிப்பில் மகிழ்ச்சியடையாத யூஸர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் அதிருப்தியை கமெண்ட்ஸ் அல்லது ரிவ்யூ செஷனில் வெளிப்படுத்தி இருப்பார்கள்.

வெவ்வேறு வெப்சைட்களை சரிபார்க்கவும் (Check different websites):

இந்தியாவில் மிக பிரபலமாக இருக்கும் Amazon.in, Flipkart, PharmEasy போன்ற ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்களில் நீங்கள் விரும்பும் டெஸ்ட்டிங் கிட் இருக்கலாம். எனவே ஒப்பிட்டு பார்த்து வாங்குவது எப்போதும் சிறந்தது. அதே போல வெப்சைட், நிறுவனம் அல்லது விற்பனையாளரின் பெயரை ஆன்லைனில் தேட தயங்க வேண்டாம். சர்ச் செய்த பிறகு குறிப்பிட்டவற்றின் மீது உங்களுக்கு போதுமான திருப்தி ஏற்படவில்லை என்றால் "scam", "complaint" அல்லது "review" போன்ற வார்த்தைகளை தேடி, அது சம்பந்தமாக ஏதாவது காட்டப்படுகிறதா என்று பார்க்கவும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Corona, Covid-19

அடுத்த செய்தி