HOME»NEWS»LIFESTYLE»japans average life expectancy is 84 years konw why esr ghta

ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள்: காரணம் என்ன தெரியுமா?

ஜப்பானில், தினசரி உடற்பயிற்சி செய்வது, சீரான உணவை உட்கொள்வது, நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது ஆகியவை சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்படுகின்றன.

ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள்: காரணம் என்ன தெரியுமா?
ஜப்பான்
  • Share this:

ஜப்பானில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 84 ஆண்டுகள் என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (Organisation for Economic Co-operation and Development) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இது உலக மக்கள்தொகையில் 72.6 வயது ஆகும்.

தீவு தேசம் என்றழைக்கப்படும் ஜப்பானில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 29 சதவீதத்தினர் 65 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். மேலும் இந்த நாடு தொடர்ந்து நூற்றாண்டு விழாக்களின் பட்டியலிலும், ஆரோக்கியமான மூத்த குடிமக்களின் வளர்ந்து வரும் சமூகத்திலும் முதலிடத்தில் உள்ளது.

ஜனவரி 2ம் தேதி அன்று, ஜப்பானின் "தனகா கேன்" (Tanaka Kane) என்பவர் அதிகாரப்பூர்வமாக 118 ஆண்டுகளை எட்டிய மூன்றாவது நபராக அங்கீகரிக்கப்பட்டார். தனகாவின் வயது முன்னர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. பின்னர் ஜெரண்டாலஜி ஆராய்ச்சி குழுவின் கல்வியாளர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது. அவர் தற்போது உலகின் மிக வயதானவர் (oldest person in the world) என்ற பெருமையோடு 118 வயதை எட்டியிருந்தாலும், அவரே கடைசி வயதான நபராக இருக்க வாய்ப்பில்லை. எவ்வாறு ஜப்பானிய மக்களால் அவ்வளவு வயது வரை வாழ முடிகிறது என்று யோசித்து பார்த்தால், அவர்களின் அசாதாரண உயர் ஆயுட்காலத்திற்கு பெரும்பாலும் அவர்களின் உணவே காரணமாக இருக்கிறது.

ஜப்பானில், தினசரி உடற்பயிற்சி செய்வது, சீரான உணவை உட்கொள்வது, நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது ஆகியவை சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்படுகின்றன. மேலும் இது அவர்களின் கல்வித் திட்டத்தின் கட்டாய பகுதியாகும். இந்த பழக்கங்கள், ஆரம்ப காலத்தில் இருந்தே உருவாவதால், அவை ஒரு நபரின் நல்வாழ்வுக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்த உதவுகின்றன. இருப்பினும், 1970-களில் உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, ஜப்பானில் தற்போது உள்ள ஆயுட்கால விகிதங்கள் போல இறப்பு விகிதங்கள் சராசரியாக உயர்ந்து காணப்பட்டதாக OECD அதன் அறிக்கையில் மேற்கோளிட்டு காட்டப்பட்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறை மன அழுத்தத்துக்கு வழிவகுக்குமா? ஆய்வில் தெரிவிக்கும் முக்கிய தகவல் என்ன?

அப்போது வாழ்ந்த ஜப்பானிய மக்களுக்கு பெருமூளை இறப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. இந்த நோய் உடலில் உள்ள ரத்தம் மூளைக்கு செல்லத் தவறுவதால் ஏற்படுகிறது. இருப்பினும், ஜப்பானில் புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அளவு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது. 1970 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில், நாட்டின் பெருமூளை இறப்பு விகிதத்தில் சரிவு ஏற்பட்டது. அதேபோல, இருதய சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பக்கவாதம் உள்ளிட்டவை ஜப்பானிய குடிமக்களிடையே குறைவாக காணப்பட்டது. இது தொடர்பான உலக புள்ளிவிவரங்களில் நாடு முதலிடம் வகித்தது.அப்போதிலிருந்தே, நீண்ட ஆயுளில் ஜப்பான் நாடு முதலிடம் பிடித்து வருகிறது. அதேபோல, மற்ற ஆய்வுகள் ஜப்பானியர்கள் தங்கள் வழக்கமான உணவுகளில் குறைவான இறைச்சி மற்றும் பால் பொருட்களை உட்கொள்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது. ஜப்பானில் கிட்டத்தட்ட 1,200 ஆண்டுகளாக இறைச்சி பெரிய அளவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதய நோய்களுடன் தொடர்புடைய நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் இறைச்சியில் இருப்பதால் இவை மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மக்கள் நம்புவதாக தெரிகிறது. ஆனால் இரத்த நாளச் சுவர்களுக்குத் தேவையான கொழுப்பை வழங்குவதால் மிகக் குறைந்த இறைச்சியை அந்நாட்டு மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

டோக்கியோவில் உள்ள உலக சுகாதார மற்றும் மருத்துவத்திற்கான தேசிய மையம் (National Centre for Global Health and Medicine) கடந்த 2016-ல் வெளியிட்ட ஒரு ஆய்வில், நாட்டின் உயர் ஆயுட்காலம் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் உணவு ஒரு முக்கிய காரணியாகும் என்று முடிவு செய்தது. 1995 முதல் 2009ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 80,000 ஆண்கள் மற்றும் பெண்களின் உணவு முறைகளை இந்த ஆய்வு கண்டறிந்தது. அப்போதைய ஜப்பானிய அரசாங்கம் வகுத்த உணவு வழிகாட்டுதல்களை நெருக்கமாக பின்பற்றியவர்கள் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் பால் பொருட்களை சாப்பிட்டவர்களை விட சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளனர் என்பதை கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்...
Published by:Sivaranjani E
First published: