ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தாழ்வு மனப்பான்மை கூடாது... பெண்களுக்கு கத்ரீனா கைஃப் அறிவுரை

தாழ்வு மனப்பான்மை கூடாது... பெண்களுக்கு கத்ரீனா கைஃப் அறிவுரை

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கலாம், ஆனால் அதுதான் நாம் மற்றவர்கள் மீது அன்பாக இருப்பதற்கும், மற்றவர்களை பராமரிப்பதற்கும், அம்மாவாக இருப்பதற்கும் உதவுகிறது. உங்களுக்கு தெரிந்த, மன உறுதி அதிகம் கொண்ட நபர் யார் என்று நீங்கள் யாரைக் கேட்டாலுமே, எல்லோரும் ‘அம்மா’ என்ற ஒரே பதிலை தான் கூறுவார்கள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகைகள் தானே, இவர்களுக்கு என்ன தெரியும் என்பதெல்லாம் மலையேறி போய்விட்டது! தற்போது, நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல துறைகளிலும் வெற்றி கண்டுள்ளார்கள். சர்வதேச அளவில் தங்களுடைய வணிகத்தை நடத்துகிறார்கள், தங்களுக்கென்று பிராண்டை உருவாக்கி மிகப்பெரிய தொழில் முனைவோராக அடையாளம் கண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் கத்ரீனா கைஃப்.

பாலிவுட்டில் கோலோச்சிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப், நடிகையாக மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்விலும், தொழில் முனைவோராகவும் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறார். நடிகைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பை உடைத்தவர்களில் கத்ரினா கைஃப் மிக முக்கியமானவர். குறிப்பாக, இவர் பாலின சமத்துவம் பற்றி பேசியவை அனைத்துமே உலகில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், பெண்கள் இப்பொழுது அமைதியாக இருக்கக்கூடாது; தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி வெளிப்படையாக பேச வேண்டும்; பலவீனம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று பெண்களுக்கான மிகவும் ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு செய்தியை கூறியிருக்கிறார்.

தனக்குத் தெரிந்தவர்களிலேயே, தான் பார்த்த பெண்களிலேயே தனது அம்மா தான் மிகவும் மிகவும் அற்புதமான பெண்மணி என்று தன்னுடைய அம்மா எவ்வளவு வலிமையானவர் என்பதை பற்றி கத்ரீனா பகிர்ந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் தினசரி பெண்கள் எதிர்கொள்ளும் பல விதமான பிரச்சனைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதில் எத்தனை குற்றங்களை பெண்கள் தானாக முன்வந்து புகார் செய்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Also Read : சமந்தா முதல் ரகுல் ப்ரீத் சிங்... ஏரியல் யோகாவில் ஆர்வம் காட்டும் நடிகைகள்... அப்படி என்ன சிறப்பு அதில்..?

வெளிநாட்டை விட, குறிப்பாக இங்கிலாந்து விட இந்தியாவில் இருக்கும் பெண்மணிகள் மிகவும் தைரியசாலிகள் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆனால் தங்களுக்கு நேரும் குற்றங்களைப் பற்றி பெண்கள் ஏன் பேசுவதே இல்லை அமைதியாக இருக்கின்றார்கள் என்பதையும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

‘படித்த பெண்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள், ஏனென்றால் குற்றம்சாட்டும் பொழுது அந்த விரல்கள் அவர்களை நோக்கி திரும்பும் என்ற அச்சம் இருக்கிறது. எனவே எல்லா பெண்களும் தைரியமாக பேசுவதற்கு முன்வரவேண்டும். பெண் என்பதாலேயே பலவீனமாக உணர்வது அல்லது தாழ்வு மனப்பான்மை இருக்க வேண்டாம். ஏனென்றால் பெண் என்பது பலவீனமான பாலினம் அல்ல, எந்த காரணத்தினாலும் அதை தங்களை தாங்களே தாழ்த்திக் கொள்ள கூடாது’ என்று கூறியிருக்கிறார்.

பெண்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்களாக இருக்கலாம், ஆனால் அதுதான் நாம் மற்றவர்கள் மீது அன்பாக இருப்பதற்கும், மற்றவர்களை பராமரிப்பதற்கும், அம்மாவாக இருப்பதற்கும் உதவுகிறது. உங்களுக்கு தெரிந்த, மன உறுதி அதிகம் கொண்ட நபர் யார் என்று நீங்கள் யாரைக் கேட்டாலுமே, எல்லோரும் ‘அம்மா’ என்ற ஒரே பதிலை தான் கூறுவார்கள். என்னுடைய அம்மா தான் நான் பார்த்தவர்களில், மிகச்சிறந்த மற்றும் அற்புதம் வாய்ந்த பெண்மணி என்று கூறிய அவர், தன்னால் இயன்ற அளவுக்கு பாலின சமத்துவத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Katrina Kaif, Woman