மலேரியா, டெங்கு கிருமிகளைத் தவிர்க்க இந்த கஷாயங்களைக் குடியுங்கள்..!

கொசுத் தொற்றுக் கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாக்க இதுவே சிறந்த தீர்வு.

மலேரியா, டெங்கு கிருமிகளைத் தவிர்க்க இந்த கஷாயங்களைக் குடியுங்கள்..!
கஷாயம்
  • News18
  • Last Updated: August 20, 2019, 5:34 PM IST
  • Share this:
கொசுக்கடியால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுகின்றன. இவற்றை ஆரம்ப காலகட்டத்திலேயே அழிக்க சில மருத்துவ குணம் நிறைந்த கஷாயங்களைக் குடிக்கலாம்.

வேப்பிலைக் கொழுந்துடன் கொஞ்சம் மிளகு சேர்த்து அரைத்து உருண்டைகளாக்கி வெறும் வயிற்றில் விழுங்குவதால் நோய்த் தொற்றுக் கிருமிகளை அழிக்கலாம்.

மிளகை துண்டுகளாக மத்தால் இடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வையுங்கள். நீர் கால் டம்ளர் அளவு வற்றும் வரைக் கொதிக்கவிடவும். பின் ஆற வைத்துக் குடிப்பதால் நோய்க் கிருமிகளை தவிர்க்கலாம்.
கறிவேப்பிலை, சீரகம், மிளகு, இஞ்சி ஆகியவற்றை மைய அரைத்து சுடு தண்ணீரில் கலந்து கொஞ்சம் தேன் சேர்த்துக் கலக்கி மூன்று வேளையும் குடித்துவர எந்த நோய்க் கிருமிகளும் உங்களைத் தொற்றாது.

துளசி இலை, இஞ்சி இரண்டையும் அரைத்து சாறை எடுத்து கொண்டு காலையில் கால் டம்ளர் குடித்துவாருங்கள். கொசுத் தொற்றுக் கிருமிகள் அழிந்து போகும்.

Loading...

வல்லாரை, மிளகு, துளசி மூன்றையும் கைப்பிடி அளவு எடுத்து மைய அரைத்து அதை சிறு உருண்டைகளாக்கி வெயிலில் காய வையுங்கள். அதைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். காய்ச்சல் போன்ற அறிகுறி இருக்கும்போது சுடுதண்ணீரில் கலந்து குடித்து வர காய்ச்சல் தீரும்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...