மாசு மருவற்ற சருமம் வேண்டுமா? பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சொல்லும் ஃபவுண்டேஷன் ட்ரிக்ஸ் பத்தி தெரிஞ்சுக்கோங்க..

மாசு மருவற்ற சருமம் வேண்டுமா? பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சொல்லும் ஃபவுண்டேஷன் ட்ரிக்ஸ் பத்தி தெரிஞ்சுக்கோங்க..

கத்ரீனா கைஃப்

சருமத்தின் மீது நிறம் மாறுபட்டு இல்லாமல் ஒரே விதமாக மென்மையான தோற்றத்தை அளிக்கக்கூடியது ஃபவுண்டேஷன் க்ரீம்.

  • Share this:
ஃபவுண்டேஷன் என்று வரும்போது, உங்கள் சருமத்திற்கு சரியான ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பதே பெரும்பாடு. உங்கள் தோல் அமைப்பு மற்றும் வண்ணம், அண்டர்டோன் என அனைத்திற்கும் பொருந்தும் வகையில் ஒரு பவுண்டேஷன் பிராண்டை நீங்கள் வாங்க வேண்டும். இந்த நிலையில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஒரு புத்தம் புதிய கே பியூட்டி ஹைட்ரேட்டிங் பவுண்டேஷனை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அந்த சூப்பர் ஃபவுண்டேஷன் லுக்கை எவ்வாறு அடைவது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டிய உதவிக்குறிப்புகள் மற்றும் தந்திரங்களையும் நம்முடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய நடிகை கைஃப் "பொதுவாக நமக்கு மிகவும் பொதுவான பிரச்சனை சருமத்தின் டோனுக்கு சரியான ஃபவுண்டேஷனை கண்டுபிடிப்பதாகும். முன்பெல்லாம் அழகு சாதன சந்தைகள் மிகக் குறைந்த ஷேட்களை கொண்ட ஃபவுண்டேசன்களை மட்டும் கொண்டிருந்தன. ஆனால் இந்திய பெண்களின் ஸ்கின் டோன்கள் மிகவும் மாறுபட்டவை. மேலும் மக்கள் தங்கள் அண்டர்டோன்ஸ் பற்றி எப்போதும் அறிந்திருக்க மாட்டார்கள். இதனால் சில பவுண்டேஷன்கள் பார்க்கும் போது அவர்களுக்கு பொருந்தக்கூடியதாகத் தோன்றலாம். ஆனால், அது உங்கள் உண்மையான தோலில் இருந்து வேறுபட்டிருப்பதால் பயன்படுத்திய பிறகு வித்தியாசமாக இருக்கும் ”என்று கூறியுள்ளார்.

இருப்பினும், அவர் அறிமுகப்படுத்திய கே பியூட்டி ஒரே சமயத்தில் சுமார் 20 ஷேட்களை தொடங்க இருப்பதாகவும், அதில் லைட், மீடியம், டேன், டீப் ஷேட்ஸ்கள் இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் நடுநிலை அண்டர்டோன்களுடன் வரும் எனவும் தெரிவித்துள்ளார். பவுண்டேஷன்களுக்கு அடுத்ததாக இருக்கும் மற்றொரு பிரச்சினை சருமத்தின் அதன் தன்மைதான். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், சருமத்தில் வசதியான உணர்வினை ஏற்படுத்த கைஃப் ஒரு ஈஸி வகை க்ரீம் ஒன்றை உருவாக்க விரும்பினார். “ இது உங்கள் ஒப்பனைக்கு மென்மையான கேன்வாஸை உருவாக்க உங்கள் சருமத்தை தயார்படுத்திக்கொள்ள உதவுகிறது. இந்த க்ரீமின் உயர் நீரேற்ற சூத்திரங்கள் உங்கள் சருமத்தில் எப்போதும் நன்றாக வேலை செய்கின்றன.

இதனால் உங்கள் சருமம் அங்கங்கு வெள்ளை வெள்ளையாக இருக்காது. எனவே நீங்கள் போடும் ஃபவுண்டேசன் முகத்தில் திட்டுத்திட்டாகவும் தனியாகவும் தெரியப்போவதில்லை. மா வெண்ணெய் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தால் உட்செலுத்தப்பட்ட இந்த க்ரீம் ஃபவுண்டேசனை எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. ” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பேசிய கைஃப், “ அழகு சாதனைகள் தொடர்பான சூத்திரங்களைச் சோதிப்பது முதல், அவற்றை என் கைகளில் மாற்றுவது, அண்டர்டோன்களை சரிபார்ப்பது, சரியான வகையைக் கண்டுபிடிப்பது வரை முழு பயணத்திலும் நான் முழுமையாக மூழ்கிவிட்டேன்.

எங்கள் அணுகுமுறையானது வாடிக்கையாளர்களின் தோல் வகைகள், சருமத்தின் டோன்கள் மற்றும் அண்டர்டோன்களை புரிந்துகொள்ள ஒரு போகஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதாகும். இதன் மூலம் எங்கள் தயரிப்புகள் வாடிக்கையாளர்களின் தோலில் நன்கு செயல்படுகிறதா என்பதைப் பார்க்கவும், இது எப்படி செயல்படுகிறது?, சருமத்தன்மை எவ்வாறு உணர்கிறது?, அவற்றின் ஷேட் செயல்படுகிறதா?, எல்லா அண்டர்டோன்களையும் உள்ளடக்கியுள்ளோமா? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவும் எங்களுக்கு உதவியது" என்று கூறியுள்ளார்.

ஒரு பெர்பெக்ட் கேன்வாஸை உருவாக்குங்கள்:

எந்த ஒரு அழகு ஒப்பனைக்கு முன்பும், சுத்தமான மற்றும் ஈரப்பதமான சருமம் இருப்பது அவசியம். ஆனால் உங்கள் சருமத்தை உண்மையில் சார்ஜ் செய்ய வேண்டுமானால், கத்ரீனா கைஃப் கொடுக்கும் ஐடியாவை பாலோ பண்ணுங்க. இது குறித்து அவரே தெரிவித்தாவது, "நான் முகத்தை குளிர்விக்கும் யோசனையுடன் வந்தேன். காலையில் ஐஸ்கட்டிகள் நிறைந்த குளிர்ந்த நீர் அடங்கிய பெரிய கிண்ணத்தில் முகத்தை முழுவதும் சில நிமிடங்களுக்கு நனைப்பேன். இது சருமத்தில் உள்ள துளைகளை இறுக்கி, என் சருமத்தை களங்கமில்லாமல் வைக்க உதவுகிறது. அதைச் முடித்தவுடன், நான் ஒரு லேசான கிரீம் தடவி என் மேக்கப்பைத் தொடங்குவேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

பவுண்டேஷனை சரியான முறையில் அப்ளை செய்ய வேண்டும்:

கைஃப் எப்போதுமே அவரது முகத்தின் முக்கிய பகுதிகளான நெற்றி, கன்னங்கள் மற்றும் கீழ்த்தாடை ஆகியவற்றின் மீது சில துளிகள் பவுடேஷனை அப்ளை செய்வார். பின்னர் அந்த புள்ளிகளைத் கிளாக்வைஸ் தேய்ப்பதன் மூலம், பவுண்டேஷனை முகம் முழுவதும் படரச் செய்வார். ஃபவுண்டேஷன் முகத்தில் இயற்கையாக இருப்பது போல தெரிய வேண்டுமானால், சருமத்தில் அதனை பஃப் செய்ய வேண்டும் என தனது ரகசிய ஹேக் ட்ரிக்ஸை அவர் தெரிவித்துள்ளார். இது ஒரு மென்மையான கவரேஜை அளிக்கிறது மற்றும் முகத்தில் ஸ்ட்ரீக்கினைத் தவிர்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இறுதி கட்டமாக ஒரு செட்டிங் பவுடர் கொண்டு முகத்தினை செட் செய்ய வேண்டும் என்று கைஃப் கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பேசிய அவர், "எனக்கு முகத்தில் இயற்கையான தோற்றம் அதிகம் தேவைப்பட்டால், நான் எனது பவுண்டேஷன் அளவைக் கட்டுப்படுத்த, அதிகம் அப்ளை செய்யவேண்டிய பகுதிகள் மற்றும் லேசாக மறைக்க வேண்டிய பகுதிகளில் என் விரல்களை உபயோகிப்பேன். நான் ஒரு முழுமையான வியத்தகு ஒப்பனை தோற்றத்தை பெற விரும்பினால், முழு பாதுகாப்புக்காக ஒரு ப்ரஷ்ஷை உபயோகிப்பேன். ப்ரஷ் எப்பொழுதும் ஒரு மேஜிக்கை செய்து, ஃபவுண்டேஷனை உங்கள் முகமெங்கும் சமமாக பரப்பி, அதன்மூலம் தடையற்ற அழகை உங்களுக்குத் தருகிறது” என்று விளக்கினார்.
Published by:Gunavathy
First published: