கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பாலிவுட் நடிகை கரீனா கபூர் அணிந்திருந்த மாஸ்க் விலை 26 ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது.
சயீப் அலிகானின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் மீண்டும் பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருந்த அவருக்கு அண்மையில் 2வது குழந்தை பிறந்தது. இதனால் நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வில் இருந்த கரீனா கபூர் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சோஷியல் மீடியாக்களிலும் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளார். அண்மையில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், முறையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அப்போது அவர் அணிந்திருந்த முகக் கவசம் நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றது. எல்.வி என்ற லோகோவும் இடம்பெற்றிருந்ததால் அந்த மாஸ்க் குறித்த தகவலை நெட்டிசன்கள் தேடத் தொடங்கினர். அதில், லூயிஸ் வுட்டன் (Louis Vuitton) பிராண்டு மாஸ்க் என்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் அதன் விலையையும் வெளியிட்டுள்ளனர். அதாவது, கரினா கபூர் அணிந்திருந்த லூயிஸ் வுட்டன் மாஸ்க் சுமார் 26,028 ரூபாயாகும். கரீனா கபூர் மட்டுமின்றி பல்வேறு பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களும் லூயிஸ் வுட்டன் மாஸ்கை அணிந்து வருகின்றனர்.
Also read... பணிசுமைக்கு நடுவே கிடைக்கும் குட்டி தூக்கம் - WFH-க்கு நன்றி சொல்லும் ஊழியர்கள்!
குறிப்பாக, தீபிகா படுகோன், ரன்பீர் கபூர் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் பொதுவெளியில் வரும்போது அந்த மாஸ்கை பயன்படுத்துகின்றனர். சில்க் காட்டனில் உருவாக்கப்படும் லூயிஸ் வுட்டன் முகக் கவசத்தை, நீரில் சுத்தம் செய்த பிறகு மீண்டும் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. வெளிநாடுகளில் 335 டாலருக்கு இந்த மாஸ்க்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. கரினா கபூர் அணிந்திருந்த பிளாக் கலர் பிளெய்ன் மாஸ்க் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கரீனா கபூரை பொறுத்தவரை பாலிவுட் திரையுலகின் கவர்ச்சிகன்னியாக வலம் வருபவர். 2000 ஆம் ஆண்டில் வெளியான ரெப்யூஜி படத்தில் அறிமுகமான அவர், முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை தட்டிச்சென்றார். பின்னர், ஷாரூக்கான், அக்சய் குமார் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டு அவர்களுக்கு பிறந்த முதல் ஆண் குழந்தைக்கு தைமூர் அலிகான் என பெயர்சூட்டினர். அண்மையில் 2வது குழந்தையை பெற்றெடுத்த அவர், மீண்டும் சூட்டிங்கில் கலந்து கொண்டு பிஸியாகியுள்ளார். 40 வயதான கரீனா கபூர் இன்னும் இளமையாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.