நகை பராமரிப்பு, இனி ரொம்பவே ஈஸிங்க...

news18
Updated: July 11, 2018, 3:31 PM IST
நகை பராமரிப்பு, இனி ரொம்பவே ஈஸிங்க...
இனி நகை பராமரிப்பு ஈஸி...
news18
Updated: July 11, 2018, 3:31 PM IST
தங்கம் மற்றும் வைர நகைகளின் விலை ஏறினாலும், இறங்கினாலும், மக்கள் நகைக்கடைகளை விடுவதாக இல்லை. சுபகாரியம் முதல் அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்கிச் செல்கின்றனர். தற்போதுள்ள விலைவாசிக்கு நகை வாங்குவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், அதனை பராமரிப்பது மிக அவசியம்.

தங்கம், வெள்ளி, வைரம், முத்து நகைகளை பராமரிக்க சில டிப்ஸ்களை தருகிறார் தங்கம், வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி.

தங்கம்நகைப் பெட்டிக்குள் நகையை வைக்கும்போது சரியான முறையில் வைக்க வேண்டும். சங்கிலி, ஆரம் போன்றவைகளை மடங்கும்படி வைத்தால் விரைவில் அவை அறுந்துபோகலாம்.

தினமும் அணியக்கூடிய கம்மல், மோதிரம், சங்கிலி, வளையல் போன்றவை அதிக பயன்பாட்டால் மங்கிப்போகும். அப்போது ஷாம்பூ நுரை அல்லது பூந்திக் கொட்டை கழுவிய நீரில் போட்டு எடுத்தால் புத்தம் புது நகைபோல் ஜொலிக்கும்.

வெள்ளி
Loading...


வெள்ளி கொலுசுகள் விரைவில் கறுத்துவிடும். அதனை தவிர்க்க வெள்ளி நகைகளை இரும்பு பீரோவில் வைக்காமல் மர பீரோவில் வைத்தால் பளபளவென இருக்கும்.

பற்பசை பயன்படுத்தி வெள்ளி பொருட்களை சுத்தம் செய்யலாம், அல்லது டிடர்ஜென்ட் பொடியை மிதமான சூட்டில் உள்ள நீரில் கலந்து ஊற வைத்து சுத்தம் செய்தால் நகைகள் பளபளப்பாகும். மேலும், வெள்ளி பொருட்களில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் கறுப்பாகாமல் இருக்கும்.

கற்கள் பதித்த நகைகள்கற்கள் பதித்த நகைகள் பார்க்க பளபளப்பாக இருந்தாலும் விரைவில் கற்கள் மங்கிவிடும். இத்தகைய நகைகள் மீது பற்பசையை பூசி, பனியன் துணியினால் மெதுவாக தேய்க்க வேண்டும். நீரில் கழுவியபின், அவற்றை நீராவியில் காண்பித்தால் கற்களில் பதிந்துள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கும்.

முத்துமுத்து பதித்த நகைகளை மற்ற நகைகளோடு சேர்த்து வைக்கும் போது முத்துக்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் முத்துக்கள் பதித்த நகைகளை தனியாக ஒரு பெட்டியில் வைப்பதே நல்லது.

முத்து நகைகள் மீது வாசனை திரவியங்கள் பட்டால் முத்துக்களின் பொலிவு நாளடைவில் மங்கிவிடும். இதனால் ஒப்பனைகள் முடிந்த பின் முத்து நகைகளை அணியுங்கள். இதேபோல், வீட்டுக்கு வந்ததும் அவற்றைக் கழற்றி வைத்தபிறகு  மற்ற வேலைகளைத் தொடருங்கள்.

வைரம்வைர நகைகளை, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது கழற்றி வைத்து விடுங்கள். எண்ணெய் இறங்கினால் அவற்றின் ஷைனிங் குறைந்துவிடும்.

வைர நகைகளை உபயோகித்த பின்பு, அதற்கான பிரத்யேகப் பெட்டிகளில் மட்டுமே வைக்க வேண்டும். அதிலும் மென்மையான வெல்வெட் துணியில் வைப்பது தான் மிக முக்கியம்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...