ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

WATCH - இப்படி பண்ணுங்க உடற்பயிற்சி.. நடிகை கரீனாகபூர் வெளியிட்ட வீடியோ.!

WATCH - இப்படி பண்ணுங்க உடற்பயிற்சி.. நடிகை கரீனாகபூர் வெளியிட்ட வீடியோ.!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

நீங்கள் உங்களது கீழ் முதுகு மற்றும் கால்களுடன் சேர்த்து உங்களது முக்கிய தசைகளை வலுப்படுத்த விரும்பினால் ஸ்குவாட்ஸ் சரியான ஒர்கவுட் ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தினசரி செய்யும் உடற்பயிற்சிகளை செய்வதில் குளிர்காலத்தில் தடை ஏற்படுகிறது. எனினும் பல தங்களது ஃபிட்னஸை பராமரிக்க ஜிம்மிற்கு செல்ல முடியாவிட்டாலும் கூட வீட்டிலிருந்தே சில தீவிர உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்கள்.

தீவிர ஃபிட்னஸ் ஃப்ரீக்காகவும், பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் கரீனா கபூர் கான். வடஇந்தியாவில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், கரீனா கபூர் தான் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். வழக்கமாக வீட்டிலிருந்தபடியே தனது வொர்க்அவுட்டைப் பற்றி ரசிகர்களுக்கு தெரிவிக்கும் நடிகை கரீனா கபூர், தனது சமீபத்திய ஸ்குவாட் வீடியோ மூலம் உடற்பயிற்சி ஆர்வலர்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளார்.

மேலும் நடிகை தனது ஃபிட்னஸ் விஷயத்தில் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். வைரலாகி வரும் வீடியோவில் நடிகை கரீனா கபூர் வெள்ளை நிற ஸ்னீக்கர்களுடன் நியான்-பிங்க் கோ-ஆர்ட் அத்லீஷர் உடைகளை அணிந்திருக்கிறார். இன்ஸ்டா ஸ்டோரிகளில் ஷேர் செய்துள்ள கிளிப்பில் வெயிட்டட் ஸ்குவாட்ஸ் செய்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார் கரீனா கபூர் கான்.

ஒரு கையை தரையில் ஊன்றியபடி வெயிட் லிஃப்ட்டிங் Bar-ஐ பிடித்தபடி, மறு கையில் டம்பெல்லை பேலன்ஸ் செய்தபடி ஸ்குவாட்ஸ் செய்கிறார். ஸ்டைலான உடையுடன் ஃபிட்னஸ் ஃபேஷன் இன்ஸ்போவையும் இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தி உள்ள நடிகையின் ஃபிட்னஸ் ஆர்வத்தை கண்டு ரசிகர்கள் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். நீங்கள் உங்களது கீழ் முதுகு மற்றும் கால்களுடன் சேர்த்து உங்களது முக்கிய தசைகளை வலுப்படுத்த விரும்பினால் ஸ்குவாட்ஸ் சரியான ஒர்கவுட் ஆகும். ஸ்குவாட்ஸ் தசை வலிமையை அதிகரிக்க உதவுவதோடு ஹைபர்டிராபி, கொழுப்பு இழப்பு மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
 
View this post on Instagram

 

A post shared by @varindertchawlaநம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாக ஸ்குவாட்ஸ் இருக்கிறது. நீங்கள் கார்டியோ மற்றும் ஸ்ட்ரென்த் ஒர்கவுட்ஸ்களின் கலவையை செய்ய விரும்பினால் நடிகையை போல உங்கள் செட்டில் வெயிட்களை சேர்த்து கொள்ளலாம். அதே போல ஃபிட்னஸ் இல்லாத ஒருவர் தனது ஃபிட்னஸ் ஜர்னியை தொடங்க ஸ்குவாட்ஸ் சரியான பயிற்சியாகும். குறிப்பிட்ட தசைக் குழுக்களை டார்கெட்டாக வைத்து 3 செட் ஸ்குவாட்ஸ் செய்வது அவற்றின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க செய்கிறது.

உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு ஸ்ட்ரென்த் மற்றும் கார்டியோ ஒர்கவுட்ஸ்களை சேர்த்து செய்ய இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கிறது. வெயிட்டட் ஸ்குவாட்ஸ் உள்ளிட்ட ஒர்கவுட்ஸ்களை செய்யும் போது எக்ஸர்சைஸ் பெல்ட்டை அணிவது எப்போதும் நல்லது, இது காயங்களிலிருந்து உங்களை பாதுகாக்கும் மற்றும் சரியான சமநிலையை பெற உதவும். தனது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்காக நடிகை தொடர்ந்து யோகா செய்கிறார். இதற்கு முன் அவர் தான் செய்யும் யோகா பயிற்சிகளை பற்றிய வீடியோவை ஷேர் செய்தார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது குறிபிடத்தக்கது.

First published:

Tags: Entertainment, Kareena kapoor, Trending, Viral