மனக் கவலையை போக்க ஓவியம் வரையலாம் : சிங்கப்பூரில் லாபம் ஈட்டும் ஸ்டுடியோ

இதனால் மன அழுத்தம் , கோபம் , கவலை எல்லாவற்றையும் மறந்து அந்த ஓவியத்தில் மூழ்கிவிடுவார்கள்.

news18
Updated: August 8, 2019, 7:27 AM IST
மனக் கவலையை போக்க ஓவியம் வரையலாம் : சிங்கப்பூரில் லாபம் ஈட்டும் ஸ்டுடியோ
பெயிண்டிங்
news18
Updated: August 8, 2019, 7:27 AM IST
மன அழுத்தம், கோபம் வந்தால் எதையாவது போட்டு உடைக்க வேண்டும். மற்றவர்கள் மீது எரிச்சலாக நடந்துகொள்ளத் தோன்றும். ஆனால் இதை எதையும் செய்யாமல் நேராக எங்கள் ஸ்டுடியோ வாருங்கள்.. அழகான ஓவியம் வரையுங்கள்.. என்று அழைக்கிறது இந்த ஸ்ப்ளாட் பெயிண்ட் ஹவுஸ்.

விளம்பரமே செய்யாமல் இந்த பெயிண்ட் ஹவுஸில் கூட்டம் குவிகிறதாம். இதிலிருந்தே தெரிகிறது. பல பேர் மன அழுத்தத்தில் இருக்கின்றனர். அதை தணிக்க இடம் இல்லாமல் தவிக்கிறார்கள் என்று.

சிங்கப்பூரிலுள்ள இந்த ஸ்டுடியோவில் எந்த விதிமுறையும் கிடையாது. கால நேரமும் கிடையாது. அவர்களுக்கு தோன்றும் வரை எண்ணம் போல் வரைந்து தள்ளலாம். மன அழுத்தம் குறையும் வரை வரையலாம். வரைந்த ஓவியம் பிடித்திருந்தால் வீட்டிற்கு எடுத்துச் சென்று ஃப்ரேம் போட்டு சுவரில் மாட்டிக்கொள்ளலாம்.

அப்படி வருவோரில் பலரும் இங்கு கேன்வா பெயிண்டிங்தான் அதிகமாக வரைகின்றனர் என்று இதன் நிறுவனர் ஆண்ட்ரியா லிம் இந்துஸ்தான் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.அமெரிக்காவில் மேல் படிப்பிற்காக சென்றபோது அங்கு தன்னுடைய தோழி வீட்டில் தனியாக அறை அமைத்து மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் அந்த அறையில் ஓவியம் வரைவாராம். அந்த அறையையும் ஓவியம் வரைவதற்கு உகந்தார்போல் வடிவமைத்துள்ளார். அவ்வாறு ஓவியம் வரைவதால் மனம் எத்தனை குறைகளோடு இருந்தாலும் இலகுவாகும் என்று கூறியுள்ளார்.

இந்த புதுவித இளைப்பாறுதல் யுத்தி நன்றாக இருக்கிறதே என்று யோசித்த ஆண்ட்ரியா, படிப்பை முடித்து சிங்கப்பூர் வந்ததும் அதை அப்படியே இங்கு தொழிலாக மாற்றியுள்ளார். அவர் நினைத்ததைப்போல் தினமும் கூட்டம் அள்ளுகிறதாம்.

சிலர் ஓவியமே தெரியாது என்று வந்தாலும் உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள் என கூறுவாராம். அப்படி செய்யும்போது அவர்கள் மன அழுத்தம் , கோபம் , கவலை எல்லாவற்றையும் மறந்து அந்த ஓவியத்தில் மூழ்கிவிடுவார்கள். அதேபோல் வண்ணங்களைக் காணும்போது கூடுதல் மன மகிழ்ச்சி ஏற்படும் என்பதும் ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...