Home /News /lifestyle /

கணவருடன் டூர் சென்ற இடத்திலும் வொர்க் அவுட் செய்த கத்ரீனா கைஃப்..!

கணவருடன் டூர் சென்ற இடத்திலும் வொர்க் அவுட் செய்த கத்ரீனா கைஃப்..!

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தனது கணவர் விக்கி கௌஷல் உடன் நியூ யார்க் சென்றுள்ளார். அங்கிருந்தபடி வொர்க் அவுட் செய்வதாக அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தற்போது வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகைகள் பலரும் தங்களது உடலை சிக்கென பராமரிக்க பல வித்தைகளை கையாண்டு வருகின்றனர். டயட், தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது என உடலைக் கட்டுப்கோப்பாக பராமரித்து வருகின்றனர். இதில் பாலிவுட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிக்கொடி கட்டி வரும் கத்ரீனா கைஃப்பும் ஒருவர். பாலிவுட்டின் இஞ்சி இடையழகி என ரசிகர்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர்.

அழகான உடற்கட்டை பெற வேண்டும் என்ற கனவு ஒரே நாளில் நிகழ்ந்துவிடாது. எப்போதும் டயட் மற்றும் உடற்பயிற்சியை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது தான் பிளாட்டான அடிவயிற்றையும், வசீகரமான உடற்கட்டையும் பெற முடியும். அதுக்கு நீங்கள் கத்ரீனா கைஃப் போல தான் கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். திருமணத்திற்கு பிறகும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினந்தோறும் கடுமையான உடற்பயிற்சியை செய்து வருகிறார்.

நடிகை கத்ரீனா கைஃப் தனது காதலன் விக்கி கவுசலை கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் கோலாகலமாக இவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. பாலிவுட்டை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகும் நடிகைகள் தொடர்ந்து ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடிப்பது உண்டு. எனவே தற்போது கணவருடன் நியூயார்க்கில் வசித்து வரும் கத்ரீனா, தனது டெய்லி ஒர்க் அவுட் தொடர்பாக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. 

50 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களைக் கொண்ட கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பைலேட்ஸ் உடற்பயிற்சி தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் முற்றிலும் கறுப்பு நிற ஜிம் ஒர்க் அவுட் உடையில், பைலேட்ஸ் பயிற்சி செய்யும் ஸ்னீக் பீக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு கேப்ஷனாக "நியூயார்க்கில் பைலேட்ஸ்" எனக் குறிப்பிட்டுள்ளார். பைலேட்ஸ் மாஸ்டர் ட்ரெய்னர் மீது தனது இரண்டு கைகளையும், கால்களையும் வைத்து உடலை சமநிலைப்படுத்திய படி குனிந்துள்ளார்.

also read : சாய் பல்லவி யதார்த்தமான நடிகை என சொல்வதற்கு என்ன காரணம்..? தெரிந்துகொள்ளுங்கள்..!இந்த உடற்பயிற்சி முறை தசைகளை தளர்வடைய செய்வதோடு, நெகிழ்வுத்தன்மையையும் கொடுக்கிறது. இது சற்று கடினமான உடற்பயிற்சியாக இருந்தாலும் ஒட்டுமொத்த உடலையும் வேலை செய்ய வைக்க கூடிய, உடல் எடையை குறைக்கவும், பராமரிக்கவும் ஏற்ற உடற்பயிற்சியாக இருந்து வருகிறது. உடற்பயிற்சி உங்க வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது கலோரிகளை எரிக்க உதவுகிறது. அதே மாதிரி தசைகளில் சேகரிக்கப்படும் கார்போஹைட்ரேட்டுகளை பயன்படுத்துகிறது. இதுபோன்ற உடற்பயிற்சியை 10 முதல் 20 நிமிடங்கள் செய்தாலே நல்ல பலன் கொடுக்க கூடியது.also read : பூஜா ஹெக்டேவின் அழகை மெருகேற்றும் இந்த புடவையின் விலையை தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!

கத்ரீனா கைஃப் எப்போதுமே சோசியல் மீடியாவில் எப்போதுமே தனது உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். கொரோனா லாக்டவுனில் கூட வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்வது, வீட்டை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வது என அவர் பதிவிட்ட பல வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கணவர் விக்கி கவுஷலின் பிறந்தநாளில், வெள்ளை நிற உடையில் கத்ரீனா கைஃப் பகிர்ந்த புகைப்படங்கள் தாறுமாறு வைரலானது. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் கத்ரீனா கைஃப் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டைகர் 3ல் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Katrina Kaif

அடுத்த செய்தி