ஜூன் மாதத்தில் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த நல்ல தேதி மற்றும் நல்ல நேரம் தெரிய வேண்டுமா?

காதணி விழா

புனித நாட்கள் மற்றும் நேரங்களை அறிய இந்துக்கள் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும் ஒரு வேத நாட்காட்டியைக் பார்ப்பது வழக்கம்.

  • Share this:
இந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி, பிறந்த குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட கால பகுதியில் சொந்தபந்தங்கள் கூடி குலதெய்வ கோயிலில் மொட்டை போடுதல் மற்றும் காதணி விழா நடத்தப்படும். இது ஷோடாஷா சம்ஸ்காரங்களின் வகையின் கீழ் வருவதால் இது ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த விழா பொதுவாக குழந்தை பிறந்த முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் நடத்தப்படுகிறது. காதணிவிழா ஒரு முக்கியமான நிகழ்வு என்பதால், மக்கள் இந்த சடங்கை ஒரு நல்ல நாள் மற்றும் நல்ல நேரத்தில்தான் செய்யவார்கள்.

இந்த விழா அவரவர் சடங்குபடி, அதற்குரிய திதி (த்விதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, திரயோதசி) மற்றும் அதற்குரிய நட்சத்திரப்படி (மிருகசீருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, உத்திராடம், திருவோணம், அவிட்டம், உத்திரட்டாதி, ரேவதி) மற்றும் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய லக்னப்படி நடைபெறும். மேலும் காதணி விழா நடத்துவதற்கான நல்ல நாட்களை ஜோதிடர்கள் குறித்து கொடுப்பார்கள் அன்றைய தினம் குலசாமிக்கு படையல் போட்டு விழாவை சிறப்புற நடத்துவார்கள்.

மேலும் படிக்க.. நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

அதேபோல ஒரு குறிப்பிட்ட மாதத்தில் புனித நாட்கள் மற்றும் நேரங்களை அறிய இந்துக்கள் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படும் ஒரு வேத நாட்காட்டியைக் பார்ப்பது வழக்கம். பஞ்சகத்தின்படி சுப முகூர்த்த காலத்தில் நடத்தும் எந்த காரியமும் அதிக வெற்றிகளையும் செழிப்பையும் தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த ஜூன் மாதத்தில் காதணி விழா நடத்துவதற்கான நல்ல நேரம் மற்றும் நல்ல நாட்கள் பற்றி பின்வருமாறு தெரிந்துகொள்ளுங்கள்.

1. ஜூன் 5 (சனிக்கிழமை): கிருஷ்ண பக்ஷாவின் ஏகாதசி அன்று, காதணிவிழா நடத்த சிறந்த நேரம் காலை 06:36 மணி முதல் 11:11 மணி வரை.

2. ஜூன் 10 (வியாழக்கிழமை): இந்த நாளில் சனி ஜெயந்தி நடக்கிறது. மேலும் காது குத்து விழா நடத்துவதற்கான சிறந்த நேரம் மாலை 5:44 மணி முதல் தொடங்கி மாலை 8:03 மணி வரை முடிகிறது.

3. ஜூன் 11 (வெள்ளிக்கிழமை): இந்த நாளில் காது குத்த புனித நேரம் காலை 06:12 மணி முதல் தொடங்கி காலை 08:27 மணி வரை நீடிக்கிறது.

4. ஜூன் 13 (ஞாயிறு): இந்த நாளில் காலை 06:05 மணி முதல் காலை 08:19 மணி வரை காதணி விழாவை நடத்தலாம். இது ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது.

5. ஜூன் 20 (ஞாயிற்றுக்கிழமை): கங்கை தசராவின் புனிதமான சந்தர்ப்பமாக இந்த நாள் பார்க்கப்படுகிறது. மேலும் காது குத்தப்படுவதற்கான சுப முகுர்த்த நேரம் காலை 07:52 மணி முதல் தொடங்கி மாலை 17:05 மணிக்கு முடிவடையும்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: